Showing posts with label ஊடக தகவல்கள். Show all posts
Showing posts with label ஊடக தகவல்கள். Show all posts

Wednesday, 12 July 2023

நூலக சேவைகள்

 பிளக்ரவுன் நகரசபை நூலகம் நூல்களை மாத்திரமல்லாது பல்வேறு விதமான சேவைகள் தகவல்களையும் வழங்குகிறது. குழந்தைகளுக்கான கதைகள் சொல்லும் நிகழ்ச்சிகள், தகவல் அரங்குகள், வேலைத் திட்டங்கள், பயிற்சி வகுப்புகள், கைவினைப் பயிற்சிகள், போட்டி நிகழ்ச்சிகள்  என பல நிகழ்ச்சிகளைப் பயனாளர்களுக்கும் இளம் பிள்ளைகளுக்கும் நடாத்தி வருகிறது.

அரசாங்கத்தினது அனுசரணையோடும் நிதிப்பங்களிப்போடும் நடைபெறும் இத்தகைய நிகழ்ச்சிகள் குழந்தைகள், வயோதிபர், வளர்ந்தோர், பெற்றோர், பெண்கள், இளையோர், குழந்தைகள் மாற்றுத் திறனாளிகள் எனப் பலரையும் கருத்தில் கொண்டனவாக நிகழ்ச்சித் திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

புகைப்படம் பிடித்தல், ஓவியம் வரைதல், கதை எழுதுதல், குறும்படம் எடுத்தல் போன்ற செயல் திட்டங்களும், வீட்டுத்தோட்டம், பூந்தோட்டம், வீதி நூலகம் போன்றவற்றுக்கான செயல்முறை வழிகாட்டுதல்களும் இலவசமாக வழங்கப்படுகின்றன. அவற்றுக்கான வழிகாட்டல்களும் அத்துறை வல்லுனர்களால் இலவசமாகக் குறிப்பிட்ட நாட்களில்  செயல்முறைப் பயிற்சியாகச் சொல்லிக் கொடுக்க ஒழுங்கு செய்யப் படுகின்றன.

குழந்தைகளுக்கான பொம்மைகளை இரவல் கொடுக்கும் காட்சியறை, நிகழ்ச்சிகளை நடத்தக் கூடிய மண்டபங்கள், புத்தகத்தை எழுதிய எழுத்தாளர்கள் வந்து வாசகரோடு பேசுதலுக்கான மாதாந்த வாய்ப்புகள் என்பனவும் அங்கு ஏற்படுத்திக் கொடுக்கப் படுகின்றன.

பொதுவாக பயனாளர்களுக்குத் தேவைப்படும் பயனுள்ள அறிவித்தல்கள், அறிவுறுத்தல்கள், அரச தகவல்கள் போன்றனவும் அங்கு பல்வேறு மொழிகளில் பெற ஆவன செய்யப்பட்டுள்ளன.

அதில் சில புகைப்படங்கள் கீழே கொடுக்கப்படுகின்றன.








படப்பிடிப்பு: யசோதா.பத்மநாதன்.
பிளக்ரவுன் நூலகம்

7.7.2023.

Thursday, 26 September 2019

அவுஸ்திரேலியத் தமிழின் இணைய இணைப்புகள்





வலைப்பூக்கள் / இணையத்தளங்கள்


1.http://geethamanjari.blogspot.com ( கீதமஞ்சரி. மதிவாணன் 2011இலிருந்து )

2. http://putthan.blogspot.com ( யாழ். புத்தன் 2010 இலிருந்து )

3. http://shuruthy.blogspot.com ( சுதாகர் 2012 இலிருந்து )

4. http://www.padalay.com (ஜெயக்குமரன் 2015 இலிருந்து )

5. http://www.madathuvaasal.com (கானா.பிரபா 2005 இலிருந்து )
6. http://www.piraveenan.lk (பிரவீனன். மகேந்திரராஜா 2018 இலிருந்து )

7. http://eelamlife.blogspot.com ( ஈழத்தமிழர் கூட்டு வலைப்பதிவு )

8. http://karthikakanesar.blogspot.com ( கார்த்திகா. கணேசர் 2018 இலிருந்து)

