Sunday 16 August 2020

எல்லைப் பாதுகாப்பு பற்றிய அரச நிலைப்பாடு குறித்த பிரசுரம் - 30 - ( கொரோனாக் காலம்)

 அரச இணைப்பைக் காண இங்கே அழுத்தவும்

‘விசா’க்கள் மற்றும் எல்லைப் பாதுகாப்பு

பயணக் கட்டுப்பாடுகள்

ஆஸ்திரேலியப் பிரசையல்லாதவர்களும், ஆஸ்திரேலிய வாசி அல்லாதவர்களும் ஆஸ்திரேலியாவிற்குள் நுழைவதைத் தடுக்கும் பயணத் தடை ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

வாழ்க்கைத்துணைகள், சட்டப்படி வயதடையாத சார்ந்திருப்போர், சட்டரீதிப் பாதுகாவலர்கள் மற்றும் உடன் வசிக்கா வாழ்க்கைத் துணைகள் ஆகியோரை உள்ளடக்கும் ஆஸ்திரேலியப் பிரசைகளது நெருங்கியக் குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் நிரந்தர வதிவாளர்களுக்கு இந்தப் பயணத் தடையிலிருந்து விலக்கு உள்ளது. ஆஸ்திரேலியாவிற்குள் வந்த பிறகு, 14 நாட்களுக்கான நோய்த்தடுப்புத் தனிமையைப் பூரனப்படுத்துமாறு அனைத்துப் பயணிகளும் வேண்டப்படுவர்.

தற்காலிக விசாவில் இருப்பவர்களுக்கான தகவல்கள்

தமது தற்போதைய விசா முடிவுறும் திகதிக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து இருக்க விரும்புபவர்கள் மேலதிக விசா ஒன்றிற்காக விண்ணப்பிக்க வேண்டும். தமது சூழ் நிலைகளுக்கேற்ற புதிய விசா எது, மற்றும் அந்த விசாவிற்காகத் தாம் விண்ணப்பிக்க இயலுமா என்பதைத் தெரிந்துகொள்ள விசா தெரிவுகள் என்ன என்பதைத் தற்போது விசாவில் இருப்பவர்கள் ஆய்ந்து பார்க்கவேண்டும்.

பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் விசாக்களைப் பற்றிய மேலதிகத் தகவல்களுக்கு covid19.homeaffairs.gov.au எனும் வலைத்தளத்தினைப் பாருங்கள்.

குடும்ப வன்முறை குறித்த அரச நிலைப்பாடு குறித்த பிரசுரம் - 29 -( கொரோனாக் காலம் )

 அரச இணைப்பைக் காண இங்கே அழுத்தவும்

குடும்ப வன்முறை

வீட்டிற்கு வெளியே உள்ள கஷ்ட காலமானது வீட்டில் உள்ளவர்களுக்குக் கஷ்ட காலத்தைக் கொடுப்பதற்கு ஒரு காரணமாக ஆகிவிடக் கூடாது. நீங்களோ அல்லது உங்களுக்குத் தெரிந்த வேறொருவரோ குடும்ப வன்முறை அல்லது துஷ்ப்பிரயோகத்தினால் பாதிக்கப்பட்டால், இலவச மற்றும் இரகசிய அறிவுரை மற்றும் ஆதரவுதவியைப் பெற 1800 737 732-இல் 1800RESPECT -உடன் தொடர்புகொள்ளுங்கள். இச் சேவை பெண்களுக்கும் ஆண்களுக்கும் எந்த நேரத்திலும் கிடைக்கும். http://www.1800respect.org.au/ எனும் வலைத்தளத்தில் இணையவழியிலான ஆதரவும் உதவியும் கிடைக்கும்.

இன வெறிக்கெதிரான அரச கொள்கை குறித்த துண்டுப் பிரசுரம் - 28 - (கொரோனாக் காலம்)

 அரசாங்கத்தின் தகவல் இணைப்பைக் காண இங்கே அழுத்தவும்

னவெறி ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல

இனப் பாகுபாடு, இனரீதித் தொல்லைகள் அல்லது இன வெறுப்பினை நீங்கள் கண்ணுற்றால், அல்லது அவற்றிற்கு நீங்கள் ஆளானால், அதைப் பொறுத்துக்கொண்டிருக்காதீர்கள்; அதை எதிர்த்துக் குரல் எழுப்புங்கள்

இனவெறி நடத்தைக்கு நீங்கள் பலியாகிறீர்கள் என்றால்:

  • வன்முறைத் தனமாக நீங்கள் தாக்கப்பட்டால், அல்லது அச்சுறுத்தப்பட்டால், காவல்துறையினரை அழையுங்கள்.
    • அவசரமான அல்லது உயிருக்கு ஆபத்தான நிலையில் ‘மூன்று பூஜ்ய’ (000)-த்தை அழைத்துக் காவல்துறை வேண்டுமெனக் கேளுங்கள்.
    • காவல்துறையினரது உதவி உங்களுக்குத் தேவைப்பட்டால், ஆனால், உடனடி ஆபத்து ஏதும் இல்லையென்றால், ‘காவல்துறை உதவி இணைப்’(Police Assistance Line)ப்பினை அழையுங்கள் (131 444).
  • வன்முறை ஏதும் இடம்பெறவில்லை என்றால், மற்றும் இப்படிச் செய்வது பாதுகாப்பாக இருந்தால்,சம்பந்தப்பட்ட நபர் அல்லது நபர்களுடன் நேரடியாகப் பிரச்சினையைப் பற்றிப் பேசி சூழ்நிலையை நீங்களாகவே கையாளலாம்.
  • நேரடியான ஈடுபாட்டின் மூலமாகப் பிரச்சினைக்குத் தீர்வு காண இயலவில்லையேல், அல்லது இப்படிச் செய்வது உங்களுக்கு சௌகரியமாக இல்லாமலிருந்தால், ‘ஆஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணைய’(Australian Human Rights Commission (AHRC))த்திற்கு நீங்கள் முறைப்பாடு செய்யலாம்.
    • AHRC -க்கு முறைப்பாடு ஒன்றைச் சமர்ப்பிக்க www.humanrights.gov.au/complaints  எனும் வலைத்தலப் பக்கத்திற்குச் செல்லுங்கள், அல்லது AHRC -யின் ‘தேசிய தகவல் சேவை’ யை 1300 656 419 அல்லது 02 9284 9888 எனும் இலக்கத்தில் அழையுங்கள்.

அருகாமையில் இருப்பவர்களுக்குள்ள உரிமை

இனவெறியை நேரில் காண்பவர்கள் அதற்கு எதிராகக் குரல் கொடுத்தால், இலக்கு வைக்கப்படும் நபருக்குத் தமக்கு ஆதரவுதவி இருக்கிறது என்ற உணர்வு ஏற்படும், மற்றும் இனவெறித்தனமாக நடந்துகொள்ளும் நபருக்கு அவரது நடத்தையைப் பற்றி அவர் மீண்டும்  யோசிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். உங்களுக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய சூழலை ஏற்படுத்திக்கொள்ளாதீர்கள். ஆனாலும், இப்படிச் செய்வது பாதுகாப்பாக இருந்தால்,பாதிக்கப்படும் நபருக்காகக் குரல் கொடுத்து அவருக்கு ஆதரவாக அவர் பக்கம் நில்லுங்கள். நீங்கள் செய்யும் சாதாரணமான ஒரு உடல்ரீதியான சாடை கூட மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கக்கூடும்.

