Sunday, 16 August 2020

கொரோனா வைரஸ் குறித்த அரச தமிழ் துண்டு பிரசுரங்கள் - 9 -

 


நிதிநிலை மற்றும் மன நலத்திற்கான உதவி

‘கொரோனா வைரஸ்’-இன் காரணமாகச் சமாளிப்பதற்குச் சிரமமான சூழ்நிலைகள் பல எழுந்துள்ளன. இவை நமது நிதிநிலை மற்றும் மனநல ஆரோக்கியம் மற்றும் பொது நலம் ஆகிய இரண்டையுமே பாதித்துள்ளன. நித்திரை கொள்வதில் பிரச்சினைகள், நிலையற்ற மன நிலைகள், குறைந்துவிட்ட ஊக்கம் அல்லது உறவுகளில் பிரச்சினைகள் ஆகியவற்றிற்கு நீங்கள் ஆளாகிக்கொண்டிருக்கக்கூடும். இப்படிப்பட்ட நேரங்களில், உங்களால் எங்கு உதவி நாட இயலும் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டியது முக்கியம்.

 

ஆதரவுதவி சேவைகள்

உங்களுடைய வாழ்க்கைப்பாணியில் ஏற்பட்டுள்ள பெரும் மாற்றங்களின் காரணமாக நீங்கள் கவலைப்படுவதும், பதற்றமாக இருப்பதும், அல்லது மன அழுத்தத்திற்கு ஆட்படுவதும் சாதாரணமானதே. குடும்பத்தினர் மற்றும் நண்பர்களோடு பேசுவது அல்லது சுகாதாரத் தொழிலளர் ஒருவரோடு தொடர்புகொள்வது உங்களுக்கு உதவிகரமாக இருக்கக்கூடும். பதற்றமாகவும், பிரச்சினைகளைச் சமாளிப்பதில் சிரமப்பட்டுக்கொண்டிருப்பவர்களுக்கும் உதவக்கூடிய பின்வருவனவற்றை உள்ளடக்கிய பலதரப்பட்ட சேவைகள் உள்ளன:

 

‘ஹெட் டு ஹெல்த்’(Head to Health)

தகவல்கள், அறிவுரை மற்றும் பலதரப்பட்ட சேவகளுக்கு www.headtohealth.gov.au எனும் வலைத்தளத்திற்குச் செல்லுங்கள்.

 

உயிர்காப்பு இணைப்பு (Lifeline )

இந்தப்பெருந்தொற்றுக் காலத்தில் உங்களுடைய மன நலனைப் பராமரித்துக்கொள்வது குறித்த உதவி மற்றும் யோசனைக் குறிப்புகளுக்கு www.lifeline.org.au எனும் வலைத்தளத்திற்குச் செல்லுங்கள், அல்லது 13 11 14-ஐ அழையுங்கள்.

 

‘பியோண்ட் ப்ளூ’ (Beyond Blue)

1800 512 348-ஐ அழைத்து மூலம் நீங்கள் பெற இயலுமான சேவைகள் ‘பியோண்ட் ப்ளூ’ -இடம் உள்ளது.www.coronavirus.beyondblue.org.au எனும் வலைதளத்திற்கும் நீங்கள் செல்லலாம்.

 

‘குழந்தைகள் உதவி இணைப்பு’ (Kids helpline)

குழந்தைகளுக்கும் இள வயதினருக்குமான சேவைகளை இந்த அமைப்பு வழங்குகிறது. மேலதிக சேவைகளுக்கு www.kidshelpline.com.auஎனும் வலைத்தளத்திற்குச் செல்லுங்கள், அல்லது 1800 551 800-ஐ அழையுங்கள்.

 

‘ஹெட்ஸ்பேஸ்’ (Headspace)

இள வயதினருக்கான ஆதரவுதவி சேவைகளுக்கு www.headspace.org.auஎனும் வலைத்தளத்திற்கு நீங்கள் செல்லலாம்.

 

‘ஆஸ்திரேலிய ஆடவர் உதவி இணைப்பு’(MensLine Australia)

ஆண்களுக்கான இலவச ஆதரவுதவி மற்றும் அறிவுரையாலோசனை சேவைகளை ‘ஆஸ்திரேலிய ஆடவர் உதவி இணைப்பு’ வழங்குகிறது. மேலதிகத் தகவல்களுக்கு 1300 789 978-ஐ அழையுங்கள் அல்லது www.mensline.org.au எனும் வலைத்தளத்திற்குச் செல்லுங்கள்.

