Sunday, 16 August 2020

இன வெறிக்கெதிரான அரச கொள்கை குறித்த துண்டுப் பிரசுரம் - 28 - (கொரோனாக் காலம்)

 அரசாங்கத்தின் தகவல் இணைப்பைக் காண இங்கே அழுத்தவும்

னவெறி ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல

இனப் பாகுபாடு, இனரீதித் தொல்லைகள் அல்லது இன வெறுப்பினை நீங்கள் கண்ணுற்றால், அல்லது அவற்றிற்கு நீங்கள் ஆளானால், அதைப் பொறுத்துக்கொண்டிருக்காதீர்கள்; அதை எதிர்த்துக் குரல் எழுப்புங்கள்

இனவெறி நடத்தைக்கு நீங்கள் பலியாகிறீர்கள் என்றால்:

  • வன்முறைத் தனமாக நீங்கள் தாக்கப்பட்டால், அல்லது அச்சுறுத்தப்பட்டால், காவல்துறையினரை அழையுங்கள்.
    • அவசரமான அல்லது உயிருக்கு ஆபத்தான நிலையில் ‘மூன்று பூஜ்ய’ (000)-த்தை அழைத்துக் காவல்துறை வேண்டுமெனக் கேளுங்கள்.
    • காவல்துறையினரது உதவி உங்களுக்குத் தேவைப்பட்டால், ஆனால், உடனடி ஆபத்து ஏதும் இல்லையென்றால், ‘காவல்துறை உதவி இணைப்’(Police Assistance Line)ப்பினை அழையுங்கள் (131 444).
  • வன்முறை ஏதும் இடம்பெறவில்லை என்றால், மற்றும் இப்படிச் செய்வது பாதுகாப்பாக இருந்தால்,சம்பந்தப்பட்ட நபர் அல்லது நபர்களுடன் நேரடியாகப் பிரச்சினையைப் பற்றிப் பேசி சூழ்நிலையை நீங்களாகவே கையாளலாம்.
  • நேரடியான ஈடுபாட்டின் மூலமாகப் பிரச்சினைக்குத் தீர்வு காண இயலவில்லையேல், அல்லது இப்படிச் செய்வது உங்களுக்கு சௌகரியமாக இல்லாமலிருந்தால், ‘ஆஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணைய’(Australian Human Rights Commission (AHRC))த்திற்கு நீங்கள் முறைப்பாடு செய்யலாம்.
    • AHRC -க்கு முறைப்பாடு ஒன்றைச் சமர்ப்பிக்க www.humanrights.gov.au/complaints  எனும் வலைத்தலப் பக்கத்திற்குச் செல்லுங்கள், அல்லது AHRC -யின் ‘தேசிய தகவல் சேவை’ யை 1300 656 419 அல்லது 02 9284 9888 எனும் இலக்கத்தில் அழையுங்கள்.

அருகாமையில் இருப்பவர்களுக்குள்ள உரிமை

இனவெறியை நேரில் காண்பவர்கள் அதற்கு எதிராகக் குரல் கொடுத்தால், இலக்கு வைக்கப்படும் நபருக்குத் தமக்கு ஆதரவுதவி இருக்கிறது என்ற உணர்வு ஏற்படும், மற்றும் இனவெறித்தனமாக நடந்துகொள்ளும் நபருக்கு அவரது நடத்தையைப் பற்றி அவர் மீண்டும்  யோசிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். உங்களுக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய சூழலை ஏற்படுத்திக்கொள்ளாதீர்கள். ஆனாலும், இப்படிச் செய்வது பாதுகாப்பாக இருந்தால்,பாதிக்கப்படும் நபருக்காகக் குரல் கொடுத்து அவருக்கு ஆதரவாக அவர் பக்கம் நில்லுங்கள். நீங்கள் செய்யும் சாதாரணமான ஒரு உடல்ரீதியான சாடை கூட மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கக்கூடும்.

இனவெறித் தனமான நடத்தையை நீங்கள் கண்ணுற்றால், நீங்கள்:

  • அதற்கு எதிராகக் குரல் கொடுக்கலாம் – அதை இனவெறித்தனம் என்று வெளிப்படையாகச் சொல்லலாம், அது ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல என்பதை அந்தச் செயலைப் புரிபவருக்குத் தெரியுமாறு செய்யலாம்
  • இனவெறிக்கு ஆளாகும் நபருக்கு ஆதரவாக இருக்கலாம் – இலக்கு வைக்கப்படும் நபருக்கு அருகில் சென்று அவர் எப்படி இருக்கிறார் என்று கேட்கலாம்
  • ஆதாரங்களைக் குறித்துக்கொள்ளலாம் – அந்த நிகழ்வை உங்களுடைய தொலைபேசியில் பதிவு செய்யலாம்,இந்தச் செயலைப் புரிபவருடைய படம் ஒன்றை எடுக்கலாம் மற்றும் அதிகாரிகளுக்கு அதைத் தெரியப்படுத்தலாம்.

