Saturday, 15 July 2023

அவுஸ்திரேலிய பாரம்பரிய வீடுகள்

 அவுஸ்திரேலிய வீடுகளின் அமைப்புகள் காலத்துக்குக் காலம் மாற்றங்களுக்கு உட்பட்டு வருவன. ஆரம்பகால பிரித்தானிய வீடுகளின் பாணியைப் பின்பற்றி கனதியும் காத்திரமும் கம்பீரமுமாய் நின்ற வீடுகள் பல இன்றய காலங்களில் காண அரிதாகி வருகின்றன. 

ஒருசில நகரசபைகள் அத்தகைய பாரம்பரிய பாணியில் அமைந்த வீடுகளின் அழிவைக் கட்டுப்படுத்தி வந்தாலும் அதில் புதிதாகக் குடியிருக்க வரும் புதிய சந்ததியினர் மற்றும் அவற்றின் தார்ப்பரியங்களை; பாரம்பரியப் பெறுமதிகளை நோக்காது வியாபார பொருளாதார மேம்பாடுகளை மட்டும் நோக்கமாகக் கொண்டு வரும் புதிய வர்த்தக நிறுவனங்கள் மற்றும் சனத்தொகைப் பெருக்கம் போன்றன இத்தகைய அழகிய வீடுகளின் அழிவுக்குக் காரணமாகி வருகின்றன.

Starthfield நகரசபைக்கு உட்பட்ட   Starthfield என்ற பகுதியின் அநேக இடங்கள் இன்றும் தம் பழைமையைப் போற்றிப் பாதுகாத்து வருகிறன. அங்கு சென்ற சந்தர்ப்பம் ஒன்றில் எடுக்கப்பட்ட சில பாரம்பரிய வீடுகள் இவை.

இவை 10.2.2022 அன்று என் கைத்தொலைபேசியால் எடுக்கப்பட்டு இன்று இங்கு பதிவேற்றப்படுகிறது.































ஒளிப்படங்கள்: யசோதா.பத்மநாதன்.

எடுத்தது: 10.2.2022

இடம்: Starthfield, NSW 2135.

No comments:

Post a Comment