1. அரச தமிழ் பிரசுரம் காண இங்கே அழுத்தவும்
‘கோவிட்-சேஃப்’ பயன்பாட்டிற்கான தகவல் பாதுகாப்புக் கொள்கை
உங்களைப் பற்றிய தகவல்கள் எவ்வாறு
நிர்வகிக்கப்படுகின்றன என்பதைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.
இந்தப் பக்கத்தில்:
·
ஒருவரைப் பற்றித் திரட்டப்படும்
தகவல்கள் யாவை, மற்றும் அவை ஏன் திரட்டப்படுகின்றன?
·
ஒருவரைப் பற்றிய தகவல்கள் எவ்வாறு
திரட்டப்படும்?
·
ஒருவரைப் பற்றிய தகவல்கள் எவ்வாறு
இருப்பில் வைக்கப்படும்?
·
ஒருவரைப் பற்றிய தகவல்கள் எவ்வாறு
பயன்படுத்தப்படும் மற்றும் வெளிப்படுத்தப்படும்?
·
ஒருவரைப் பற்றிய தகவல்களை நீக்கம்
செய்ய இயலுமா?
·
ஒருவரைப் பற்றிய தகவல்களைப் பயனர்
ஒருவரால் திருத்த அல்லது அடைய இயலுமா?
·
தகவல் பாதுகாப்பு குறித்த மேலதிகத் தகவல்கள்
‘கோவிட்சேஃப்’ தகவல்பாதுகாப்புக்கொள்கையினைஆங்கிலம்அல்லாதமற்றமொழிகளில்வாசியுங்கள்
‘கோவிட்-19’(COVID-19)-இன் பரவலை நிறுத்துவதற்காக இந்த நோய் உள்ளவர்களோடு தொடர்பில்
இருந்தவர்களைக் கண்டறிவதற்காக மாநில மற்றும் எல்லைப்பகுதி சுகாதார அதிகாரிகளுக்கு (சுகாதார அதிகாரிகள்) உதவ ‘கோவிட்-சேஃப் ஆப்’
(COVIDSafe) எனும் பயன்பாட்டினை, ‘டிஜிட்டல் டிரான்ஸ்ஃபர்மேஷன் ஏஜென்ஸி’யின் உதவியுடன் ‘ஆஸ்திரேலிய சுகாதாரத் திணைக்களம்’அமல்படுத்திவருகிறது.
திடீர் நோய்த்தொற்றுப் பரவல் ஒன்றிற்கான எதிர் நடவடிக்கைகளை
மேற்கொள்வதில் நோய்த்தொற்று உள்ளவர்களோடு நெருக்கமாக இருந்தவர்களைக் கண்டறிவது முக்கியமானதொரு
பகுதியாகும். ‘கோவிட்-19’ உள்ளவர்களோடு நெருக்கமாகஇருந்திருப்பவர்களை
அடையாளம் காணும் செயல்முறையாகும் இது. இப்படிச் செய்வதால் இந்த நோய் மேலும் பரவுவதைத்
தடுக்க உதவுவதற்கு (சோதனைகளை மேற்கொள்வது அல்லது தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்வது போன்ற)
நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர்களுக்கு அறிவுரைக்கலாம்.
‘தகவல் பாதுகாப்பு சட்டம் 1988’ (Privacy Act 1988) -இற்கு இணங்க ‘கோவிட்-சேஃப்’
மூலமாகச் சேகரிக்கப்படும் தகவல்கள் எப்படிக் கையாளப்படும் என்பதை இந்தத் தகவல் பாதுகாப்புக்
கொள்கை கோடிட்டுக் காண்பிக்கிறது.‘கோவிட்-சேஃப்ஆப்’ பாவிப்பாளர்களின்பாதுகாப்புமற்றும்இந்த
‘ஆப்’-இன்மூலம்சேகரிக்கப்படும்தகவல்களின்பாதுகாப்புஆகியவற்றைவலுப்படுத்துவதற்காக,மே,
2020-இல் ‘தகவல்பாதுகாப்புத்திருத்த (பொதுசுகாதாரநோய்த்தொற்றுத்தொடர்புத்தகவல்கள்)
சட்டம் 2020’ (Privacy
Amendment (Public Health Contact Information) Act 2020)-இனால்இந்தசட்டம்திருத்தப்பட்டது.