இனவெறித் தனமான நடத்தையை நீங்கள் கண்ணுற்றால், நீங்கள்:

  • அதற்கு எதிராகக் குரல் கொடுக்கலாம் – அதை இனவெறித்தனம் என்று வெளிப்படையாகச் சொல்லலாம், அது ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல என்பதை அந்தச் செயலைப் புரிபவருக்குத் தெரியுமாறு செய்யலாம்
  • இனவெறிக்கு ஆளாகும் நபருக்கு ஆதரவாக இருக்கலாம் – இலக்கு வைக்கப்படும் நபருக்கு அருகில் சென்று அவர் எப்படி இருக்கிறார் என்று கேட்கலாம்
  • ஆதாரங்களைக் குறித்துக்கொள்ளலாம் – அந்த நிகழ்வை உங்களுடைய தொலைபேசியில் பதிவு செய்யலாம்,இந்தச் செயலைப் புரிபவருடைய படம் ஒன்றை எடுக்கலாம் மற்றும் அதிகாரிகளுக்கு அதைத் தெரியப்படுத்தலாம்.

அருகாமையில் இருப்பவர்களுக்கான சில யோசனைக் குறிப்புகள் ‘ஆஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணைய’த்திடம் உள்ளன. https://itstopswithme.humanrights.gov.au/respond-racism எனும் வலைத்தளத்திற்குச் செல்லுங்கள்.

இனப் பாகுபாடும் உங்களுக்குள்ள உரிமைகளும்

இனம், நிறம், ஒரு நபர் அல்லது ஒரு குழுவினரது தேசியம் அல்லது இனப் பூர்வீகம் ஆகியவற்றின் அடிப்படையில் புண்படுத்தவும், அவமதிக்கவும், அவமானப்படுத்தவும் அல்லது அச்சுறுத்தவும் கூடிய காரியம் எதையும் பொது இடங்களில் செய்வது ஆஸ்திரேலியாவில் சட்ட விரோதமானது. இந்த மாதிரியான நடத்தைமுறைகள் ‘இன வெறுப்பு’என்று வகைப்படுத்தப்படுகிறது.

இன வெறுப்புச் செயல்களில் பின்வருவன உள்ளடங்கலாம்:

  • இணைய-மேடைகள் (eforums), ‘ப்ளோக்’குகள் (blogs), சமூகத் தொடர்புவலைத் தளங்கள் மற்றும் காணொளிப் பகிர்வுத் தளங்கள் ஆகியவற்றில் வெளியிடப்படும் இனத் தூசன விடயங்கள்
  • செய்தித்தாள், சஞ்சிகை அல்லது விளம்பரத்துண்டுகள்  போன்ற மற்ற வெளியீடுகளில் காணப்படும் இனத் தூசனமான கருத்துரைகள் அல்லது படங்கள்
  • பொதுக்கூட்டம் ஒன்றில் இடம்பெறும் இனத் தூசனப் பேச்சுகள்
  • கடை, வேலைத்தளம், பூங்கா, பொதுப் போகுவரத்து அல்லது பாடசாலை போன்ற பொது இடங்களில் ஏற்படுத்தப்படும் இனத் தூசனக் கருத்துரைகள்
  • விளையாட்டு வீரர்கள், பார்வையாளர்கள், பயிற்றுனர்கள் அல்லது அதிகாரிகளால் விளையாட்டு நிகழ்ச்சிகளில் ஏற்படுத்தப்படும் இனத் தூசனக் கருத்துரைகள்.

சுதந்திரமாகத் தொடர்பாடல் கொள்வதற்கான உரிமை (‘பேச்சுரிமை’ (freedom of speech’)) மற்றும் இன வெறிக்கு ஆளாகாமல் வாழ்வதற்கான உரிமை ஆகியவற்றிற்கிடையே சமநிலை ஒன்றை ஏற்படுத்துவதே சட்டத்தின் நோக்கம். “நியாயமான வகையிலும், நல்ல எண்ணத்திலும்” செய்யப்படும் சில செயல்கள் சட்ட விரோதமானதாக இல்லாமல் இருக்கலாம்.

ஒருவருடைய இனம், நிறம், மரபு, தேசிய அல்லது இனப் பூர்வீகம் அல்லது குடிவரவு நிலை ஆகியவற்றின் காரணமாக அவர் இன்னொரு நபரை விட அனுகூலம் குறைந்த விதத்தில் நடத்தப்படும்போது, உதாரனமாக, ஒருவர் குறிப்பிட்டதொரு இனத்தைச் சேர்ந்தவர் அல்லது நிறத்தவர் என்பதால் அவருக்கு வாடகைக்கு வீடு தர மறுக்கும்போது, இனப் பாகுபாடு நிகழ்கிறது.

அனைவருக்கும் பொதுவான ஒரு விதிமுறை அல்லது கொள்கையானது குறிப்பிட்ட ஒரு இனம், நிறம், மரபு, தேசிய அல்லது இனப் பூர்வீகம் அல்லது குடிவரவு நிலை ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் மீது நியாமற்ற விளைவு ஒன்றை ஏற்படுத்தும்போதும், உதாரணமாக, வேலை நேரத்தில் தொழிலாளர்கள் தொப்பி அல்லது தலைக்கட்டு ஆகியவற்றை அணியக்கூடாது என்று ஒரு நிறுவனம் சொல்லும்போது, இனப் பாகுபாடு நிகழ்கிறது.

இனப் பாகுபாடு அல்லது இன வெறுப்பிற்கு நீங்கள் ஆளானால், ‘ஆஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணைய’த்திடம் நீங்கள் முறைப்பாடு செய்யலாம்.முறைப்பாட்டைச் செய்யும் முறை எளிமையானதும், இலவசமானதும்,இலகுவானதுமாகும்.

‘ஆஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணைய’த்திடம் நீங்கள் முறைப்பாடு ஒன்றைச் சமர்ப்பிக்க www.humanrights.gov.au/complaints  எனும் வலைத்தளப் பக்கத்திற்குச் செல்லுங்கள்.

‘தேசிய தகவல் சேவை’(National Information Service)

‘ஆஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணைய’த்தின் ‘தேசிய தகவல் சேவை’யானது பல விதமான மனித உரிமைகள் மற்றும் பாகுபாட்டுப் பிரச்சினைகளைப் பற்றியத் தகவல்களையும், தனிநபர்கள், அமைப்புகள், மற்றும் வேலை தரும் முதலாளிகள் ஆகியோருக்கான பரிந்துரைகளையும் அளிக்கிறது. இச்சேவை இலவசமானதும் இரகசியமானதுமாகும்.

