Monday 20 February 2017

அரச சேவைகள் பற்றித் தமிழ் மொழியில் ....


4.3.2017. சனிக்கிழமை.
கீழே காணப்படும் சுவரொட்டி இரு மொழி பேசும் பண்பாட்டுப் பின்புலத்தைக் கொண்ட சிறு பிள்ளைகளுக்கான புத்தகங்களை வெளியிடும் நிறுவனத்துக்குச் சொந்தமானது. 

ADS inc (Auburn Diversity Services)
17, Macqarie road,
Auburn NSW 2144 

என்ற இடத்தில் அரச நிதியில் இயங்கும் சமூக சேவை நிறுவனம் ஒன்றின் விளம்பரப் பலகையில் காணப்பட்டது. 

அதற்கான தமிழ் ஆங்கில மொழி மூலமான புத்தகங்களைக் காண,

http://uk.mantralingua.com/language/tamil 

செல்லலாம்.

அவுஸ்திரேலியா ஒரு பல்கலாசார நாடு என்பதும்; அது அனைத்து மொழிகளையும் அனைத்துப் பண்பாட்டையும் தன் பெரும் பலமாக கொண்டிருக்கிறது என்பதும்; அதனை ஆதரிக்கும் விதமாக பல்வேறு சேவைகளையும் நிதிப் பங்களிப்புகளையும் அளித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.





ஒளிப்படம் எடுத்தது: யசோதா.ப.
திகதி: 3.3.2017, வெள்ளிக் கிழமை.

.....................

கீழே உள்ள சுவரொட்டியும் ADS inc (Auburn Diversity Services) இல் காணப்பட்டதுவே.




ஒளிப்படம் எடுத்தது: யசோதா.ப.
திகதி: 3.3.2017, வெள்ளிக் கிழமை.
............................


Family & Community Services
Aging, Disability & Home care

அவுஸ்திரேலிய நியூ சவுத் வேல்ஸ் அரசு தமிழில் வழங்கும் தகவல்கள்/ துண்டுப் பிரசுரங்கள் பற்றிய குறிப்புகளை தொகுக்கும் முயற்சி இது.

கீழ் காணும் அரச வலைத் தளங்களின் முகவரிகளில் அவுஸ்திரேலிய அரசு தமிழ் மொழியில் வழங்கும் சேவைகள் பற்றிய விபரங்களைக் காணலாம்.



1. வயதானவர்கள் மற்றும் ஊனமுற்றவர்களுக்கான அரசு வழங்கும் சேவைகள் பற்றிய விபரங்கள் தமிழ் மொழியிலும்....

http://www.adhc.nsw.gov.au/publications/adhc_publications_in_your_language/tamil

மேலும், மாற்றுத் திறனாளிகள் பற்றிய விபரக் குறிப்புகளை அறிந்து கொள்ள...

http://www.amparo.org.au/wp/wp-content/uploads/2015/09/Tamil-Factsheet-1-Understanding-Disability-in-Australia-updated-by-Tamil-community-leaders-2016.pdf


2. தலைவர் ஆகுதல் பற்றி....

http://www.mychoicematters.org.au/images/translated/BALTamil.pdf

3. திட்டங்களை நடத்துதல் பற்றிய தகவல்களை அறிய....

http://www.mychoicematters.org.au/images/translated/RunProjectsTamil.pdf

4.நல் வாழ்வு பற்றிச் சிந்திக்க.....

http://www.mychoicematters.org.au/images/translated/GoodLife_Tamil.pdf

5. குறைகளைக் கையாளும் அதிகாரிக்கு புகார் கொடுத்தல் பற்றி....

http://www.ombo.nsw.gov.au/__data/assets/pdf_file/0007/4021/FS_General-Info_Tamil-1.pdf

.............

இன்று 20.2.2017 அன்று திங்கள் கிழமை இத்தகவல்கள் பிரசுரமாகின்றன. மேலதிக விபரங்கள் கிடைக்கும் போது இங்கு அவை தொடர்ந்து பிரசுரமாகும்.....

.........................
இன்று 21.2.17. செவ்வாய் கிழமை.

6. SSI ( Settlement Service International ) இனால் வெளியிடப்பட்டிருக்கும் தமிழ் மொழி மூல அரச செய்தி இது.

குழந்தைகளை எவ்வாறு பராமரிப்பது என்பது தொடர்பான அரச கொள்கைகளும் விளக்கங்களும்.



http://www.ssi.org.au/images/stories/documents/publications/SSI_Caring_for_Children_Tamil_web.pdf

7. நீரில் இருந்து தம்மைப் பாதுகாப்பது என்பது பற்றிய தமிழ் துண்டறிக்கை இது.



http://www.ssi.org.au/images/stories/documents/publications/Tamil-RLSNSW_WaterSmart_SafetyTips.pdf

