அரச இணைப்பைக் காண இங்கே அழுத்தவும்
‘விசா’க்கள் மற்றும் எல்லைப் பாதுகாப்பு
பயணக் கட்டுப்பாடுகள்
ஆஸ்திரேலியப் பிரசையல்லாதவர்களும், ஆஸ்திரேலிய வாசி அல்லாதவர்களும் ஆஸ்திரேலியாவிற்குள் நுழைவதைத் தடுக்கும் பயணத் தடை ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
வாழ்க்கைத்துணைகள், சட்டப்படி வயதடையாத சார்ந்திருப்போர், சட்டரீதிப் பாதுகாவலர்கள் மற்றும் உடன் வசிக்கா வாழ்க்கைத் துணைகள் ஆகியோரை உள்ளடக்கும் ஆஸ்திரேலியப் பிரசைகளது நெருங்கியக் குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் நிரந்தர வதிவாளர்களுக்கு இந்தப் பயணத் தடையிலிருந்து விலக்கு உள்ளது. ஆஸ்திரேலியாவிற்குள் வந்த பிறகு, 14 நாட்களுக்கான நோய்த்தடுப்புத் தனிமையைப் பூரனப்படுத்துமாறு அனைத்துப் பயணிகளும் வேண்டப்படுவர்.
தற்காலிக விசாவில் இருப்பவர்களுக்கான தகவல்கள்
தமது தற்போதைய விசா முடிவுறும் திகதிக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து இருக்க விரும்புபவர்கள் மேலதிக விசா ஒன்றிற்காக விண்ணப்பிக்க வேண்டும். தமது சூழ் நிலைகளுக்கேற்ற புதிய விசா எது, மற்றும் அந்த விசாவிற்காகத் தாம் விண்ணப்பிக்க இயலுமா என்பதைத் தெரிந்துகொள்ள விசா தெரிவுகள் என்ன என்பதைத் தற்போது விசாவில் இருப்பவர்கள் ஆய்ந்து பார்க்கவேண்டும்.
பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் விசாக்களைப் பற்றிய மேலதிகத் தகவல்களுக்கு covid19.homeaffairs.gov.au எனும் வலைத்தளத்தினைப் பாருங்கள்.
No comments:
Post a Comment