 

நீங்களோ, உங்களுக்குத் தெரிந்த வேறொருவரோ உதவி தேவைப்படும் நெருக்கடி நிலையில் இருந்தால், தயவுசெய்து 000-வை அழையுங்கள். 

 

நிதி நிலை உதவி

கொரோனா வைரஸ்-இனால் பாதிக்கப்பட்ட நபர்கள், வர்த்தகங்கள் மற்றும் ‘ஒற்றை-வர்த்தகர்க’(sole traders)ளுக்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் நிதியுதவி அளித்துவருகிறது.

 

இது ‘சர்வீசஸ் ஆஸ்திரேலியா’ (Services Australia) மூலம் கிடைக்கிறது, மற்றும் வருமான ஆதரவுதவி மற்றும் குடும்பங்களுக்கான ஆதரவுதவி ஆகியன இதில் உள்ளடங்கும். www.servicesaustralia.gov.au/covid19எனும் வலைத்தளப் பக்கத்திற்குச் செல்வதன் மூலம், அல்லது 131 202-ஐ அழைப்பதன் மூலம் இதைப் பற்றி நீங்கள் மேலும் தெரிந்துகொள்ளலாம்.

 

ஓய்வு பெற்றவர்களுக்கு, ஓய்வுகால நிதிகளில் இருந்து முன்னதாகவே பணம் எடுக்கும் வசதியையும், குறைந்தபட்ச ‘பணம் எடுப்பு வீதத்’ (drawdown rate) தெரிவுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய உதவிகளையும்‘ஆஸ்திரேலிய வரியிறுப்பு அலுவலகம்’ (Australian Taxation Office) அளிக்கிறது. ‘பண ஓட்ட’(cash flow)த்திற்கு வலுவூட்டுதல் மற்றும் ‘ஜாப்-கீப்பர்’ கொடுப்பனவுகள் ஆகியவற்றின் மூலமாகவும் தகுதி பெறும் வர்த்தகங்களுக்கு உதவிகள் கிடைக்கின்றன. www.ato.gov.au/coronavirus எனும் வலைத்தளப் பக்கத்தில் நீங்கள் இதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளலாம்.

 

நிதி ஆலோசகர் ஒருவரிடமிருந்து இலவச, சுயாதீன மற்றும் தனிப்பட்ட அறிவுரையையும் நீங்கள் பெறலாம். ‘தேசியக் கடன்-பாக்கி உதவி இணைப்’(National Debt Helpline)பினை 1800 007 007-இல் தொடர்புகொள்வதன் மூலம் நீங்கள் இந்த வசதியை அணுகலாம்.

 

‘மொழிபெயர்ப்பு மற்றும் மொழிபெயர்த்துரைப்பு சேவை’  (Translating and Interpreting Service)

நீங்கள் ஆங்கிலம் பேசாதவர் என்றால், 131 450-இல்  ‘மொழிபெயர்ப்பு மற்றும் மொழிபெயர்த்துரைப்பு சேவை’-யுடன் நீங்கள் தொடர்புகொள்ளலாம்.

உங்களுடைய மொழி பேசும்மொழிபெயர்த்துரைப்பாளர் ஒருவருடன் அவர்கள் உங்களுக்கு இணைப்பு ஏற்படுத்திக் கொடுப்பார்கள். பிறகு, நீங்கள் தொடர்புகொள்ள விரும்பும் அமைப்பின் பெயர் மற்றும் தொலைபேசி இலக்கம் ஆகியவற்றை உங்களிடமிருந்து கேட்பார்கள்.

 

தொலைபேசி இயக்குனர் உங்களையும், மொழிபெயர்த்துரைப்பாளரையும் நீங்கள் பேசவிரும்பும் அமைப்புடன் தொடர்புபடுத்திக்கொண்டிருக்கும்போது இணைப்பில் காத்திருங்கள். 

 

மேலதிகத் தகவல்கள்

அதிகாரபூர்வமான மூலங்களிலிருந்து தகவல்களைப் பெறவேண்டும் என்பது முக்கியம். மிகச் சமீபத்திய அறிவுரை மற்றும் ஒவ்வொரு மாநிலம் மற்றும் எல்லைப்பகுதிக்கான இணைப்புகளைப் பெறwww.australia.gov.au எனும் வலைத்தளத்திற்குச் செல்லுங்கள். உங்களுடைய குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சமூகத்தினரைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வதற்காக ‘கோவிட்-சேஃப் ஆப்’ (COVIDSafe app) எனும் பயன்பாட்டினை இறக்கம் செய்வது குறித்தும் நீங்கள் யோசிக்கவேண்டும்.


No comments:

Post a Comment