‘Digital
Transformation Agency’(நாங்கள்,எம்மை,எமது) எனும்முகமை ‘தேசியகோவிட்-சேஃப்தகவல்இருப்புவைப்புநிர்வாகி’யாகஇருக்கும்என்று
‘சுகாதாரத்திணைக்களத்தின்செயலாளர்தீர்மானித்துள்ளார். இந்தத்தகவல்பாதுகாப்புக்கொள்கைமற்றும்
‘தகவல்பாதுகாப்புசட்டம் 1988’ (Privacy
Act 1988) ஆகியவற்றிற்குஇணக்கமானமுறையில்மட்டுமேஇந்தமுகமையானதுஉங்களைப்பற்றியத்தகவல்களைத்திரட்டும்,பயன்படுத்தும்அல்லதுவெளிப்படுத்தும்.
இந்த ‘ஆப்’-ஐநீங்கள்பயன்படுத்தும்போதுதிரட்டப்படும்உங்களைப்பற்றியதகவல்களைஅடையும்வசதி
‘ஆஸ்திரேலியசுகாதாரத்திணைக்களத்திற்குக்கிடையாது.
உங்களைப் பற்றிய எந்தெந்தத் தகவல்கள் சேகரிக்கப்படும், மற்றும் அவை சேகரிக்கப்படுவது
ஏன்?
‘கோவிட்-சேஃப்’ பயன்பாட்டிற்காக நீங்கள் பதிவு செய்து, அதைப்
பாவித்து அதில் தகவல்கள் பதிவாகும்போது, நோய்த்தொற்று இருக்கும் ஒருவரோடு யார் நெருக்கமாகஇருந்திருக்கிறர்கள்
என்பதைக் கண்டறிவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்தத் தகவல்களை நாங்கள் சேகரிப்போம்.
‘கோவிட்-சேஃப்’ பயன்பாட்டிற்காக நீங்கள் பதிவு செய்யும்போது:
உங்களைப் பற்றிய பின்வரும் தகவல்களைச் சேகரிக்கச் சம்மதிக்குமாறு
உங்களைக் கேட்போம்:
·
மொபைல் தொலைபேசி இலக்கம் - நோய்த்தொற்று இருக்கும் ஒருவரோடு யார் நெருக்கமாக இருந்திருக்கிறார்கள்
என்பதைக் கண்டறிய உங்களுடன் தொடர்புகொள்வதற்காக
·
பெயர் - நோய்த்தொற்று இருக்கும் ஒருவரோடு யார் நெருக்கமாக இருந்திருக்கிறார்கள்
என்பதைக் கண்டறிய முயற்சிக்கும் தக்க சுகாதார அதிகாரிகள் தாம் சரியான நபரோடுதான் பேசுகிறோம்
என்பதை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக. உங்களுடைய முழுப் பெயரையும் நீங்கள் கொடுத்தால்
இது எளிதாக இருக்கும், ஆனாலும், நீங்கள் விரும்பினால் ஒரு புனைப்பெயரை அல்லது போலிப்
பெயரைப் பாவிக்கலாம்.