அருகாமையில் இருப்பவர்களுக்கான சில யோசனைக் குறிப்புகள் ‘ஆஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணைய’த்திடம் உள்ளன. https://itstopswithme.humanrights.gov.au/respond-racism எனும் வலைத்தளத்திற்குச் செல்லுங்கள்.

இனப் பாகுபாடும் உங்களுக்குள்ள உரிமைகளும்

இனம், நிறம், ஒரு நபர் அல்லது ஒரு குழுவினரது தேசியம் அல்லது இனப் பூர்வீகம் ஆகியவற்றின் அடிப்படையில் புண்படுத்தவும், அவமதிக்கவும், அவமானப்படுத்தவும் அல்லது அச்சுறுத்தவும் கூடிய காரியம் எதையும் பொது இடங்களில் செய்வது ஆஸ்திரேலியாவில் சட்ட விரோதமானது. இந்த மாதிரியான நடத்தைமுறைகள் ‘இன வெறுப்பு’என்று வகைப்படுத்தப்படுகிறது.

இன வெறுப்புச் செயல்களில் பின்வருவன உள்ளடங்கலாம்:

  • இணைய-மேடைகள் (eforums), ‘ப்ளோக்’குகள் (blogs), சமூகத் தொடர்புவலைத் தளங்கள் மற்றும் காணொளிப் பகிர்வுத் தளங்கள் ஆகியவற்றில் வெளியிடப்படும் இனத் தூசன விடயங்கள்
  • செய்தித்தாள், சஞ்சிகை அல்லது விளம்பரத்துண்டுகள்  போன்ற மற்ற வெளியீடுகளில் காணப்படும் இனத் தூசனமான கருத்துரைகள் அல்லது படங்கள்
  • பொதுக்கூட்டம் ஒன்றில் இடம்பெறும் இனத் தூசனப் பேச்சுகள்
  • கடை, வேலைத்தளம், பூங்கா, பொதுப் போகுவரத்து அல்லது பாடசாலை போன்ற பொது இடங்களில் ஏற்படுத்தப்படும் இனத் தூசனக் கருத்துரைகள்
  • விளையாட்டு வீரர்கள், பார்வையாளர்கள், பயிற்றுனர்கள் அல்லது அதிகாரிகளால் விளையாட்டு நிகழ்ச்சிகளில் ஏற்படுத்தப்படும் இனத் தூசனக் கருத்துரைகள்.

சுதந்திரமாகத் தொடர்பாடல் கொள்வதற்கான உரிமை (‘பேச்சுரிமை’ (freedom of speech’)) மற்றும் இன வெறிக்கு ஆளாகாமல் வாழ்வதற்கான உரிமை ஆகியவற்றிற்கிடையே சமநிலை ஒன்றை ஏற்படுத்துவதே சட்டத்தின் நோக்கம். “நியாயமான வகையிலும், நல்ல எண்ணத்திலும்” செய்யப்படும் சில செயல்கள் சட்ட விரோதமானதாக இல்லாமல் இருக்கலாம்.

ஒருவருடைய இனம், நிறம், மரபு, தேசிய அல்லது இனப் பூர்வீகம் அல்லது குடிவரவு நிலை ஆகியவற்றின் காரணமாக அவர் இன்னொரு நபரை விட அனுகூலம் குறைந்த விதத்தில் நடத்தப்படும்போது, உதாரனமாக, ஒருவர் குறிப்பிட்டதொரு இனத்தைச் சேர்ந்தவர் அல்லது நிறத்தவர் என்பதால் அவருக்கு வாடகைக்கு வீடு தர மறுக்கும்போது, இனப் பாகுபாடு நிகழ்கிறது.

அனைவருக்கும் பொதுவான ஒரு விதிமுறை அல்லது கொள்கையானது குறிப்பிட்ட ஒரு இனம், நிறம், மரபு, தேசிய அல்லது இனப் பூர்வீகம் அல்லது குடிவரவு நிலை ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் மீது நியாமற்ற விளைவு ஒன்றை ஏற்படுத்தும்போதும், உதாரணமாக, வேலை நேரத்தில் தொழிலாளர்கள் தொப்பி அல்லது தலைக்கட்டு ஆகியவற்றை அணியக்கூடாது என்று ஒரு நிறுவனம் சொல்லும்போது, இனப் பாகுபாடு நிகழ்கிறது.

