Saturday, 15 July 2023

வீதி நூலகம்

 

அவுஸ்திரேலியா தனக்கென சில தனித்துவமான பழக்கவழக்கங்களையும் பண்பாடுகளையும் கொண்டிருக்கிறது. அதிலொன்று இந்த வகை வீதி நூலகங்களாகும். முற்றிலும் இலவசமான இவ்வகை வீதி நூலகங்கள் புத்தகங்களை வாசகர்களுக்கு இலவசமாக வழங்குகின்றன.

தனி வீடுகளில் இருப்பவர்களில் இருந்து சமூக நிறுவனங்கள் வரை யார் வேண்டுமானாலும் இந்தவகை வீதி நூலகங்களைத் தயார் செய்து கொள்ளலாம்.

வீதியின் மருங்கில் தபால்பெட்டி போன்ற அமைப்பில் ஒரு பெட்டியினை ஊன்றி அதற்குள் தமக்குரிய வாசித்து விட்டு வீட்டில் சும்மா கிடக்கும் புத்தகங்களை இங்கு அடுக்கி வைத்து விட வேண்டியது தான். வீதியில் போகும் யார் வேண்டுமானாலும் இந்தப் புத்தகத்தை எடுத்துச் செல்லலாம். வேண்டுமானால் அவரே அதனை வைத்துக் கொள்ளலாம். இல்லையேல் படித்து முடிந்த பிறகு அதனைத் திருப்பி இங்கு கொண்டு வந்து வைத்து விடலாம். அல்லது அதற்குப் பதிலாக வேறொரு புத்தகத்தை வைத்து விடலாம்.

புத்தகங்கள் தாமாக நகரும். வேண்டியவர்களைச் சென்றடையும். புதிய புத்தகங்கள் வந்து சேரும். வீதியில் போகும் யாரும் இலவசமாக எடுத்துச் சென்று வாசித்து பயன் பெறலாம்.

இவற்றுக்கு நகரசபைகள் கூட பயிற்சி வகுப்புகளையும் இலவச புத்தகப் பெட்டிகளையும் வழங்குகிறது. தேவைப்படுமிடத்து பெட்டிகள் செய்யும் பயிற்சிப் பட்டறைகளை நடத்துகிறது. இலவசமாக நடைபெறும் இப்பட்டறைகளுக்குச் சென்று புதியவற்றைக் கற்பதோடு,  புதிய ஒரே மன எண்ண ஓட்டங்கள் கொண்டவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளும் வாய்ப்பும் கிட்டுகிறது.

கீழே காட்டப்பட்டுள்ள படங்கள் சில நான் வாழும் இடத்திற்கு அருகாமையில் உள்ள வீதி நூலகங்களின் காட்சிகளாகும். அவை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஒளிப்படம் எடுக்கப்பட்டது. இன்று உங்கள் பார்வைக்காக.





படப்பிடிப்பு: யசோதா.பத்மநாதன்.

திகதி: 25.6.2022

இடம்: Marrylands Botanical Garden, Marrylands, NSW 2160









Auburn Botanical Garden, Auburn, NSW 2144

படப்பிடிப்பு: யசோதா.பத்மநாதன்.
திகதி: 1.7.2022













படப்பிடிப்பு: யசோதா.பத்மநாதன்

திகதி: 10.2.2022 

இடம்: Starthfiels,NSW 2135.


இலங்கையில் இருந்து வெளிவரும் செம்மண் பத்திரிகையில் அங்கு வாழும் சிறுவர்களுக்காக ‘கண்டறியாத கதைகள்’ என்ற அவுஸ்திரேலியா பற்றிய அறிமுகத் தொடரில்  ‘வீதி நூலகம்’ பற்றி எழுதிய பத்திரிகைத் துணுக்கு இங்கு உங்கள் பார்வைக்காகப் பிரசுரமாகிறது.



23.7.2022


No comments:

Post a Comment