·
வயது வீச்சு - தேவைப்பட்டால், நோய்த்தொற்று இருக்கும் ஒருவரோடு யார் நெருக்கமாக
இருந்திருக்கிறார்கள் என்பதைக் கண்டறிவதில் யாருக்கு முந்துரிமை கொடுப்பது என்பதை சுகாதார
அதிகாரிகள் தீர்மானிக்க
·
அஞ்சல் குறியீட்டு இலக்கம் - சரியான மாநிலம் அல்லது எல்லைப்பகுதியைச் சேர்ந்த உங்கள் பகுதியில்
பணியாற்றும் சுகாதார அதிகாரிகள் உங்களுடன் தொடர்புகொள்வதற்கும், நோய்த்தொற்று இருக்கும்
ஒருவரோடு யார் நெருக்கமாக இருந்திருக்கிறார்கள் என்பதைக் கண்டறிவதில் யாருக்கு முந்துரிமை
கொடுப்பது என்பதைத் தீர்மானிக்கவும். உதாரணமாக, நோய்ப்பரவல் அதிகம் உள்ள பகுதிகளில்
உள்ளவர்கள்.
நீங்கள் 16 வயதிற்குக் கீழ்ப்பட்டவர் என்றால், உங்களது பதிவு
மற்றும் தொடர்பு விபரங்களைச் சேகரிக்க உங்களது பெற்றோர் அல்லது பாதுகாவலர் சம்மதம்
அளிக்க வேண்டியிருக்கும்.
‘கோவிட்-சேஃப்’-ஐ நீங்கள் பாவிக்கும்போது
நோய்த்தொற்று உள்ளவரோடு நீங்கள்
கொண்ட தொடர்பைப் பற்றியப் பின்வரும் விபரங்களை மட்டுமே உங்களுடைய ‘பயன்பாடு’
பதிவு செய்யும்: (1) ‘சங்கேதப்படுத்தப்பட்ட பயனர் அடையாளம்’ (encrypted user ID), (2) நோய்த்தொற்று உள்ளவரோடு நெருக்கமான தொடர்பு ஏற்பட்ட திகதி மற்றும் நேரம்
(3) நீங்கள் நெருக்கமாய் இருந்துள்ள மற்ற ‘கோவிட்-சேஃப்’ பயன்பாடு உள்ளவர்களுடைய ‘ப்ளூ-டூத்
சிக்னல்’-இன் வலிமை, மற்றும் (4) நீங்கள் தொடர்பு
நெருக்கத்திற்கு வரும் மற்ற ‘கோவிட்-சேப்ஃ’பயனர்களுடைய தொலைபேசியின் ‘தயாரிப்பு மற்றும் மாதிரி’ (make and model). மற்ற பயனர்களுடைய சாதனங்களிலும்
இந்தத் தகவல்கள் பதிவாகும், மற்றும் சங்கேதப்படுத்தப்பட்ட
வடிவில் இருப்பில் வைக்கப்படும்.
ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் ஒரு புதிய ‘சங்கேதப்படுத்தப்பட்ட
பயனர் அடையாளம்’ உருவாக்கப்படும். நோய்த்தொற்று இருப்பவரோடு யார் நெருக்கமாக இருந்திருக்கிறார்கள்
என்பதைக் கண்டுபிடிக்க முயற்சிக்கும்போது உங்களை அடையாளம் காண வேண்டிய தேவை ஏற்பட்டால்,
‘டிஜிட்டல் டிரான்ஸ்ஃப்ஃர்மேஷன் ஏஜென்சி’-யினால் இயக்கப்படும் ‘தேசிய கோவிட்-சேஃப்
தகவல் கிடங்’(National COVIDSafe data store (data store))குடன்
இது இணைக்கப்படும்.
எவ்வொரு வேளையிலும் எந்த இடம் (உங்களுடைய நடமாட்டத்தை அவதானிக்கப்
பயன்படுத்தப்படக்கூடிய விபரங்கள்) என்பதைப் பற்றிய விபரங்கள் சேகரிக்கப்படாது. தகவல்கள்
சங்கேதப்படுத்தப்பட்டிருக்குமாதலால், தமது பயன்பாட்டில் உள்ள தகவல்களை எவ்வொரு பயனராலும்
பார்க்க இயலாது. தொடர்பு விபரங்களை ‘அசங்கேதப்படுத்த’ச் செய்யப்படும் முயற்சி எதுவும்
ஒரு குற்றச்செயலாக அமையும். ஒரு சாதனத்தில் சேகரிக்கப்பட்டுள்ள தொடர்புவிபரங்கள்
21 நாட்களுக்குப் பிறகு தானாகவே நீக்கப்பட்டுவிடும்.