‘தேசிய தகவல் சேவை’(NIS)-யினால் இயலுமானவை:

  • கூட்டரசின் கீழான மனித உரிமைகள் மற்றும் பாகுபாட்டு எதிர்ப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் உங்களுக்குள்ள உரிமைகள் மற்றும் பொறுப்புகள் ஆகியவற்றைப் பற்றிய தகவல்களை உங்களுக்குத் தரல்
  • ‘ஆணைய’த்திற்கு உங்களால் முறைப்பாடு செய்ய இயலுமா அல்லது உங்கள் சூழ்நிலைக்குச் சட்டம் எப்படிப் பொருந்திவரக்கூடும் என்பதப் பற்றிக் கலந்துரையாடல்
  • முறைப்பாடு ஒன்றினை எப்படிச் செய்வது, முறைப்பாடு ஒன்றிக்கு எப்படி மறுமொழி அளிப்பது அல்லது குறிப்பிட்டப் பாகுபாட்டுப் பிரச்சினைகளை எப்படிக் கையாளுவது என்பதைப் பற்றியத் தகவல்களைத் தரல்
  • உங்களுக்கு உதவ இயலுமாகக்கூடிய வேறொரு அமைப்பிற்கு உங்களைப் பரிந்துரைத்தல்

NIS -இனால் சட்ட ஆலோசனை வழங்க இயலாது என்பதைத் தயவுசெய்து கவனத்தில் கொள்க.

NIS -உடன் நீங்கள் பின்வரும் வழிகளில் தொடர்புகொள்ளலாம்:

மொழிபெயர்ப்பு மற்றும் மொழிபெயர்த்துரைப்பு சேவை

‘மொழிபெயர்ப்பு மற்றும் மொழிபெயர்த்துரைப்பு சேவை’ ((TIS National)) என்பது ஆங்கிலம் பேசாதோருக்கான மொழிபெயர்த்துரைப்பு சேவையாகும். பெரும்பான்மையான ‘TIS நேஷனல்’ சேவைகள் ஆங்கிலம் பேசாதவர்களுக்கு இலவசமாகும்.

அறிவுரையாலோசணை மற்றும் மன நலம்

‘கோவிட்-19’ பெருந்தொற்றுக் காலம் நெடுக மக்களுக்கு உதவுவதற்காகக் குறிப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு புதிய 24/7 ஆதரவுதவி சேவை அனைத்து ஆஸ்திரேலியர்களுக்கும் இலவசமாகக் கிடைக்கிறது. 

https://coronavirus.beyondblue.org.au/ எனும் வலைத்தளம் மூலமாக இந்த ஆதரவுதவி சேவையைப் பெறலாம்.

தனிநபர் நெருக்கடி நிலை மறும் மனநல ஆதரவுதவி சேவைகளுக்கு 1800 512 348-இல் ‘பியாண்ட் ப்ளூ’ (Beyond Blue)-வை அல்லது  13 11 14-இல் ‘உயிர்காப்பு இணைப்’(Lifeline)பினை நீங்கள் எச்சமயத்திலும் அழைக்கலாம். 

‘இளையோர் உதவி இணைப்பு’ (Kids Helpline) என்பது 5 முதல் 25 வயது வரையுள்ள இளம் வயதினருக்கான இலவச சேவையாகும். சிறார்கள், பதின்ம-வயதினர் (teens) மற்றும் வயதுவந்த இளைஞர்கள் 1800 551 800-ஐ எச்சமயத்திலும் அழைக்கலாம்.

குடியமர்வு சேவைகள் குறித்த அரச பிரசுரம் - 27 - (கொரோனாக் காலம்)

 அரசாங்க தகவல் இணைப்பைக் காண இங்கே அழுத்தவும்

குடியமரல் சேவைகள்

கொரோனா வைரஸ் குறித்த அரச தமிழ் துண்டுப்பிரசுரங்கள் - 26 -

 அரசாங்க இணைப்பைக் காண இங்கே அழுத்தவும்

‘கொரோனா வைரஸ் (கோவிட்-19)’-ஐப் பற்றிய தவறான தகவல்கள் மற்றும் உண்மைகள்

தவறு: நோயெதிர்ப்பு மருந்துகள் அல்லது மலேரியா எதிர்ப்பு மருந்துகளைக் கொண்டு ‘கொரோனா வைரஸ்’-இற்குச் சிகிச்சை அளிக்கலாம்

உண்மை: ‘கொரோனா வைரஸ்’-இற்கான தடுப்பூசி அல்லது சிகிச்சை ஏதும் இதுவரை இல்லை.

இந்த வைரஸ்-இற்கான தடுப்பூசி ஒன்றைக் கண்டுபிடிக்க உலகெங்கும் உள்ள ஆய்வாளர்கள் கடும் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர், ஆனால் இதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பது நமக்குத் தெரியாது. 12 முதல் 18 மாதங்கள் வரை ஆகலாம் என்று கணிப்பீடுகள் கூறுகின்றன.

மூட்டு நோவு மருந்துகள், மலேரியா எதிர்ப்பு மருந்துகள் மற்றும் இதர மருந்துகள் உட்பட, ‘கொரோனா வைரஸ்’ நோய்க்குச் சிகிச்சையளிக்க உதவக்கூடிய வெவ்வேறு மருந்துகளின் பயன்பாட்டைப் பற்றி ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்துவருகிறார்கள். இந்த மருந்துகள் ‘கொரோனா வைரஸ்’ நோயைக் குணப்படுத்தாது, ஆனால், இந்த வைரஸ் தொற்று ஏற்படுபவர்களது எண்ணிக்கையையும், நோயின் தீவிரத்தையும் இவை குறைக்கக்கூடும்.

ஆகவே, தடுப்பூசிக்காகவோ, ‘கொரோனா வைரஸ்’ நோய்க்கான சிகிச்சைக்காகவோ வெறுமனே காத்துக்கொண்டு இருக்கக்கூடாது என்பது முக்கியம் - இதனால்தான் பொது சுகாதாரம் குறித்த இத்தனை நடவடிக்கைகளை ஆஸ்திரேலியா மேற்கொண்டுள்ளது.

தவறு:‘கொரோனா வைரஸ்’-ஐ அதிவேகத்தில் பரப்புபவர்கள் குழந்தைகளே

உண்மை: பொதுவாக, நோய்க்கிருமிகளை அதிகம் பரப்புவர்கள் குழந்தைகள் என்று அறியப்படுகிறார்கள், சளி-சுரத்தைப் பொறுத்தவரை இது உண்மையாக இருக்கலாம், ‘கொரோனா வைரஸ்’-ஐப் பொறுத்தவரை அப்படித் தெரியவில்லை. குறைந்தபட்சமாக, இச் சமயம் வரை அப்படித் தெரியவில்லை. குழந்தைகள் மூலமாகத்தான் இந்த வைரஸ் பெருமளவில் பரவியுள்ளது என்பதைக் காண்பிக்கும் ஆதாரங்கள் உலகில் எங்கும் கிடையாது. இப்படி அறவே கிடையாது என்று நாம் அறுதியிட்டுச் சொல்லவில்லை. இது சாத்தியம். ஆனால், குழந்தைகள் ‘கொரோனா வைரஸ்’-ஐ அதிவேகத்தில் பரப்புபவர்கள் என்று இப்போது உள்ள ஆதாரங்கள் காண்பிக்கவில்லை.