8. SSI  என்ற அரச நிதியினால் நிர்வகிக்கப் படும் அகதிகளுக்கான அரச நிறுவனம் இலகு தொழில் நுட்பத்தினூடாக கைத் தொலைபேசி மூலம் நல்வாழ்வுக்கான செய்திகளை தமிழ், அரபு, பார்ஸி மொழிகளிலும் கூடவே ஆங்கிலத்திலும் நாளாந்தம் சொல்லி வருகிறது. இலவசமாக கைத்தொலைபேசியில் பதிவிறக்கம் செய்து அதனைப் பயன் படுத்தும் வசதியை அது ஏனைய இரு சமூக நிறுவனங்களோடு இணைந்து இலவசமாக வழங்கி வருகிறது. அதனை பதிவிறக்கம் செய்ய 

  Download for Apple     Download for Android

The app, which is the first of its kind in Australia, is free and available in Arabic, English, Farsi and Tamil for iPhone and Android devices.


1.3.2017

இணையத்தளத்தில் முன்னர் காணப்பட்ட இப்போது காண முடியாத இரு மொழிப் பயன்பாட்டின் நன்மைகள் குறித்த அரச தமிழ் துண்டறிக்கை.



                                                   .....................................................

குழந்தைகள் காப்பக வசதிகள் குறித்த Holroyd நகரசபையின் துண்டறிக்கை இது. Holroyd city council தற்போது Cumberland council லோடு இணைந்திருக்கிறது. Cumberland council தற்போது Creystanes, Wentworthville, Granville, South Granville, Regents Park ஆகிய பகுதிகளை தன் நிர்வாக அலகின் கீழ் கொண்டுவந்திருக்கிறது. அதனால்  Holroyd city council என்ற ஒன்று இனி இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.





இத் துண்டறிக்கை ADS inc (Auburn Diversity Services) இல்
17, Macqarie road,
Auburn NSW 2144 
என்ற முகவரியில் 3.3.2017 அன்று வெள்ளிக் கிழமை பெறப் பட்டது.
ஒளிப்படம்: யசோதா.ப.
எடுத்தது: 4.3.2017 சனிக்கிழமை.
........................................................

கீழே இருக்கும் துண்டறிக்கை நியூ சவுத் வேல்ஸ் அரசினால் வெளியிடப்பட்டிருக்கிற பயன்படுத்திய காரை வாங்கும் போது கவனத்தில் எடுக்கக் கூடிய விடயங்கள் பற்றிய விபரங்கள் அடங்கிய துண்டறிக்கை.







மேலதிக விபரங்களை கீழ் காணும் வலைத்தளத்தில் தமிழில் பெற முடியும்.

http://www.fairtrading.nsw.gov.au/ftw/Language_Tamil.page?

http://www.fairtrading.nsw.gov.au/ftw/Language_Tamil/What_we_can_do_for_you.page?

இப் பிரசுரம் ADS inc (Auburn Diversity Services) இல் 3.3.2017 வெள்ளி அன்று பெறப்பட்டது. 
ஒளிப்படம்: யசோதா.ப.
எடுத்தது 4.3.2017 சனிக்கிழமை.
...........................................

கடந்த 2016 ஓகஸ்ட் மாதம் 9ம் திகதி செவ்வாய் கிழமை அவுஸ்திரேலிய மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கான நாள் நிர்ணயிக்கப் பட்டது. அவுஸ்திரேலியக் குடியுரிமை பெற்ற அனைவருக்கும் கிடைக்கப் பெற்ற அரச தபாலின் ( கடிதத்தின்) பின் புறத்திலும் தமிழ் மொழி மூலமான சேவை பற்றிய தகவல் பகிரப்பட்டிருந்தது. அது கீழே,



தகவல் மூலம்: என்னுடயதான சொந்த ஆவணக் கோவையில் இருந்து...
ஒளிப்படம்: யசோதா.ப.
எடுத்தது: 4.3.2017 சனிக்கிழமை.
........................................................................................

கீழ் வரும் இப் பதிவு இடப் படும் திகதி; 18.03.2017.

கீழே வரும் இந்தச் சமூக சமையலறை பற்றிய சுவரொட்டி SSI என அழைக்கப்படும் Settlement Service International என்ற அரச சார்பான / அரச நிதியில் இயங்கும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான சேவைகளை வழங்கும் சமூக சேவை நிறுவனத்தின் காரியாலயத்தில் எடுக்கப்பட்டது. குறிப்பாக அதன் கிளை ஒன்று Parramatta என்ற நகரில்
 lev.1 / 81 George St என்ற முகவரியில்  அமைந்திருக்கிறது.
அங்கு இப்படம் எடுக்கப்பட்டது.
எடுத்தவர்: யசோதா.ப.
எடுத்த திகதி: 17.3.2017.





கீழே வரும் இந்தப் பிரபலமான இந்திய உணவகம் சிட்னியின் இரண்டாவது பெரு நகரமாகக் கருதப்படும் Parramatta வில் அமைந்திருக்கிறது. மிகப்பெரும் நகரின் மத்தியில் சனச்செறிவான பல உயர் நிறுவனங்கள் கொலுவீற்றிருக்கும் நகரின் மத்தியில் இப்பெரிய எழுத்துக்களில் தமிழைக் காணும் தோறும் மனம் பெருமிதத்தில் விம்மும்.

