Thursday 13 July 2023

பிளாஸ்டிக் பைகள்

 அவுஸ்திரேலியாவில் பிளாஸ்டிக் பைகளுக்கான தடை அரசாங்கத்தினால் சட்டபூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது.

அங்காடிகள், பேரங்காடிகள், விற்பனை நிறுவனங்கள், ஆகியன மெல்ல மெல்ல பிளாஸ்டிக் பைகளின் பாவனையை இல்லாது செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உட்பட்டிருக்கிறார்கள். 

கடந்த வருடம் இந்தச் சட்டம் அமுலுக்கு வந்தாலும் பொருள்களை வாங்கச் செல்லும் மக்களிடம் துணியிலோ அல்லது காகிதத்திலோ செய்யப்பட்டும் பைகளைக் கொண்டு செல்லும் பழக்கம் இதற்கு முன்னர் காணப்படாததால் மீண்டும் மிண்டும் பாவிக்கத்தக்க பிளாஸ்டிக் பைகளுக்கு விற்பனை நிறுவனங்கள் மாறியதோடு அவற்றுக்கு வரியாகச் சிறு தொகைப் பணத்தையும் அறவிட்டு வந்தார்கள்.

இப்போது படிப்படியாக அவற்றின் பாவனைகளும் அருகி வருவதோடு மக்கள் தாமே பைகளைக் கொண்டுவர அறிவுறுத்துவதோடு அவற்றைக் கொண்டு வராதவிடத்து காகிதத்தில் செய்யப்படும் பைகளை விலை கொடுத்து வாங்கி பொருட்களை தூக்கிச் செல்லவேண்டிய கட்டாயத்துக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

பிளாஸ்டிக்கின் பாவனையைத் தடைசெய்து மக்களின் மனங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும் இந் நன்முயற்சிக்கு பல பெரு நிறுவனங்கள் தம் பச்சைக் கொடியைக் காட்டி வருகின்றன.  

பெருநிஉவனங்கள் சிலவற்றில் கடைசியாகப் பாவனையில் இருந்த பிளஸ்டிக் பைகளின் காட்சிப்படம் உங்கள் பார்வைக்காக.


படப்பிடிப்பு: யசோதா.பத்மநாதன்.
இடம்: வெண்ட்வேர்த்வில் நகரசபை நூலக விளம்பரப் பலகை.
எசுத்த திகதி: 8.7.2023.

கீழே இடம் பெறுவது பேரங்காடிகளில் காகித பைகளுக்கு முன்பாக - இறுதியாக பாவனையில் இருந்த பிளாஸ்டிக் பைகள்.














படப்பிடிப்பு: யசோதா.பத்மநாதன்.
திகதி: 9.7.2023. ஞாயிற்றுக் கிழமை.

இவற்றுக்குப் பதிலாக அறிமுகப்படுத்தப்படும் 30 சதத்திலிருந்து  $2.00 வரை விற்பனையாகும் கைப் பைகள்









படப்பிடிப்பு: யசோதா.பத்மநாதன்.
திகதி: 9.7.2023. ஞாயிற்றுக் கிழமை
இடம்: கைவசம் இருந்த பொருள்கள்

தற்காலங்களில் அரச மற்றும் அரச சார்பற்ற  நிறுவனங்களும் விற்பனை நிலையங்களும் தத்தம் பெயர்கள், சுலோகங்களைப் போட்ட பைகளை இலவசமாகக் கொடுப்பதன் வழியாகத் தம்மை விளம்பரப் படுத்துவதோடு மக்களின் தொடர்ந்த பாவனைக்கும் அவற்றை உபயோகிக்கும் வகையில் கையளித்து வருகிறார்கள். அவற்றுள் சில கீழே வருகின்றன.











விற்பனை நிலையங்களில் பலவிதமான வடிவங்களிலும் அளவுகளிலும் கூட பலவித மீள பாவிக்கத் தக்க பைகள் விற்பனையில் இருக்கின்றன. கைப்பைகளுள் கச்சிதமாக எடுத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட பைகளும் அவற்ருள் இருப்பதைக் காண்க. இவைகள் எல்லாம் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக அரச அரச சார்பற்ற நிறுவனங்களாலும் விற்பனை நிலையங்களாலும் இலவசமாகவும் சிறிதளவு பணத்திற்கும் அளிக்கப் படுவன. அவற்றுள் சில கீழே வருகின்றன.











இவை போல ஏராளமான வடிவங்கள், திணுசுகள், தோற்றங்கள், அளவுகளில் துணிப்பைகள் புழக்கத்தில் உள்ளன.  ஒரு தடவை வருவது வேறொரு சந்தர்ப்பத்தில் கிடைக்கப் பெறுவதில்லை. அவை காலத்திற்குக் காலம் புது வித மோஸ்தர்களில் மக்களின் விருப்பத்தெரிவுக்கு ஏற்ப கிடைக்கின்றன. 

துணிகளினால் செய்யப்படும் இத்தகைய பைகள் இனி கடைகளில் நிறைய விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கலாம்.

படப்பிடிப்பு: யசோதா.ப.

திகதி:8.7.2023.

இடம்: வீட்டில் இருந்தவை.



No comments:

Post a Comment