தவறு: போதுமான மருத்துவ உபகரணங்களையும் பொருட்களையும் (செயற்கை சுவாசக் கருவிகள் (ventilators, முகக்கவசங்கள், சோதனைக் கருவிகள்) ஆஸ்திரேலியா-வினால் பெற இயலாது

உண்மை: நோயாளிகளுக்கும், குறிப்பாக, அவர்களைப் பராமரிக்கும் சுகாதாரப் பணியாளர்களுக்கும் நாங்கள் சொல்லும் ஒரே வார்த்தை - ‘ஆம்’ என்பதே. இந்தப் பெருநோயை எதிர்ப்பதற்குப் போதுமான மருத்துவ உபகரணங்கள் ஆஸ்திரேலியாவிடம் உள்ளன. இருப்பினும், கிடைப்பையும் தாண்டிய உலகளாவிய தேவை மற்றும் உற்பத்தித் திறன் ஆகிய காரணங்களை முன்னிட்டு நோய்ச் சோதனைக்குத் தேவைப்படும் அனைத்துப் பொருட்களையும் பொருத்தவரை ஒரு நெருக்கம் தற்போது இருக்கிறது.

தனிநபர் பாதுகாப்பு சாதனங்கள் தொடர்ந்து நமக்கு வந்துகொண்டே இருக்கின்றன என்பதில் பணியாளர்கள் உறுதியான நம்பிக்கை வைக்கலாம், மற்றும் நோயாளிகள் இயலுமான சிறந்த பராமரிப்பைப் பெறுவார்கள் என்பதை இது குறிக்கும். உதாரணத்திற்கு, ‘தேசிய மருத்துவப் பொருள் கிடங்’(National Medical Stockpile)கில் 10 மில்லியன் (1 கோடி)- க்கும் மேற்பட்ட முகக்கவசங்கள் உள்ளன. இந்தப் பெருநோய் பரவும் சமயத்தில் ‘தேசிய மருத்துவப் பொருள் கிடங்கு’ நன்கு நிரம்பியுள்ளதையும், நமது மருத்துவத் தொழிலர்களுக்குத் தேவைப்படும் பாதுகாப்பு சாதனங்கள் ஆஸ்திரேலியாவிடம் போதுமான அளவிற்கு இருப்பதையும் உறுதிப்படுத்த கூடுதல் முகக்கவசங்களைப் பெறுவதற்கு ஆஸ்திரேலியா செயல்பட்டுவருகிறது. உள்நாட்டு உற்பத்தித் திறனை அதிகரிப்பது இதில் உள்ளடங்கும்.

ஆஸ்திரேலியாவில் செயற்கை சுவாச சாதன வசதி கொண்ட மருத்துவமனைப் படுக்கைகள் 2,200 இருக்கும். கடந்த ஆறு வாரங்களில், மயக்கமருந்து இயந்திரங்களையும், மற்ற உபகரணங்களையும் வேறு காரணங்களுக்காகப் பிரயோகிப்பதன் மூலம் இப்போது நம்மிடம் 4,400 செயற்கை சுவாச சாதன வசதி கொண்ட மருத்துவமனைப் படுக்கைகள் உள்ளன, மற்றும் இதை 7,500 ஆக அதிகரிக்க நாம் திட்டமிட்டு வருகிறோம். ஏப்ரல் மாதத் துவக்கத்தில், செயற்கை சுவாச சாதன வசதி தேவையுள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் ‘கொரோனா வைரஸ்’ நோயாளிகளின் எண்ணிக்கை 20 ஆக இருந்தது.

அவசியப்படும் சோதனைகள் மட்டுமே செய்யப்படுவதை உறுதி செய்யும்பொருட்டு, நோய்ச் சோதனைத் தேவைப்பாட்டு வழிகாட்டல்களை மீள்மதிப்பீடு செய்வதற்காக ‘ஆஸ்திரேலியத் தொற்று நோய்த் தொடர்புவலை’ (Communicable Diseases Network Australia) தினசரி சந்திப்புகளை மேற்கொண்டுவருகிறது. 

தவறு: ‘கொரோனா வைரஸ்’ காரணமாக அதிகரித்துவரும் தேவைகளை ஆஸ்திரேலிய மருத்துவமனைகளால் சமாளிக்க இயலாது.

உண்மை: ‘கொரோனா வைரஸ்’-இற்கு எதிரான போரில் ஆஸ்திரேலிய அரசாங்க மருத்துவமனைகளும், தனியார் மருத்துவமனைகளும் கூட்டாக ஒன்று சேர்ந்துள்ளன. ‘கொரோனா வைரஸ்’-ஐ எதிர்க்க உதவுவதற்கு 34,000 மருத்துவமனைப் படுக்கைகளையும், 105,000 மருத்துவ ஊழியர்களையும் தேசிய அளவில் ஏற்பாடு செய்து கொடுப்பதற்காக வரலாறு காணாத ஒத்துழைப்பு ஒன்றில் ஆஸ்திரேலிய அரசாங்கமும், மாநில, எல்லைப்பகுதி அரசாங்கங்களும், தனியார் மருத்துவத் துறையும் ஒன்றாக இணைகின்றன.

அரசாங்க மருத்துவத் துறைக்கு உதவுவதற்காக, தனது மருத்துவ உபகரணங்கள், படுக்கைகள், பொருட்கள் மற்றும் பணியாளர்களை அளிப்பதன் மூலம் தனியார் மருத்துவத் துறையானது தனது மருத்துவ சேவைகளை அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு அளிக்கும். 

‘தேசிய உடலியலாமைக் காப்பீட்டுத் திட்ட’(National Disability Insurance Scheme)த்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் உள்ள நீண்டகால நோயாளிகள், முதியோர் பராமரிப்பு நோயாளிகள் மற்றும் பொதுவான தேவைகள் உள்ள நோயாளிகள் ஆகியோரது தேவைகளுக்கும் இவை தொடர்ந்து ஆரரவுதவியாக இருந்துவரும்.    

இந்தப் பெருநோய் நீடிக்கும் காலத்தில் தேவைகளுக்கேற்ப நோயாளிகளுக்குச் சிகிச்சையளிப்பதற்கு ஆஸ்திரேலியாவின் உலகத் தரம் வாய்ந்த சுகாதார முறைமைகளின் மூலவளங்கள் தயாராகவும் முழு நோக்கோடும் இருப்பதனை இந்தக் கூட்டு ஒத்துழைப்பு உறுதி செய்யும்.

தவறு: இரண்டு வார காலத் தடைஉத்தரவு ‘கொரோனா வைரஸ்’- இன் பரவலை நிறுத்திவிடும்.