தகவல் கிடங்கில் தகவல்களை ஏற்றம் செய்வதற்கு ‘கோவிட்-சேஃப்’
பயனர் ஒருவர் சம்மதித்தாலொழிய, ஒரு சாதனத்தில் சேகரிக்கப்பட்டுள்ள தகவல்கள் எதையும்
அடையவோ அல்லது சுகாதார அதிகாரிகளுடன் அவற்றைப் பகிர்ந்துகொள்ளவோ எம்மால் இயலாது.
‘கோவிட்-19’ உங்களுக்கு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால்
ஒரு ‘அடையாளக் குறி’ (PIN) ஒன்றை உருவாக்கி அதைக் குறுஞ்செய்தி மூலமாக உங்களுக்கு அனுப்புவதற்காக
உங்களுடைய மொபைல் தொலைபேசி இலக்கத்தினைத் தகவல் கிடங்கில் ஏற்றம் செய்வதற்கு உங்களுடைய
சம்மதத்தினைக் கேட்டு சுகாதார அதிகாரி ஒருவர் உங்களுடன் தொடர்புகொள்வார்.
உங்களுக்கு அனுப்பப்பட்ட ‘அடையாளக் குறி’ (PIN) யை நீங்கள்
உள்ளிட்டால், உங்களுடைய சாதனத்திலுள்ள தொடர்பு விபரங்களை தகவல் கிடங்கிற்கு ஏற்றம்
செய்ய நீங்கள் சம்மதம் அளிப்பீர்கள். நோய்த்தொற்று உள்ள ஒருவரோடு யார் நெருக்கமாக இருந்திருக்கிறார்கள்
என்பதைச் சுகாதார அதிகாரிகள் கண்டுபிடிக்க
அவர்களுடன் இவை பகிர்ந்துகொள்ளப்படும்.
இந்த சாதனத்தைப் பாவிக்கும் இன்னொரு பயனருக்கு ‘கோவிட்-19’ இருப்பது
உறுதிப்படுத்தப்பட்டால், அவருடைய தொடர்பு விபரங்களை அவர் ஏற்றம் செய்யலாம், இதில் அவர்
உங்களோடு கொண்ட தொடர்பைப் பற்றிய விபரங்கள் இருக்கக்கூடும்.
உங்களைப் பற்றிய தகவல்கள் எவ்வாறு சேகரிக்கப்படும்?
‘கோவிட்-சேஃப்’-ஐப் பயன்படுத்துவது முற்றிலும் சுயவிருப்பாகும். ‘கோவிட்-சேஃப்’-ஐ நீங்கள் எவ்வேளையிலும் நிறுவிக்கொள்ளலாம்
அல்லது நீக்கம் செய்துவிடலாம்.
‘கோவிட்-சேஃப்’-ஐ நீங்கள் பயன்படுத்துவதன் ஒரு பகுதியாக, நாங்கள்
சேகரிப்பது:
·
குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்பட்ட ‘அடையாளக் குறி’யை நீங்கள்
வெற்றிகரமாக உள்ளிட்டதையடுத்து, உங்களுடைய பதிவு விபரங்கள்
·
உங்களுடைய சாதனத்தில் ‘கோவிட்-சேஃப்’ திறந்திருக்கும்போது அல்லது
இயங்கிக்கொண்டிருக்கும்போது, உங்களுடைய சங்கேதப்படுத்தப்பட்ட பயனர் அடையாளம் (user ID)
·
உங்களுடைய தொடர்பு விபரங்களை நீங்கள் ஏற்றம் செய்ய ஏது செய்வதற்காக
சுகாதார அதிகாரி ஒருவர் உங்களுக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்புவதற்கு நீங்கள் சம்மதிக்கும்போது,
‘கோவிட்-19’ உங்களுக்கு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்ற தகவல்
·
உங்களுக்குக் ‘கோவிட்-19’ இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால்,மற்றும் உங்களுடைய தொடர்பு விபரங்களை உங்களுடைய
சாதனத்தில் ஏற்றம் செய்யும் தெரிவினை நீங்கள் மேற்கொண்டால், உங்களைப்
பற்றிய தொடர்பு விபரங்கள்.