9. https://aadumkalam.blogspot.com ( ம.தனபாலசிங்கம். 2018 இலிருந்து)

10. https://uyarthinai.wordpress.com ( உயர்திணை 2012 இலிருந்து )

11. http://chandralekavamadeva.blogspot.com ( சந்திரலேகா.வாமதேவா 2016 இலிருந்து)

12. https://atlaswriters.wordpress.com (தமிழ் இலக்கியக் கலைச் சங்கம் 2017 இலிருந்து )

13. https://noelnadesan.com ( நோயல். நடேசன் 2010 இலிருந்து )

14. http://akshayapaathram.blogspot.com ( யசோதா.பத்மநாதன் 2008 இலிருந்து )

15. http://www.tamilmurasuaustralia.com ( இணையப்பத்திரிகை 2010 இலிருந்து )

16. https://thevakieskatpannaikal.wordpress.com  (தேவகி. கருணாகரன் 2016 இலிருந்து )

17. http://tamilpandal.blogspot.com (அன்பு ஜெயா 2014 இலிருந்து )

18. http://mazhai.blogspot.com ( மழை ஷிரேயா 2004 இலிருந்து )

19. http://srinoolakam.blogspot.com ( கனெக்ஸ் 2005 இலிருந்து )

20. http://mugunth-tamil.blogspot.com  ( முகுந் 2013 இலிருந்து )

21. http://kasthurippen-ezhuthusitharalkal.blogspot.com ( கஸ்தூரிப்பெண் 2006 இலிருந்து)

22. http://potteakadai.blogspot.com ( பொட்டீக்கடை 2005 இலிருந்து )

23.https://noelnadesan.com/ ( நோயல். நடேசன். மே 2010 இலிருந்து )

24. http://www.canberratamilassociation.org.au/index.html ( கன்பரா தமிழ் சங்கம் 1983ம் ஆண்டிலிருந்து )

தொகுப்புகள் தெரியத் தெரிய தொடரும்....

26.9.2019


                  தமிழ் பாடசாலைகள்

1.   வென்ற்வேர்த்வில் தமிழ் கல்வி நிலையம்

2.       தமிழ் கல்வி நிலையம் – ஹோம்புஷ்
3.   பாலர் மலர் தமிழ் கல்விக் கழகம்
4.       ஈஸ்ட்வூட் தமிழ் கல்வி நிலையம்
5.       மவுண்ட்றூயிட் தமிழ் கல்வி நிலையம்
6.       ஓபர்ன் தமிழ் ஆலயம்
தொலைபேசி இலக்கம் 02 9749 4354 or 02 9760 1029


1.       நியூ சவுத் வேல்ஸ் தமிழ் பாடசாலைகள் கூட்டமைப்பு


                     வானொலிகள்

1  1. SBS Tamil https://www.sbs.com.au/language/tamil (அரச வானொலி)

2  2.  ATBC https://tunein.com/radio/ATBC---Australias-Tamil-Radio-s111349 (சமூக வானொலி)

3  3. இன்பத்தமிழ் ஒலி https://www.tamilradios.com/inbathamil-oli-radio (சமூக வானொலி)

4  4.  தாயகம் தமிழ் ஒலிபரப்புச் சேவை ( சமூக வானொலி)
5  5. தமிழ் முழக்கம் (சமூக வானொலி )
     http://tamilvaanoli.blogspot.com/2007/02/thamil-muzhakkam-2000-985-fm-australia.html

6.சங்கநாதம் - மெல்போர்னில் இருந்து (1993ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.)

7. வானமுதம் - மெல்போர்னில் இருந்து (2006ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது )

                                         திரைப்பட முயற்சிகள்

     வெளிவந்த / வந்துகொண்டிருக்கும் சிற்றிதழ்கள் / பத்திரிகைகள்

அவுஸ்திரேலிய வாழ் புலத்தை மயமாகக் கொண்டு தமிழ் அவுஸ்திரேலியரால் எழுதப்பட்டு வெளிவந்த நாவல்கள் / சிறுகதைத் தொகுதிகள்/ கவிதை புத்தகங்கள்