இனப் பாகுபாடு அல்லது இன வெறுப்பிற்கு நீங்கள் ஆளானால், ‘ஆஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணைய’த்திடம் நீங்கள் முறைப்பாடு செய்யலாம்.முறைப்பாட்டைச் செய்யும் முறை எளிமையானதும், இலவசமானதும்,இலகுவானதுமாகும்.

‘ஆஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணைய’த்திடம் நீங்கள் முறைப்பாடு ஒன்றைச் சமர்ப்பிக்க www.humanrights.gov.au/complaints  எனும் வலைத்தளப் பக்கத்திற்குச் செல்லுங்கள்.

‘தேசிய தகவல் சேவை’(National Information Service)

‘ஆஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணைய’த்தின் ‘தேசிய தகவல் சேவை’யானது பல விதமான மனித உரிமைகள் மற்றும் பாகுபாட்டுப் பிரச்சினைகளைப் பற்றியத் தகவல்களையும், தனிநபர்கள், அமைப்புகள், மற்றும் வேலை தரும் முதலாளிகள் ஆகியோருக்கான பரிந்துரைகளையும் அளிக்கிறது. இச்சேவை இலவசமானதும் இரகசியமானதுமாகும்.

‘தேசிய தகவல் சேவை’(NIS)-யினால் இயலுமானவை:

  • கூட்டரசின் கீழான மனித உரிமைகள் மற்றும் பாகுபாட்டு எதிர்ப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் உங்களுக்குள்ள உரிமைகள் மற்றும் பொறுப்புகள் ஆகியவற்றைப் பற்றிய தகவல்களை உங்களுக்குத் தரல்
  • ‘ஆணைய’த்திற்கு உங்களால் முறைப்பாடு செய்ய இயலுமா அல்லது உங்கள் சூழ்நிலைக்குச் சட்டம் எப்படிப் பொருந்திவரக்கூடும் என்பதப் பற்றிக் கலந்துரையாடல்
  • முறைப்பாடு ஒன்றினை எப்படிச் செய்வது, முறைப்பாடு ஒன்றிக்கு எப்படி மறுமொழி அளிப்பது அல்லது குறிப்பிட்டப் பாகுபாட்டுப் பிரச்சினைகளை எப்படிக் கையாளுவது என்பதைப் பற்றியத் தகவல்களைத் தரல்
  • உங்களுக்கு உதவ இயலுமாகக்கூடிய வேறொரு அமைப்பிற்கு உங்களைப் பரிந்துரைத்தல்

NIS -இனால் சட்ட ஆலோசனை வழங்க இயலாது என்பதைத் தயவுசெய்து கவனத்தில் கொள்க.

NIS -உடன் நீங்கள் பின்வரும் வழிகளில் தொடர்புகொள்ளலாம்:

மொழிபெயர்ப்பு மற்றும் மொழிபெயர்த்துரைப்பு சேவை

‘மொழிபெயர்ப்பு மற்றும் மொழிபெயர்த்துரைப்பு சேவை’ ((TIS National)) என்பது ஆங்கிலம் பேசாதோருக்கான மொழிபெயர்த்துரைப்பு சேவையாகும். பெரும்பான்மையான ‘TIS நேஷனல்’ சேவைகள் ஆங்கிலம் பேசாதவர்களுக்கு இலவசமாகும்.

அறிவுரையாலோசணை மற்றும் மன நலம்

‘கோவிட்-19’ பெருந்தொற்றுக் காலம் நெடுக மக்களுக்கு உதவுவதற்காகக் குறிப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு புதிய 24/7 ஆதரவுதவி சேவை அனைத்து ஆஸ்திரேலியர்களுக்கும் இலவசமாகக் கிடைக்கிறது. 

https://coronavirus.beyondblue.org.au/ எனும் வலைத்தளம் மூலமாக இந்த ஆதரவுதவி சேவையைப் பெறலாம்.

தனிநபர் நெருக்கடி நிலை மறும் மனநல ஆதரவுதவி சேவைகளுக்கு 1800 512 348-இல் ‘பியாண்ட் ப்ளூ’ (Beyond Blue)-வை அல்லது  13 11 14-இல் ‘உயிர்காப்பு இணைப்’(Lifeline)பினை நீங்கள் எச்சமயத்திலும் அழைக்கலாம். 

‘இளையோர் உதவி இணைப்பு’ (Kids Helpline) என்பது 5 முதல் 25 வயது வரையுள்ள இளம் வயதினருக்கான இலவச சேவையாகும். சிறார்கள், பதின்ம-வயதினர் (teens) மற்றும் வயதுவந்த இளைஞர்கள் 1800 551 800-ஐ எச்சமயத்திலும் அழைக்கலாம்.

No comments:

Post a Comment