சிட்னியில் புதிய கலைக்கூடத்தின் திறப்பு விழ்ழா கொண்டாட்டங்களின் இறுதி நாள் 10.12.2022 ஆகும். ஏற்கனவே படம் ஒன்றில் காணப்படும் கட்டிடம் கலைக்கூடத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்தாலும் அதனது விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக இதற்கு அண்மித்ததாக புதியதான ஒரு கட்டிடத்தொகுதி கடந்த வருட இறுதிக் காலப்பகுதியில் திறந்து வைக்கப் பட்டது.
இதில் கவனிக்கத் தக்க சிறப்பம்சமாக இருந்த விடயம் என்னவென்றால் 10 நாட்கள் வரை கோலாகலமாகக் கொண்டாட்டப்பட்ட இத் திறப்புவிழா நிகழ்ச்சிகளில் இறுதி மூன்று நாட்களும் முழுக்க முழுக்க தமிழ் பண்பாட்டு பாரம்பரியக் கொண்டாட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டதாகும் .
ஆடல், வாத்தியக் கச்சேரிகள், முழவு இசை, பறையிசை, பாடல், கவிதா நிகழ்வுகளோடு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த திறப்பு விழா நிகழ்வுகளின் சில பகுதிகளை இங்கு ஒளிப்படங்கள் வாயிலாகக் காணலாம்.
அதிகம் தமிழர்களால் நிகழ்த்தப்படாத ஆனால் அவுஸ்திரேலிய மேடைகளில் சிறப்பாகவும் பிரபலமாகவும் செய்யப்பட்டு வரும் தனி நபர் கவிதா நிகழ்வினை ஈழத்துத் தமிழ் பெண்ணான ஸ்ரீஷா வினால் ஆங்கிலத்திலும் தமிழிலும் நிகழ்த்தப்பட்டது ஒரு புதுமையான அம்சமாக தமிழர்களால் பார்க்கப்பட்டது. அக்கவிதை வரிகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் துணியில் எழுதப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.
கவிதை வரிகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் |
ஸ்ரீஷா |
கவிதை வாசிப்பு |
No comments:
Post a Comment