Thursday, 13 July 2023

மாதிரி வீடு

 அவுஸ்திரேலிய நாட்டை பூங்கா நாடு என்று பொதுவாக அழைப்பார்கள். தனித்தனி வீடுகளும் அழகிய பூந்தோட்டங்களும், புல்வெளிகளும், சிறந்த பராமரிப்பும் கூடியதாக அவை அமைந்திருப்பது அதற்கான காரணமாக இருக்கலாம்.

எனினும் தற்காலங்களில் தொடர்மாடிக் குடியிருப்புகளும் தீப்பெட்டி போன்ற கட்டிடங்களும் வான் நோக்கி உயரும் தொழில்துறைக் கட்டிடங்களும் வெகு வேகமாக வளர்ச்சியடைந்து நாட்டின் அழகினை வேகமாக மாற்றி வருகிறது.

மேலும் சனத்தொகை வளர்ச்சி, புதியதலைமுறையினரது சிந்தனை மாற்றங்கள், அரச நிறுவனங்களின் பொருளாதார நோக்கங்கள் போன்றனவும் நாட்டின் முகத்தை / அதன்அழகியலைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கினை ஆற்றுகின்றன. 

அண்மையில் பிளக்ரவுன் பிரதேசத்திற்குச் சென்ற போது கண்ட இந்த வீடு சுமார் 25 வருடங்களுக்கு முற்பட்ட கட்டிட பாணியை / அவுஸ்திரேலியக் குடியிருப்பை நினைவுறுத்திச் சென்றது.






படப்பிடிப்பு: யசோதா.பத்மநாதன்.

எடுத்த திகதி: 8.7.2023. சனிக்கிழமை.

No comments:

Post a Comment