·
இன்னொரு ‘கோவிட்-சேஃப்’ பயனருக்கு ‘கோவிட்-19’
இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு, அவருக்கு மற்றவர்களோடு நேரிட்ட தொடர்புகளைப்
பற்றிய விபரங்களை ஏற்றம் செய்யும் தெரிவினை அவர் மேற்கொண்டால், அவற்றில் அவருக்கு
உங்களோடு ஏற்பட்ட தொடர்பைப் பற்றிய விபரங்களும் இருக்கக்கூடும்.
‘கோவிட்-சேஃப்’-ஐ நிறுவுமாறு அல்லது அதைத் தொடர்ந்து பாவிக்குமாறு,
அல்லது தொடர்பு விபரங்களைத் தகவல் கிடங்கிற்கு ஏற்றம் செய்யச் சம்மதிக்குமாறு எந்தப் பயனருக்கும் அழுத்தம் தரப்படலாகாது. ‘தகவல்பாதுகாப்புசட்டம் 1988’(Privacy Act 1988)-இன் கீழ்
இது தடை செய்யப்பட்டுள்ளது. இவற்றில் எதையும் செய்யுமாறு அழுத்தம் தரப்படுவதாக நீங்கள்
நினைத்தால், நீங்கள்Office of the Australian Information
Commissionerமற்றும்/அல்லது ‘ஆஸ்திரேலியஃபெடரல்காவல்துறை(Australian Federal Police)-க்கு முறைப்பாடு ஒன்றைச்
சமர்ப்பிக்கலாம்.
உங்களைப் பற்றிய தகவல்கள் எவ்வாறு இருப்பில் வைக்கப்படும்?
பதிவுத் தகவல்கள், சங்கேதப்படுத்தப்பட்ட பயனர் அடையாளக் குறிகள்
மற்றும் தொடர்பு விபரங்கள் ஆகிய அனைத்தையும் தகவல் கிடங்கில் நாங்கள் இருப்பில் வைப்போம்.
இந்தத் தகவல் கிடங்கானது ஆஸ்திரேலியாவிலுள்ள கட்டமைப்புக்களைப் பாவிக்கும் ஒரு ‘cloud’அடிப்படையிலான வசதியாகும், மற்றும் இது ‘பாதுகாக்கப்பட்ட’ அளவிற்கு காப்புத்தன்மை உள்ளவாறு தகவல்களை இருப்பில் வைப்பதற்கு
ஏற்றது என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
‘தகவல் பாதுகாப்பு சட்டம் 1988’ (Privacy Act 1988)-இனால் வேண்டப்படுவதைப் போல, சுகாதார அமைச்சரால் தீர்மானிக்கப்படும் ‘கோவிட்-சேஃப் தகவல் காலம்’இறுதியுறும்போது,
கூடிய விரைவில் தகவல் கிடங்கில் உள்ள
அனைத்துத் தகவல்களையும் நாங்கள் நீக்கிவிடுவோம்.