உண்மை: இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குக் கட்டுப்பாடுகளை விதித்து, பிறகு அவற்றை நீக்கி சாதாரண வாழ்க்கைக்குத் திரும்புவது ‘கொரோனா வைரஸ்’- இன் பரவலை நிறுத்தாது.

இரண்டு வார காலத்திற்கு மட்டுமான தடைஉத்தரவு என்பது, ‘கொரோனா வைரஸ்’- இன் கோரத் தாண்டவம் அநேகமாக முன்பு இருந்ததைவிட அதிதீவிரத் தாக்குதலுடன் மீண்டும் தலை தூக்கும் என்பதைக் குறிக்கும்.

மற்ற நாடுகள் செய்துள்ளதை போல ‘முழு அடைப்பு’ (blanket lockdown) ஒன்றை நாம் ஏன் விதிக்கவில்லை என்று சிலர் கேட்டுள்ளனர். இத்தாலி, ஸ்பெயின் மற்றும் இரான் போன்ற நாடுகள் மற்றும், இந்த நோய் வெடிப்புத் தோன்றிய சீனாவிலுள்ள வுஹான் போன்ற நகரங்கள் ஆகியவற்றை விட இந்த விடயத்தில் நாம் அதி துரிதமாக செயல்பட்டிருக்கிறோம் என்பது இதற்கான பதில் ஆகும்.

நடந்துகொண்டிருப்பது என்ன என்று இந்த நாட்டிலுள்ள சுகாதார வல்லுநர்கள் உணரும் வேளையில் ‘கொரோனா வைரஸ்’ ஏற்கனவே கட்டுப்பாடின்றியும், காட்டுத் தீ போலவும் பரவிக்கொண்டிருந்தது. இந்த நோயால் தீவிரமாய்ப் பாதிக்காப்பட்டிருந்தவர்களைச் சமாளிக்க இயலாமல் இந்த நாடுகளிலுள்ள மருத்துவமனைகள் திணறியதற்கு இதுவே காரணம்.

ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு நாளும் புதிதாகப் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையையும் நோய்ப்பரவல் எங்கு ஏற்படுகின்றன என்பதையும் நமது சுகாதார வல்லுநர்கள் ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகின்றனர். புதிய விதிமுறைகள் அல்லது கட்டுப்பாடுகளை எதையும் ஏற்படுத்தத் தேவைப்படும் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு பிறகு அவர்கள் பரிந்துரைகளை ஏற்படுத்துவார்கள். www.australia.gov.au எனும் வலைத்தளத்திற்குச் சென்று நடப்புநாளில் உள்ளக் கட்டுப்பாடுகள் யாவை என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். 

தவறு: ஒவ்வொருவரையும் சோதிப்பது ‘கொரோனா வைரஸ்’-இன் பரவலை நிறுத்திவிடும்

உண்மை: ஒவ்வொருவரையும் சோதிப்பது ‘கொரோனா வைரஸ்’-இன் பரவலை நிறுத்தாது

எந்த ஒரு வைரஸ்-ஐயும் போல, ‘கோவிட்-19’ ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவுகிறது. அனைத்துவேளைகளிலும் சமூகரீதியாக விலகியிருப்பது, மற்றும் நீங்கள் சுகவீனமுற்றிருந்தால் வீட்டிற்குள் உங்களைத் தனிமைப்படுத்திக்கொள்வது ஆகியவற்றால் மட்டுமே இந்த வைரஸ்-இன் பரவலை நிறுத்த இயலும்.

அறிகுறிகள் உள்ள ஒருவருக்கு ‘கோவிட்-19’ இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்துவதற்கான சோதனையை மேற்கொள்வது இந்த நோய் பரவுவதைக் கண்டுபிடிக்கவும் பரவலைக் கட்டுப்படுத்தவும் நமக்கு உதவும். இந்த நோய் ஒருவருக்கு இருக்கிறது என்று தெரிந்தால், அந்த நபர் தம்மைத் தனிமைப்படுத்திக்கொள்ளலாம், மற்றும் அவர் யாரோடு தொடர்பில் இருந்தார் என்பதைக் கண்டுபிடித்து இந்த நோய் மேற்கொண்டு பரவுவதற்கான ஆபத்தை நாம் குறைக்கலாம். 

இருப்பினும், ‘கோவிட்-19’ உங்களுக்கு இல்லை என்று சோதனையில் தெரியவந்தால், இது ஏற்படுவதற்கான ஆபத்து உங்களுக்கு இல்லை அல்லது உங்களால் மற்றவர்களுக்கு ஆபத்து இல்லை என்ற அர்த்தம் அல்ல. ‘கோவிட்-19’-ஐ நீங்கள் எதிர்கொண்ட பிறகு, ஆனால் நோயறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பு, உங்களுக்குக்‘கோவிட்-19’ இல்லை என்று சோதனை முடிவுகள் சொல்லலாம். ‘கோவிட்-19’ உங்களுக்கு இல்லை என்று சோதனை முடிவுகள் கூறிய அடுத்த நாளே ‘கோவிட்-19’ தொற்று உங்களுக்கு ஏற்படலாம். நல்ல சுகாதாரப் பழக்கங்களையும், சமூக விலகலையும் நீங்கள் பின்பற்ற வேண்டியது மிக முக்கியம் என்பதற்கும், அத்தியாவசியத் தேவைகளைத் தவிர நீங்கள் வீட்டில் இருக்கவேண்டும் என்பதற்கும் இதுவே காரணம். ‘கோவிட்-19’-இன் பரவலை மட்டும் அல்லாமல் மற்ற நோய்களின் பரவலைத் தடுக்கவும், நமது சுகாதார சேவைகளின் மீது ஏற்படும் அழுத்தத்தினைக் குறைக்கவும் இது உதவும்.

தவறு: சோதனை உபகரணங்கள் துல்லியமானவை அல்ல

உண்மை: மிகவும் துல்லியமான ‘நியூக்ளியிக் அமில உருப்பெருக்கம் (போலிமெரேஸ் தொடர் வினை (PCR)’ (nucleic acid amplification (Polymerase chain reaction (PCR)) எனும் முறையைத் தற்போதைய ‘கோவிட்-19’ சோதனை பயன்படுத்துகிறது. இந்தச் சோதனையின்போது, சுகாதாரத் தொழிலர் ஒருவர் ஒரு நபருடைய தொண்டை மற்றும் நாசியில் இருந்து சிறிது ‘மாதிரி’(specimen)யை ஒத்தி எடுப்பார். தற்போது அனைத்து சோதனைக் கருவிப் பாகங்களும் பெரும்பான்மையாக ஐரோப்பா மற்றும் ஆசியாவில் தயாரிக்கப்படுகின்றன. மாநிலங்கள் மற்றும் எல்லைப்பகுதிகளிலும் அவற்றிற்கு இடையேயும் உள்ள பல சோதனைக் கருவிப் பாகங்களை வழங்குவோரும் ஆய்வுக்கூடங்களும் வெவ்வேறு பாகங்களைப் பயன்படுத்தும் அதே வேளையில் ஒரே மாதிரியான சோதனை முறைகளை அவர்கள் பின்பற்றுகிறார்கள் என்பது முக்கியமான விடயமாகும். வழங்கு-திறன் மற்றும் உற்பத்தித் திறனையும் பேரளவு தாண்டிய உலகளாவிய தேவை இருப்பதால் சோதனை சம்பந்தப்பட்ட அனைத்துப் பொருட்களுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ‘சிகிச்சைத் தள நோயெதிர்ப்பி சோதனைகள்’ (point of care antibody tests) துல்லியமானவை அல்ல, ஆகவே, நோயறிவுக் காரணங்களுக்காக அவை பரிந்துரைக்கப்படுவதில்லை.