இப்படம் எடுக்கப்பட்டது 17.3.1017.
எடுத்தவர்: யசோதா.ப.










Thursday 9 February 2017

அவுஸ்திரேலிய முத்திரைகளும் அதன் பண்பாட்டுப் பெறுமதியும்

 ஒவ்வொரு நாடுகளும் தத்தம் நாடுகளின் அழகை; கலையை; பண்பாட்டை;வாழ்வியலை; சிறப்புகளை; வரலாறை தபால் தலைகளாக வெளியிடும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றன. அதன் பொருட்டு தபால்தலை சேகரிப்பு ஒரு சிறந்த பொழுது போக்காகவும் கருதப்படுகிறது.

ஒரு நாட்டின் தபால் தலைகளில் அந் நாடுகளின் இயல்பு மிளிரும் காரணத்தால் நாடுகாண் பயணங்களை மேற்கொள்ளும் உல்லாசப் பயணிகள் தபாலகங்களுக்குச் சென்று முத்திரைகளை வாங்கிச் சேகரிக்கும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். அதன் காரணமாக தபாலகங்களில் விசேட சேகரிப்புக்கான மையங்களும் தகவல் வழங்கு நிலையங்களும் உள்ளன. அவர்களோடு பதிவுகளை மேற்கொள்ளுவதன் மூலம் அடுத்து அந் நாடுகளில் வெளியாகும் முத்திரைகள் பற்றிய தகவல்களையும் அவற்றை வாங்கும் வசதிகளையும் ஒவ்வொரு நாடுகளின் பிரதான தபாலகங்களும் கொண்டிருக்கின்றன.

கீழே காணப்படும் மூன்று படங்களும் (முத்திரைகளும்) அவுஸ்திரேலியாவுக்கு முதன் முதலில் (1787) வெள்ளையர்கள் குடிவந்த காட்சியை விபரிக்கிறது.


37 சதப் பெறுமதி கொண்ட இம் முத்திரைகளில் முதலாவது முத்திரை அவுஸ்திரேலியக் கண்டத்தில் நிர்வாண தேகத்தினராக அப்போதிருந்த அபிரோஜினல் மக்கள் கப்பல் ஒன்றின் வருகையைப் பார்த்த படி நிற்பதையும் இரண்டாவது முத்திரை தாக்குதலுக்குத் தம்மைத் தயார் செய்து கொள்ளுவதையும் மூன்றாவது முத்திரை கப்பல் நெருங்குவதையும் இந் நாட்டுக்கு மட்டுமே உரித்தான உயிரினங்களான கங்காருகள் (அபிரோஜினல்களுக்கான குறியீடு)  அக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருப்பதையும் நான்காவது முத்திரை கங்காருகள் இருந்த இடத்தில் வெள்ளைக் கொக்குகள் (வெள்ளையர்களுக்கான குறியீடு) காணப்படும் அதே நேரம் ஒரு கப்பல் நகர்ந்து அப்பால் போவதையும் கடசி முத்திரை வெள்ளையர்கள் தம் பிரித்தானியக் கொடியை நாட்டி நிமிர்வதையும் காணலாம்.


ஒரு வரலாறு முத்திரையாகிய காட்சி!


இன்று அவுஸ்திரேலியா ஒரு பல்கலாசார நாடு. அதனை அது தன் பலமென சொல்லுகின்ற காரணத்தால் சகல மக்களின் பண்பாட்டு கலாசார வாழ்வியலுக்கும் மதிப்பளிக்கிறது. அதனையும் முத்திரைகள் பிரதி பலிக்கின்றன. அண்மையில் (ஜனவரி 28) அது தன் சேவல் வருடத்தைக் கொண்டாடியது. அதனைக் காட்சிப்படுத்தும் விதமான வடிவங்களும் பதாகைகளும் சிட்னி மாநகர் எங்கிலும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. 

அவர்களின் நம்பிக்கைகளை கெளரவிக்கும் விதமாக 2014 இல் அவர்களின் புது வருடமான குதிரை வருடத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட முத்திரைகளை கீழே காணலாம். அதனோடு அதன் சோதிட நம்பிக்கைகள் நம்பிக்கைகள் பற்றிய அட்டை காணப்படுதலும் கவனிக்கத் தக்கது.












அண்மைய காலங்களில் குறிப்பாக இலத்திரனியல் தொழில் நுட்பத்தின் வருகையால் வாழ்வியலில் ஏற்பட்ட மாற்றங்களின் விளைவாக முத்திரைகளுக்குப் பதிலாக பெறுமதிகள் மாத்திரம் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர்கள் அஞ்சல் தலைகளாக உருமாற்றம் பெறுவதும் அண்மைக்காலமாக அவதானிக்கத் தக்க மாற்றமாக இருக்கிறது.