நோய்தொற்றுள்ள ஒருவரோடு
தொடர்பு ஏற்பட்டதிலிருந்து 21 நாட்களுக்குப் பிறகு உங்கள் சாதனத்திலுள்ள தொடர்பு
விபரங்கள் தானாகவே நீக்கப்பட்டுவிடும். ‘கோவிட்-சேஃப்’-ஐ உங்களுடைய சாதனத்திலிருந்து
நீங்கள் அகற்றினாலும், உங்களுடைய தொடர்பு விபரங்களைத் தகவல் கிடங்கிற்கு நீங்கள் ஏற்றம்
செய்தாலும் அவை நீக்கப்பட்டுவிடும்.
உங்களைப் பற்றிய தகவல்கள் எவ்வாறு பயன்படுத்தப்படும் மற்றும் வெளிப்படுத்தப்படும்?
நோய்த்தொற்று உள்ள ஒருவரோடு நெருக்கமாய்இருந்திருப்பவர்களைக்
கண்டுபிடிக்க சுகாதார அதிகாரிகளுக்கு ஏது செய்வதற்காக உங்களைப் பற்றிய தகவல்களை நாங்கள்
பயன்படுத்துவோம் அல்லது வெளியிடுவோம். இதில் உள்ளடங்குவன:
·
உங்களுடைய இலக்கத்தினை உறுதிப்படுத்துவதற்காக உங்களுக்குக் குறுஞ்செய்தி
ஒன்றை அனுப்ப, அல்லது உங்களுடைய தொடர்பு விபரங்களை ஏற்றம் செய்ய உங்களுடைய மொபைல் தொலைபேசி
இலக்கத்தைப் பயன்படுத்துவது
·
‘கோவிட்-19’ இருப்பதாக
உறுதிப்படுத்தப்பட்டுள்ள ஒரு ‘கோவிட்-சேஃப்’ பயனருடன் கடந்த 21 நாட்களில் நெருக்கமாய்
இருந்த மற்ற ‘கோவிட்-சேஃப்’ பயனர்களை அடையாளம் காண்பதற்காக ஏற்றம் செய்யப்பட்ட தொடர்பு
விபரங்களில் இருக்கும் சங்கேதப்படுத்தப்பட்ட பயனர் அடையாளக் குறிகளைப் பயன்படுத்துவது
(நோயுள்ளவரோடு நெருக்கமாயிருந்த பயனிகள் (contact users))
·
நோய்த்தொற்று உள்ள ஒருவரோடு நெருக்கமாக இருந்திருப்பவர்களைக்
கண்டுபிடிப்பதற்காக, அப்படிப்பட்டவர்களுடைய
பதிவுத் தகவல்களையும், தொடர்பு விபரங்களையும் சுகாதாரஅதிகாரிகள் அடையும் வசதியைக் கொடுத்தல்
நோய்த்தொற்று
உள்ளவரோடு நெருக்கமாய் இருந்த மற்ற பயனர்கள் அவர்களுடைய மாநில அல்லது எல்லைப்பகுதி
அரசினால் வேண்டப்படும் (தனிமைப்படுத்திக்கொள்வது போன்ற) நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு
அறிவுரைக்கப்படலாம். இந்த நடவடிக்கைகளுக்கு இணங்காமல் இருப்பது ஒரு மாநில அல்லது எல்லைப்பகுதியின்
சட்டத்தினை மீறுவதாக இருக்கக்கூடும்.
