Wednesday, 12 July 2023

ஹெலன்ஸ்பேர்க் சிவா விஷ்னு ஆலயம்

வெங்கடேஷ்வர விஷ்னு ஆலயம் சிட்னி மாநகரில் இவ்வருடம் 2023 ஏப்பிரல் மாதத்தில் வந்த 7 -10 நாட்கள் வரையான நாட்களின் தன் குடமுழுக்கு எனப்படும் கும்பாபிஷேகத்தை சிறப்பாக நிறைவேற்றி இருந்தது.

மூன்று கோபுரங்களும் அகன்ற விமானங்களும் நான்கு சுற்றுப் பிரகாரங்களும் கலசங்களும் கொண்டமைந்ததாக இன்று விளங்கும் இவ்வாலயம்  1985ம் ஆண்டு கட்டப்பட்டதாகும். சிவா விஷ்னு ஆலயம் என அறியப்படும் இவ்வாலயம் கடற்கரையை அண்மித்ததாக ஆனால் கடல் மட்டத்தில் இருந்து 400 அடி உயரத்தில் சினியில் இருந்து Wollongong செல்லும் Grand Pacific Drive ல் 140 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது.

உள்ளே படங்கள் எடுக்க அனுமதி இல்லாததால் வெளிப்புறத் தோற்றம் மட்டும் இங்கு காட்சிக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலயத்தினைப் பற்றிய மேலதிக விபரங்களைப் பெற கீழே உள்ள ஆலயத்தின் அதிகாரபூர்வ இணையத்தளத்தின் முகவரியை அழுத்துவதன் மூலம் பெற முடியும்.

ஹெலன்ஸ்பேர்க் சிவாவிஷ்னு ஆலய இணையத்தளம்





















படப்பிடிப்பு: யசோதா.பத்மநாதன்
30.06.2023

No comments:

Post a Comment