Saturday, 3 August 2024

Mukti Gupteshwar Mandir

முக்தி குப்தேஷ்வர் ஆலய முகவரி: 203 Eagleview Rd, Minto NSW 2566

ஆலயம் திறக்கும் நேரம்:( 2024ம் ஆண்டில்)

Saturday 9:30 am–7 pm

Sunday 9:30 am–7 pm

Monday 9:30 am–12:30 pm, 5–7:30 pm

Tuesday 9:30 am–12:30 pm, 5–7:30 pm

Wednesday 9:30 am–12:30 pm, 5–7:30 pm

Thursday 9:30 am–12:30 pm, 5–7:30 pm

Friday 9:30 am–12:30 pm, 5–7:30 pm


தொலைபேசி இலக்கம்:(02) 9824 7886


 மின்ரோ சிவன் ஆலயத்திற்கு அடுத்த வளவிலே / அயலிலே அமைந்திருக்கிறது இந்த முக்தி குப்தேஷ்வர் என்ற இந்த இந்து ஆலயம். இந்த ஆலயம் பற்றிய சகல விபரங்களையும் கீழே உள்ள அவர்களது உத்தியோகபூர்வமான இணையத்தளத்திற்குச் சென்று அறிந்து கொள்ளலாம். அந்த இணையத்தளத்தின் முகவரி கீழே வருகிறது.

முக்தி குப்தேஷ்வர் ஆலய இணையத்தளம்

7.7.2024 அன்று இந்த ஆலயத்திற்குச் சென்ற போது எடுக்கப்பட்ட ஒரு சில படங்களை ஒரு ஆவண இருப்புக் கருதி இங்கு பதிவேற்றுகிறேன். ஆலயத்தினுள்ளே தெய்வ விக்கிரகங்களை படம் எடுப்பதற்கு அனுமதி இல்லாத காரணத்தால் உள்ளே உள்ள பல விடயங்களை இங்கு பதிவேற்ற முடியவில்லை.

இந்த ஆலயம் நேபாள இந்துக்களால் பரிபாலிக்கப் பட்டு வரும் ஒரு தனித்துவமான தத்துவார்த்த பின்னணியோடு  நிலத்தின் கீழ் அமைக்கப்பட்டிருக்கின்ற ஆலயம் ஆகும். இந்து தத்துவத்தின் ஆகம முறையில் அமைந்த தென்னிந்திய, இலங்கை இந்து ஆலய கட்டிட தத்துவார்த்த சிந்தனைகளில் இருந்து வேறுபட்ட அதே நேரம் இந்து தத்துவார்த்த சிந்தனையின் இன்னொரு பரிநாமத்தை எடுத்துரைத்த படி கம்பீரமாக நிலத்தின் கீழ் அமைக்கப்பட்டிருக்கின்ற இந்தக் கட்டிடம் நேபாள மன்னர் பரம்பரையினரால் நிதியுதவி அளிக்கப்பட்டு கட்டப்பட்டதாக சில விபரங்கள் கூறுகின்றன.

                                         

இந்து சமயத்தின் ஆழ அகலங்களை; அதன் விரிவுகளை; விசாலமான அதன் சிந்தனைகளின் விசாலங்களை; கடல் கடந்தும், கண்டங்கள் கடந்தும், எடுத்துச் சொல்லியபடி அமைந்து நிற்கும் இந்த ஆலயம் கட்டிட அமைப்பினாலும் தத்துவார்த்த கோட்பாடுகளினாலும்  இந்து சமயத்தின் தத்துவத்தினையும் மேன்மையையும் எடுத்துக் காட்டிக் கொண்டமைந்திருப்பது இதன் சிறப்பு.
































ஆலய முகப்பு

முன் வாசல்

வாசலில் இருந்து உட்புறமாக...



ஆலயத்தின் உள்ளே ஒரு புறமாக அமைந்திருக்கிற மேடை

ஆலயத்தின் உள்ளே இருந்து வெளிப்புறமாக தெரியும் தோற்றம்



அன்னை திரேசாவின் பொன்மொழி வைக்கப்பட்டிருக்கின்ற பீடம்

சுவர் அமைப்பு

கரும பீடம்


உள்ளே உள்ள வாசல் ஒன்று

பிரதான தெய்வம் (படம் எடுக்க அனுமதி இல்லாததால் பின்புறமாக எடுக்கப்பட்டது)










விளம்பரப் பலகையில் காணப்பட்ட தகவல்கள் சில







ஆலயத்தின் வலது புறமாக அமைந்துள்ள சாளரம். உள்ளே வேறு சில தெய்வங்கள் உள்ளன


கூரை அமைப்பு



முக்தி தேவி




இந்த வாசல்களின் உள்ளே வேறு சில தெய்வ விக்கிரகங்கள் உள்ளன



உள்ளிருந்து வெளியே செல்லும் வாசல் வழி



பாதணிகள் களற்றும் இடம்

வெளிப்புறம்





துளசிச் செடி

















சிறப்பாகப் பரிபாலிக்கப்படும் சுற்றாடல்

கீழே வர இருப்பவை வெளிப்புறமாக பிரதான வெளி வீதியில் இருந்து பார்க்கும் போது தெரியும் ஆலய முகப்பு.



பிரதான பாதையில் இருந்து ஆலயத்துக்குச் செல்லும் நடை பாதையும் வாகனம் உட்புகும் பாதையும்


புத்தரும் அரச மரமும் ஆலய வளவினுள்ளே





படப்பிடிப்பு: யசோதா.பத்மநாதன்.
காலம்:07.07.2024 குளிர்கால காலை வேளை