‘கொரோனா வைரஸ்’ சோதனைகளை மேற்கொள்வதற்கான வல்லமையையும் திறனையும் ஆஸ்திரேலியா கொண்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் தேவைப்படும் பொருட்களைப் பெறவும், இதற்கான மாற்றுவழிகளை ஆராயவும் ‘பொது சுகாதார ஆய்வுக்கூடத் தொடர்புவலை’ (Public Health Laboratory Network) மற்றும் வழங்குநர்களுடன் ஆஸ்திரேலிய அரசாங்கம் நெருக்கமாகச் செயலாற்றிவருகிறது.

‘கோவிட்-19’-இற்கு எதிரான ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் முக்கிய நடவடிக்கைகளைப் பற்றித் தொடர்ந்து தெரிந்துகொள்ள இந்த வலைத்தளத்தினைத் தவறாமல் பார்த்துவாருங்கள்.

‘கோவிட்-19’-ஐப் பற்றி உங்கள் மொழியில் உள்ள பலவகைப்பட்டத் தகவல்கள் SBS-இடமும் உள்ளன. அரசாங்கத் தகவல்களை மொழிபெயர்க்க ‘மொபைல் தொலைபேசிப் பயன்பாடுக’( mobile phone apps)ளையும் ‘வலைத்தேடல் நீட்டிப்புக’(browser extensions)ளையும் நீங்கள் பாவிக்கலாம். உங்களுடைய தேவைக்கு ஏற்றது எது என்பதற்கான தேடலை மேற்கொள்ளுங்கள்.

ஆங்கிலத்திலுள்ள மேலதிகத் தகவல்களைப் பெற www.australia.gov.au எனும் வலைத்தளத்திற்குச் செல்லுங்கள்.

கொரோனா வைரஸ் குறித்த அரச தமிழ் துண்டுப்பிரசுரங்கள் - 25 -

 அரசாங்க இணைப்பைக் காண இங்கே அழுத்தவும்

சமூகப் பாதுகாப்பு மற்றும் குடியமரல் சேவைகள்

COVID-19 வெடிப்பின் போது எங்கள் சமூகத்தை பாதுகாப்பாக வைத்திருக்க தகவல்.

கொரோனா வைரஸ் குறித்த அரச தமிழ் துண்டுப்பிரசுரங்கள் - 24 -

 அரச இணைப்பைக் காண இங்கே அழுத்தவும்

வேலைச் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு

‘பணியிடச் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு’ சட்டங்களின் கீழ் உள்ள தமது கடமைகளையும், ‘கோவிட்-19’- இனால் ஏற்படும் ஆபத்துக்களை எப்படிக் கட்டுப்படுதுவது  என்பதையும் விளங்கிக்கொள்ள வர்த்தகங்களுக்கும் தனிநபர்களுக்கும் உதவுவதற்கான வழிகாட்டல்களை ‘ஆஸ்திரேலியப் பணியிடப் பாதுகாப்பு அமைப்பு’ (Safe Work Australia) உருவாக்கியுள்ளது.

மேலதிகத் தகவல்களுக்கு  swa.gov.au/coronavirus எனும் வலைத்தளப் பக்கத்திற்குச் செல்லுங்கள்.

உண்மைத் தாள்கள்

கொரோனா வைரஸ் குறித்த அரச தமிழ் துண்டுப்பிரசுரங்கள் - 23 -

 அரச இணைப்பினைக் காண இங்கே அழுத்தவும்

தனிநபர் மற்றும் குடும்பங்கள்

ஓய்வு நிதியான 'சூப்பர்' - இல் இருந்து முன்கூட்டியே பணம் எடுத்தல்

தகுதி பெறும் தனிநபர்கள் இணைய வழியில் ‘myGov’ வாயிலாக 1 ஜூலை 2020 வரை தமது ‘ஓய்வுகால நிதி’(superannuation)யில் இருந்து 10,000 டாலர்கள் வரைக்கும்  பெறுவதற்காக செப்டம்பர் 24 2020-இற்கு முன்பாக விண்ணப்பிக்க இயலும்.

உங்களுடைய ‘சூப்பர்’-இல் இருந்து பணத்தை முன்கூட்டியே எடுப்பதன் காரணமாக உங்களுடைய ‘சூப்பர்’ பாக்கித் தொகையில் பாதிப்பு ஏற்படும், மற்றும் உங்களுடைய எதிர்கால ஓய்விற்கான வருமானம் பாதிக்கப்படக்கூடும். ‘சூப்பர்’-இல் இருந்து முன்கூட்டியே பணத்தை எடுப்பதற்கு முன்பாக நிதியாலோசனையை நாடுவதைக் கருத்தில் கொள்ளுங்கள்.

‘சூப்பர்’-இல் இருந்து முன்கூட்டியே பணத்தை எடுப்பதைப் பற்றிய மேலதிகத் தகவல்களை www.ato.gov.au/early-accessஎனும் வலைத்தளப் பக்கத்தில் காணுங்கள், அல்லது ATO -உடன் நீங்கள் உங்கள் மொழியில் பேச விரும்பினால், 13 14 50 -இல் ‘மொழிபெயர்ப்பு மற்றும் மொழிபெயர்த்துரைப்பு சேவை’(Translating and Interpreting Service (TIS National)-யை அழையுங்கள்.

வாடகைதாரர் வெளியேற்றல்கள் இருக்காது

அனைத்து மாநில மற்றும் எல்லைப்பகுதி அரசுகளாலும் வாடகைதாரர்கள் வெளியேற்றப்படுவது ஆறு மாதங்களுக்கு நிறுத்திவைக்கப்படும். குறுகியகால ஒப்பந்தங்களைப் பற்றிப் பேசுமாறு வீட்டு உரிமையாளர்களும் வாடகைதாரர்களும் ஊக்குவிக்கப்படுகின்றனர். மேலதிகத் தகவல்களுக்கு உங்களுடைய மாநில மற்றும் எல்லைப்பகுதி அரசுடன் தொடர்புகொள்ளுங்கள்.

