அவுஸ்திரேலியாவில் பொதுமக்கள் சென்று வருவதற்கான போக்குவரத்து சேவைகளில் தொடரூந்து சேவைக்குத் தனியான ஓரிடம் உண்டு. நகரங்களுக்கு தனிப்பட்ட வாகனங்களில் செல்லுவது இடநெருக்கடி, வாகனத்தரிப்பிடச் சிக்கல் மற்றும் நேர விரயம் பணவிரயம் என பல சிக்கல்கள் இருப்பதால் வேலைக்காக நகர் புறங்களுக்குப் போகின்ற பெரும்பாலானவர்கள் தொடரூந்து சேவைகளையே பாவித்து வருகிறார்கள்.
தொடரூந்து சேவைகள் உள்ளூருக்குள் மாத்திரமல்லாது நாட்டின் ஏனைய மாநிலங்களை இணைக்கும் வகையில் மாநிலங்களுக்கிடையேயும் சேவையில் ஈடுபடுகின்றன.
கீழே காட்டப்பட்டிருக்கின்ற ஒளிப்படங்கள் சென்றல் தொடரூந்து நிலையத்தில் இருந்து மெல்போர்ன் என்ற விக்ரோரிய மாநிலத்திற்குச் செல்லும் ரயிலையும் சென்றல் பேரூந்து நிலையத்தையும் காட்டுகிறது.
இந்த ஒளிப்படங்கள் கைத்தொலைபேசியால் 18.2.2022 அன்று எடுத்து இன்று பதிவேற்றம் செய்யப்படுகிறது.
திகதி:18.2.2022
No comments:
Post a Comment