உங்களைப் பற்றிய விபரங்களைப் பின்வரும் நோக்கங்களுக்காகப் பாவிக்கவும்,
பின்வருவோருக்கு நாங்கள் வெளிப்படுத்தவும் கூடும்:
·
‘கோவிட்-சேஃப்’ அல்லது தகவல்
கிடங்கின் சரியான இயக்கத்தையும், அதன்
நாணயம் அல்லது பாதுகாப்பினையும் உறுதிப்படுத்துவதற்காக
·
‘கோவிட்-சேஃப்’ மூலமாகச்
செய்யப்பட்டுள்ளப் பதிவுகளின் மொத்த எண்ணிக்கையைப் பற்றிய அடையாளம் நீக்கப்பட்ட
புள்ளி-விபரத் தகவல்களைத் தயாரிக்க
·
தகவல் கிடங்கில் வைக்கப்பட்டுள்ள
உங்களைப் பற்றிய தகவல்களை நீக்குமாறு நீங்கள் வேண்டும்போது, சரியான தகவல்கள்தான்
நீக்கப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்த
·
‘தகவல் பாதுகாப்பு சட்டம் 1988’-இன்
‘பகுதி VIIIA’ -இன் கீழ், அல்லது இத்துடன் சம்பந்தப்பட்ட செயற்பாடுகளை மேற்கொள்ள அல்லது
அதிகாரத்தைச் செலுத்தத் ‘தகவல் ஆணைய’(Information Commissioner)ருக்கு
·
அவசியப்பட்டால்,‘தகவல் பாதுகாப்பு
சட்டம் 1988’-இன் ‘பகுதி VIIIA’
-இன் கீழ்,புலன்விசாரணை மற்றும் அத்துமீறல்களை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தும்
காரணங்களுக்காக.
வேறெந்த காரணத்திற்காகவும் உங்களைப் பற்றிய விபரங்களை நாங்கள்
பயன்படுத்தவோ, வெளிப்படுத்தவோ மாட்டோம்.
உங்களைப் பற்றிய தகவல்களை நீக்க இயலுமா?
‘கோவிட்-சேஃப்’-ஐநீங்கள் எச்சமயத்திலும் அகற்றியும் விடலாம்.
உங்களுடைய சாதனத்தில் இருப்பில் வைக்கப்பட்டுள்ள அனைத்துத் தகவல்களையும் இது தானாகவே
நீக்கிவிடும், மற்றும் நோய்த்தொற்று உள்ளவர்களோடு நீங்கள் கொண்ட தொடர்புகளைப் பற்றிய
தகவல்களை மற்ற பயனர்கள் சேகரிப்பதையும் இது நிறுத்தும்.
‘கோவிட்-சேஃப்’-ஐ அகற்றுவது ஏற்கனவே தகவல் கிடங்கில் ஏற்றம்
செய்யப்பட்டுள்ள தகவல்களை, அல்லது நோய்த்தொற்றுள்ள ஒருவரோடு நீங்கள் கொண்டிருந்த தொடர்புகளைப்
பற்றி இன்னொரு பயனருடைய சாதனத்தில் கடந்த 21 நாட்களில் சேர்க்கப்பட்டுள்ள தகவல்கள்
எதையும் தானாகவே நீக்காது. இந்தத் தகவல்களை
இப்போதும் தகவல் கிடங்கிற்கு ஏற்றம் செய்து, நோய்த்தொற்று உள்ளவர்களோடு தொடர்பில் இருந்தவர்களைக்
கண்டறியும் நோக்கங்களுக்காக இவற்றைப் பாவிக்கலாம் . தகவல் கிடங்கில் ஏற்றப்பட்டுள்ள
உங்களுடைய நோய்த்தொற்றுத் தொடர்பு விபரங்களில் எதையும் நீங்கள் நீக்க விரும்பினால்,
நேரடியாக நீங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை நீக்குமாறு
‘திணைக்கள’த்தினைக் கேட்கலாம்(ask us to delete your information).
பயனர் ஒருவரால் தன்னைப் பற்றியத் தகவல்களைத் திருத்தவோ அல்லது அடையவோ இயலுமா?
நீங்கள்:
·
‘கோவிட்-சேஃப்’-ஐ அகற்றி அதை மீண்டும் நிறுவுவதன் மூலம் உங்களுடைய
பதிவு விபரங்களை மாற்றலாம்.
·
எம்முடன் தொடர்புகொள்வதன் மூலம் தகவல் கிடங்கில் நாங்கள் வைத்திருக்கும்
பதிவு விபரங்களை நீக்கலாம்
·
‘கோவிட்-சேஃப்’-இல் சரியான தகவல்களைப் பதிவு செய்யலாம்.