ஓய்வு பெற்றவர்களுக்கானக் குறைந்தபட்ச ‘பணம்-எடுப்பு’ (drawdown) வீதம் குறித்த தெரிவுகள்

‘கோவிட்-19’ பெருந்தொற்றின் காரணமாக நிதிச் சந்தைகளில் ஏற்பட்ட கணிசமான இழப்புகளை மிதப்படுத்துவதில் உதவுவதற்காக 2019-20 மற்றும் 2020-21 நிதி ஆண்டுகளுக்காக, ‘சூப்பர்’-இல் இருந்து உருட்டப்பட்டப் பணம் உள்ள கணக்குகளை அடிப்படையாகக் கொண்ட ஓய்வூதியங்கள் மற்றும்  இது போன்ற மற்ற திட்டங்கள் ஆகியவற்றிலிருந்து பணம் எடுப்பதற்கானக் குறைந்தபட்சத் தேவைகள் 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளன.

மேலதிகத் தகவல்களுக்கு www.ato.gov.au/drawdown எனும் வலைத்தளப் பக்கத்திற்குச் செல்லுங்கள்.

‘ஜாப்-கீப்பர்’ கொடுப்பனவு

அதியளவு ஆஸ்திரேலியர்கள் தமது வேலைகளைத் தக்கவைத்துக்கொண்டு வருமானம் ஒன்றை ஈட்டும் விதத்தில், ‘கோவிட்-19’-இனால் கணிசமான அளவிற்குப் பாதிக்கப்பட்டுள்ள வர்த்தகங்களுக்கு அவர்களுடைய தொழிலாளர்களின் சம்பளச் செலவுகளில் ‘ஜாப்-கீப்பர்’ கொடுப்பனவு உதவுகிறது.

இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை கொடுக்கப்படும் ‘ஜாப்-கீப்பர்’ கொடுப்பனவு உதவித்தொகைக்காக உங்கள் சார்பாக கோரிக்கை விடுக்க உங்களுடைய முதலாளி உத்தேசித்தால், அதை அவர் உங்களுக்கு அறிவிப்பார்.

மேலதிகத் தகவல்களுக்கு www.ato.gov.au/jobkeeper எனும் வலைத்தலத்திற்குச் செல்லுங்கள்.

அரச முறைமையைப் பாதுகாப்பானதாகவும் நியாமானதாவும் வைத்திருத்தல்

ஆஸ்திரேலியர்களை இலக்கு வைக்கும் ‘கோவிட்-19’ மோசடிகள் மற்றும் இதர மோசடிகளில் கணிசமான உயர்வு ஏற்பட்டுள்ளது. மோசடி நபர் ஒருவரால் நீங்கள் தொடர்புகொள்ளப்பட்டிருந்தாலோ, மின்னஞ்சல், குறுஞ்செய்தி அல்லது தொலைபேசி அழைப்பு ஒன்றைப் பற்றி உங்களுக்கு சந்தேகமாக இருந்தாலோ, அதைப் பற்றி எம்முடன் முதலில் சோதித்துக்கொள்ளுங்கள்.

ATO உங்களுடன் கொள்ளும் தொடர்பாடல் உண்மையானதுதானா என்பது உங்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை என்றால், அதற்குப் பதில் அளிக்காதீர்கள். 1800 008 540-இல் ‘ATO மோசடி அவசர அழைப்’(ATO Scam Hotline)பினை அழையுங்கள், அல்லது www.ato.gov.au/scams எனும் வலைத்தலப் பக்கத்திற்குச் செல்லுங்கள்.

உங்களுடைய அடையாளத்தினை யாரோ ஒருவர் களவாடியிருக்கிறார் அல்லது துஷ்ப்பிரயோகித்திருக்கிறார் என்று நீங்கள் நினைத்தால், எம்மால் உதவ இயலும். வரி செலுத்துவோர் அவர்களது வரி சம்பந்தப்பட்ட அடையாளங்களை மீண்டும் நிறுவிக்கொள்ளத் தேவைப்படும் தகவல்கள், அறிவுரை மற்றும் ஒத்தாசைகளை நாங்கள் அளிக்கிறோம். 

ஒரு தனிநபரோ அல்லது வர்த்தகமோ செய்யும் காரியம் சரியல்ல என்று என்று உங்களுக்குத் தோன்றினால் www.ato.gov.au/tipoff எனும் வலைத்தலப் பக்கத்தின் வாயிலாக அதை நீங்கள் எமக்குத் தெரிவிக்கலாம்.

அரசாங்கக் கொடுப்பனவுகளும் சேவைகளும்

நீங்கள் ஏற்கனவே ‘செண்ட்டர்லிங்க்’ கொடுப்பனவு ஒன்றைப் பெற்றுவராவிட்டால், ‘சர்வீஸஸ் ஆஸ்திரேலியா’வினால் பண ரீரியாக உங்களுக்கு உதவ இயலும். சேவை மையம் ஒன்றிற்கு நீங்கள் செல்ல வேண்டிய தேவை இல்லை. எமது சுய-சேவைத் தெரிவுகளை நீங்கள் பயன்படுத்தலாம். சமூக சேவகர் ஒருவரையும் நீங்கள் பெறலாம். நீங்கள் ஏற்கனவே ஒரு சேவைபெறுநராக இருந்தால், ‘கொரோனா வைரஸ் (கோவிட்-19)’ காரணமாக எமது கொடுப்பனவுகளிலும் சேவைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.  பல மொழிகளில் கிடைக்கும் மேலதிகத் தகவல்களுக்கு servicesaustralia.gov.au/covid19 எனும் வலைத்தலப் பக்கத்திற்குச் செல்லுங்கள்.

கொரோனா வைரஸ் குறித்த அரச தமிழ் துண்டுப்பிரசுரங்கள் - 22 -

 அரசாங்க இணைப்பினைக் காண இங்கே அழுத்தவும்

வர்த்தகங்கள்

‘ஜாப்-கீப்பர்’  உதவித்தொகை நீட்டிப்பு

துவக்கத்தில் செப்டம்பர் 27 2020 வரைக்கும் செயல்படுவதாக இருந்த ‘ஜாப்-கீப்பர்’  உதவித்தொகைக் கொடுப்பனவானது தகுதி பெறும் வர்த்தகங்களுக்கும் (சுய-தொழிலர்கள் உள்ளடங்க), இலாப நோக்கற்ற வர்த்தகங்களுக்கும் 28 மார்ச் 2021 வரை நீடிக்கும்.

வரவிருக்கும் மாற்றங்களைப் பற்றிய சாராம்சத்திற்குத் தயவுசெய்து ‘ஜாப்-கீப்பர்’ உதவித்தொகை நீட்டிப்பு குறித்த சாராம்சம் – செப்டம்பர் 28 2020 எனும் தகவல் ஏட்டினைப் பாருங்கள். 

‘ஜாப்-கீப்பர்’ கொடுப்பனவு

கொடுப்பனவு’ திட்டமானது ‘கொரோனா வைரஸ் (கோவிட்-19)’-இன் காரணமாகக் கணிசமாகப் பாதிக்கப்பட்டுள்ள வர்த்தகங்களுக்குக் கிடைக்கும் தற்காலிக உதவித்தொகையாகும்.

