னைடொக் வாரம் என்பது அவுஸ்திரேலியப் பழங்குடி மக்களின் வாழ்வியலை; பண்பாட்டை; விழுமியங்களைக் கொண்டாடுவதற்காகவும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் கொண்டாட்டப்படும் நிகழ்ச்சியாகும். வருடத்தில் வரும் ஜூலை மாதத்தின் முதல் வாரம் நைடொக் வாரமாக பிரகடனப் படுத்தப் பட்டிருக்கிறது.
பாடசாலைகள், பொது இடங்கள், கலைக் கூடங்கள், அரும்பொருட் காட்சிக் கூடங்கள், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்கள் போன்றவற்றில் எல்லாம் இந் நாட்களில் இந் நாட்டின் பூர்வகுடி மக்களின் வாழ்வியலை; கலாசாரத்தை; பண்பாட்டை; மொழியை; விழுமியங்களைக் கொண்டாடும் நிமித்தமாகப் பல நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இந்த வருடத்திற்கான தொனிப்பொருள் ’மூத்தோர்’ என்பதாகும். பழங்குடி மக்களின் வாழ்வில் மூத்தோர்கள் கொண்டிருக்கும் முக்கியத்துவத்தையும் சமூகத்தில் அவர்கள் வகிக்கும் மதிப்பார்ந்த இடத்தையும்; அவர்கள் கொண்டிருக்கும் வரலாற்று வகிபாகத்தை உணர்ந்து போற்றும் முகமாகவும்; அவர்களின் சமூகப் பங்களிப்புக் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணமாகவும்; மூத்தோர் என்ற தொனிப்பொருள் இவ் வருடத்துக்கான சுலோகமாக எடுத்துக் கொள்ளப் பட்டிருக்கிறது.
ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு தொனிப்பொருளை; கருப்பொருளைத் தாங்கியதாக சுவரொட்டிகள் வெளியிடப்படுவதுமுண்டு. அவற்றை அதன் முக்கியத்துவம் கருதி இங்கு பிரசுரம் செய்கிறேன்.
நன்றி:
https://www.naidoc.org.au/posters/poster-gallery
No comments:
Post a Comment