உங்களுடைய ‘கோவிட்-சேஃப்’ தகவல்களுக்கு அதிகபட்சப் பாதுகாப்பு
இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில், தகவல் கிடங்கில் வைக்கப்பட்டுள்ள உங்களைப் பற்றியத்
தகவல்களை உங்களால் அடைய இயலாது.
தகவல் பாதுகாப்பைப் பற்றிய மேலதிகத் தகவல்கள்
‘கோவிட்-சேஃப்
ஆப்’ மற்றும் உங்களுடைய ‘தகவல் பாதுகாப்பு உரிமைக’(privacy rights)ளைப் பற்றிய மேலதிகத்
தகவல்களுக்கு - ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் ‘கோவிட்-சேஃப் ஆப்’ -இற்கு ‘தகவல்
பாதுகாப்பு சட்டம் 1988’ எவ்வாறு பொருந்துகிறது என்பதை ‘ஆஸ்திரேலிய தகவல் ஆணையர்
அலுவலகம்’(Office of
the Australian Information Commissioner)கோடிட்டுக் காண்பிக்கிறது.
எம்முடன்தொடர்புகொள்ளுங்கள்
‘கோவிட்-சேஃப்’ தகவல் பாதுகாப்பு குறித்த விசாரிப்புகள்
மற்றும் முறைப்பாடுகள்
‘கோவிட்-சேஃப்’
தகவல்பாதுகாப்பைப்பற்றிமேலதிகமாகத்தெரிந்துகொள்ளஅல்லதுதகவல்பாதுகாப்பைப்பற்றியவிசாரிப்புஅல்லதுமுறைப்பாடுஒன்றைச்செய்ய
எம்முடன் தொடர்புகொள்ளுங்கள்.
தகவல்பாதுகாப்புஅதிகாரி privacy@dta.gov.au
தொலைபேசி 02 6120 8707
அஞ்சல் முகவரி
Digital Transformation Agency
GPO Box 457, Canberra, ACT 2601
‘தகவல்
பாதுகாப்பு அதிகாரி’(Privacy
Officer)யானவர் பொதுவான
விசாரிப்புகளை ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் ‘சுகாதாரத் திணைக்கள’த்திற்கு மறுமொழிக்காக அனுப்புவார். தகவல் பாதுகாப்பு குறித்த எவ்வொரு
தனிப்பட்ட முறைப்பாடுகளையும்,தகவல் பாதுகாப்பு
அத்துமீறல்கள்களையும் விசாரணைக்காக ‘ஆஸ்திரேலிய தகவல் ஆணையர்
அலுவலக’(Office of
the Australian Information Commissioner)த்திற்கு
அனுப்பவேண்டும் என்ற தேவைப்பாட்டை உள்ளடக்கிய ‘தகவல்
பாதுகாப்பு சட்டம் 1988’’-இன் ஏற்பாடுகளின் பிரகாரம் ‘தகவல் பாதுகாப்பு அதிகாரி’ (Privacy Officer) கையாளுவார்.
மாறாக, நீங்கள்:
·
‘ஆஸ்திரேலிய
தகவல் ஆணையர் அலுவலக’(Office of the Australian Information Commissioner)த்திற்கு நேரடியாக முறைப்பாடு ஒன்றைச்
செய்யலாம், மற்றும்/அல்லது
·
‘ஆஸ்திரேலிய
ஃபெடரல் காவல்துறை’(Australian Federal Police)க்கு முறைப்பாடு ஒன்றைச் செய்யலாம்.
கடைசியாகப்
புதுப்பிக்கப்பட்டது:
07 ஜூலை 2020
தொடர்வுகள்(Tags):
·
தொற்றுநோய்கள் (Communicable diseases)
·
அவசரகாலசுகாதாரகவனிப்பு (Emergency health management)
No comments:
Post a Comment