தகுதி பெறும் முதலாளிகள், தனி-வர்த்தகர்கள், மேலும் மற்ற நிறுவனங்கள் ஆகியோர் தகுதி பெறும் அவர்களது தொழிலாளர்களுக்காக ‘ஜாப்-கீப்பர்’ கொடுப்பனவுகளைப் பெற விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு மாதமும் ATO -வினால் இது பாக்கித்தொகைகளாக முதலாளிக்குக் கொடுக்கப்படும். 

வர்த்தகங்களானவை ATO's Business Portal வாயிலாக ‘ஜாப்-கீப்பர்’ கொடுப்பனவுகளுக்காகப் பதிவு செய்துகொள்ளலாம், நீங்கள் ஒரு தனி வர்த்தகரானால் myGov -ஐப் பயன்படுத்தி ATO online services  எனும் இணையவழிச் சேவைகள் மூலமாக அல்லது பதிவுபெற்ற ஒரு வரிக் கணக்கு முகவர் அல்லது BAS முகவர் மூலமாகப் பதிவு செய்துகொள்ளலாம்.

தற்போது ATO-விடமிருந்து கிடைக்கும் ‘ஜாப்-கீப்பர்’ ஆதரவுதவி மற்றும் ஒத்தாசையைப் பற்றிய மேலதிகத் தகவல்களுக்கு www.ato.gov.au/JobKeeper எனும் வலைத்தலப் பக்கத்திற்குச் செல்லுங்கள்.

கட்டணங்களைச் செலுத்தவும், சம்பளங்களைக் கொடுப்பதற்குமான பண ஓட்டம் இருப்பதை உறுதிப்படுத்துதல்

செப்டம்பர் 2020 வரைக்குமான, அல்லது  செப்டம்பர் 2020 காலாண்டுப் பகுதிக்கான ‘வர்த்தக நடவடிக்கை அறிக்கைக’(activity statements)ளைத் தாக்கல் செய்வதன் மூலம் தொழிலாளர்களைப் பணியில் அமர்த்தியுள்ள தகுதி பெறும் வர்த்தகங்களும், இலாப நோக்கற்ற அமைப்புக(NFP)ளும் $20,000 முதல் $100,000 வரைக்கும் ‘பண ஓட்ட செயலூக்க’(cash flow boost)த் தொகைகளாகப் பெறுவர். 

மேலதிகமாகத் தெரிந்துகொள்ள:

தொழில் பழகுனர்கள் மற்றும் பயிற்சியர்கள்

ஆஸ்திரேலியாவின் திறனடிப்படைத் தொழிலாளர் படையின் தொடர்ந்த வளர்ச்சிக்கு அரசாங்கம் ஆதரவுதவி அளித்துவருகிறது, மற்றும் தொழில் பழகுனர்களையும் பயிற்சியாளர்களையும் தக்கவைத்துக்கொள்வதற்காகத் தகுதி பெறும் வர்த்தகங்களுக்கு  $21,000 வரைக்குமான 50 சதவீத சம்பள உதவித்தொகையை அளிக்கிறது.

மேலதிகமாகத் தெரிந்துகொள்ள:

கடன்கள்

‘கொரோனா வைரஸ் உத்திரவாதத் திட்டம்’ (Coronavirus SME Guarantee Scheme) என்ற புதிய திட்டமானது வரவிருக்கும் மாதங்களில் உங்களுக்கு உதவுவதற்காக இத் திட்டத்தில் பங்குபற்றும் கடன்வழங்குவோரிடம் இருந்து கூடுதல் கடன்களை உங்களால் பெற இயலும் என்பதைக் குறிக்கிறது.

பாதுகாப்பு இல்லாதப் புதிய கடன்களுக்காகப் பயன்படுத்துவதற்கென SME கடன்வழங்குவோருக்கு 50 சதவீத உத்திரவாதத்தை தொழிலுக்கான முதலாகப் பயன்படுத்துவதற்காக அரசாங்கம் கொடுக்கும்.

தற்போதுள்ள சிறு வர்த்தக வாடிக்கையாளர்களுக்குக் கடன் வழங்குபவர்களுக்கானக் கடன்வழங்குக் கடப்பாட்டுப் பொறுப்புகளில் இருந்து விலக்கையும் அரசாங்கம் அவர்களுக்கு அளிக்கிறது.  

இந்த விலக்கு ஆறு மாத காலத்திற்கானது, மற்றும் புதிய கடன்கள், கடன் வரையறை அதிகரிப்புகள், கடன்களில் செயப்படும் மாறுபாடுகள் மற்றும் மீளமைப்புகள் ஆகியன உள்ளடங்க வர்த்தக நோக்கங்களுக்கான எந்தக் கடன்களுக்கும் இது பொருந்தும்.

மண்டலங்கள் மற்றும் துறைகளுக்கு ஆதரவுதவியளித்தல்

கோரோனா வைரஸ் நோய்வெடிப்பினால் மிகக் குறிப்பிடத்தக்க வகையில் பாதிக்கப்பட்ட சமூகங்கள், மண்டலங்கள் மற்றும் தொழில்களுக்கு உதவுவதற்காக அரசாங்கம் 1 பில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது. நோய்ப்பரவல் காலத்திலும், மீண்டும் பழைய நிலைக்கு மீண்டுவரும் காலத்திலும் உதவுவதற்காக இந்த நிதிகள் கிடைக்கும். கூடுதலாக, 715 மில்லியன் டாலர்கள் வரைக்குமான திட்டத்தின் ஊடாக நமது விமானப் போக்குவரத்துத் துறைக்கு அரசாங்கம் உதவி வருகிறது.

உங்களுடைய வர்த்தகத்தில் முதலீடு செய்தல்

வருடாந்த ஒட்டுமொத்தப் பணப்புரள்வு 500 மில்லியன் டாலர்களுக்குக் குறைவாக உள்ள வர்த்தகளுக்கான கடன் தள்ளுபடி எல்லையானது 30,000 டாலர்களில் இருந்து 150,000 டாலர்கள் வரைக்கும் உயர்தப்பட்டுள்ளது. 

உங்களுடைய கிடங்கிற்காகப் புதிய சாதனங்களை நீங்கள் வாங்கினாலும், அல்லது இரண்டாம்-கை  டிராக்டர் ஒன்றை வாங்கினாலும், அதிகரிப்பும் விரிவாக்கமும் செய்யப்பட்டுள்ள உடனடி சொத்துத் தள்ளுபடியிலிருந்து 31 டிசம்பர் 2020 வரை நீங்கள் ஆதாயம் பெறக்கூடும்.

15 மாத கால ‘முதலீட்டு ஊக்கத் திட்ட’(investment incentive initiative)த்தின் வழியாக, தகுதி பெறும் வர்த்தகங்களுக்கு விரைவுபடுத்தப்பட்ட ‘மதிப்பிழப்புத் தள்ளுபடிக’(depreciation deductions)ளும் கிடைக்கும்.

மேலதிகமாகத் தெரிந்துகொள்ளுங்கள்:

Instant asset write-off for eligible businesses

Backing business investment – accelerated depreciation

பின்வருவனவற்றையும் பாருங்கள்: