சிட்னி நகரப் பகுதிகளில் அண்மைக்காலமாக நகரமயமாக்கம் மிகத் துரிதகதியில் நடைபெற்று வருகிறது. அதற்கேற்ப வீதிகள், கட்டிடங்கள், கடைத்தொகுதிகள் என்பன புதிதாகத் தோன்றி நகரின் பழைய அமைப்பு புதிய வடிவம் பெற்று வருகிறது.
அண்மையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஒன்றாகிய பெண்டில்ஹில் பகுதியில் தொடரூந்து நிலையமும் பஸ் மற்றும் வாடகைக் கார்களின் தரிப்பிடங்களும் புது வடிவம் பெற்றன. துரதிஷ்ட வசமாக அதன் பழைய வடிவங்கள் எதுவும் தற்போது கைவசமில்லை. எனது கைத்தொலைபேசியில் அவ்வப்போது சேகரித்து வைத்துக் கொண்ட ஒளிப்படங்களில் இருந்து இந்தப் பதிவு இங்கு பதிவேற்றம் செய்யப் படுகிறது.
இங்கு இன்று பதிவேறும் ஒளிப்படங்கள் 29.12.2021 அன்று எடுக்கப் பட்டவை என்று எனது கைத்தொலைபேசியின் விபரக் குறிப்புத் தெரிவிக்கின்றது.
இன்னும் சில வருடங்களில் இவையும் மாறி வேறு வடிவம் பெறும் சாத்தியங்களும் உண்டு என்பதால் இவற்றை இன்றுள்ள வடிவில் இங்கு பதிவேற்றம் பெறுகிறது.
முதியோர் கடவை உள்ளது |
பஸ் தரிப்பிடம் |
வாகனம் செல்லும் நால்வழி வட்ட மேடு |
சிவப்புப் பகுதி: நிறுத்தலாம்; இறங்க முடியாது |
வட்ட மேடு நால்வழி வாகனப் பாதை முன்னால் வருகிறது |
மக்கள் கடவை |
இந்தப் பகுதியில் மதுபான பாவனை (குறிப்பிட்ட காலப்பகுதி வரை) தடைசெய்யப்பட்டிருக்கிறது |
பாதசாரிகள் கடவை. பாதசாரிகள் செல்லும் போது வாகனங்கள் நிற்க வேண்டும். |
பஸ் நிறுத்தத்தில் பஸ் வரும் நேர அட்டவணை |
பஸ் தரிப்பிடம்; பெண்டில்ஹில் |
வாகனம் வந்து பயணியை ஏற்றிச் செல்லும் இடம். |
பாதசாரிகள் கடக்கும் இடம் |
இருவழிப்பாதை |
வாகனம் சற்று நேரம் இயந்திரத்தை நிறுத்தாது நிற்கலாம் |
மாற்ருத்திறனாளிகளுக்கு மாத்திரமான தரிப்பிடம். அவர்கள் அதற்கான அனுமதிப்பத்திரத்தை தெரியுமாறு வாகனத்தின் முன் புறம் வைத்திருக்க வேண்டும். |
குறிப்பிட்ட நேர இடைவெளிக்குள் மட்டும் இங்கு ஒரு மணிநேரம் வாகனம் நிறுத்தலாம் |
வாடகை வாகனத் தரிப்பிடம் |
இங்கு தரித்து நின்று யாரையும் ஏற்றிச் செல்ல முடியாது. அதற்கான இடம் அப்பால் உள்ளது |
No comments:
Post a Comment