அரச இணைப்பினைக் காண இங்கே அழுத்தவும்
தகவல் ஏடு
‘கொரோனா வைரஸ் (கோவிட்-19)’-ஐப் பற்றி
நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விடயங்கள்
கோவிட்-19’என்பது புதிய வைரஸ் ஒன்றினால்
ஏற்படுத்தப்படும் சுவாச சம்பந்தப்பட்ட நோயாகும். சுரம், இருமல்,
தொண்டை வலி, மற்றும் மூச்சு வாங்கல் ஆகியன
இந்த நோய்க்கான அறிகுறிகளில் உள்ளடங்கும். இந்த வைரஸ் ஒருவரிடமிருந்து
இன்னொருவருக்குப் பரவக்கூடும், ஆனாலும், நல்ல சுகாதாரப் பழக்கவழக்கங்களினால் இந்த நோய்த்தொற்றினைத் தடுக்க இயலும்.
இந்த ஆபத்து யாருக்கு இருக்கிறது என்பதையும், உங்களுக்குக் ‘கோவிட்-19’இருக்கிறது என்று நீங்கள்
நினைத்தால்நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.
‘கோவிட்-19’
என்பது என்ன?
‘கொரோனா வைரசுகள்’ என்பவை சுவாச நோய்த்தொற்றுக்களை ஏற்படுத்தும் ஒரு பெரிய வைரஸ் குடும்பம். சாதாரண சளியில் இருந்து பாரதூரமான நோய்த்தொற்றுக்கள் வரைக்கும் இந்த தொற்றுகளின் வீச்சு இருக்கக்கூடும்.
‘கோவிட்-19’என்பது புதிய வகை வைரஸ் ஒன்றினால் ஏற்படுத்தப்படும் நோய். சீனாவிலுள்ள
வுஹான் நகரத்தில் டிசம்பர் 2019-இல் இது இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
‘கோவிட்-19’நோயின்
அறிகுறிகள்
‘கோவிட்-19’நோயின் அறிகுறிகளின் வீச்சு சாதாரண சுகவீனத்தில் இருந்து தீவிரமான ‘நுரையீரல் கபவாதம்’(‘நிமோனியா’) வரைக்கும் இருக்கலாம். இந்த நோயிலிருந்து
சிலர் விரைவாகவும் சுலபமாகவும் குணமடையக்கூடும், மற்றும்
ஏனையோர் வெகு விரைவில் நோய்வாய்ப்படக்கூடும்.
‘கோவிட்-19’நோயறிகுறிகளில் பின்வருவன உள்ளடங்கும்:
· சுரம்
·
இருமல்
·
தொண்டை வலி
·
மூச்சு வாங்கல்
உங்களுக்குக் ‘கோவிட்-19’இருக்கக்கூடும்
என்று நீங்கள் கவலைப்பட்டால்:
·
‘ஹெல்த்டைரெக்ட்’வலைத்தளத்திலுள்ள ‘நோயறிகுறிகள்
சோதனி’ (symptom
checker)-ஐப் பாருங்கள்.
·
1800 020 080-இல் ‘தேசிய கொரோனா
வைரஸ் உதவி இணைப்பினை அழைத்து மருத்துவ அறிவுரையை நாடுங்கள். இந்தத் தகவல் இணைப்பு
சேவையானது நாளுக்கு 24 மணி நேரமும், வாரம் ஏழு நாட்களும்
இயங்குகிறது. நீங்கள் ஆங்கிலம் பேசாதவர் என்றால், 131 450-ஐ அழைத்து ‘மொழிபெயர்ப்பு மற்றும்
மொழிபெயர்த்துரைப்பு சேவை’யினை நீங்கள் பயன்படுத்தலாம்.
·
நீங்கள் வருவதற்கு முன்பாகவே
உங்களுடைய மருத்துவர் அல்லது மருத்துவமனையுடன் சந்திப்புவேளை ஒன்றை
ஏற்படுத்திக்கொள்ளுங்கள்
·
உங்களுடைய உள்ளூர்ப்
பகுதியிலுள்ள மாநில அல்லது எல்லைப்பகுதி சுகாதாரத் தினைக்களத்துடன் தொடர்புகொண்டு
நோயறிவுச் சோதனையைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.
இது
எப்படிப் பரவுகிறது?
‘கோவிட்-19’நோயானது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பின்வரும் வழிகள் மூலமாகப்
பரவுகிறது:
·
நோய்த்தொற்று உள்ள ஒரு நபரோடு
நெருங்கிய தொடர்பு (நோயறிகுறிகள் ஏற்படுவதற்கு முன்பான 48 மணி நேரம் உள்ளடங்க)
·
நோய்த்தொற்று உள்ள ஒருவருடைய இருமல் அல்லது
தும்மலின் திரவத் துகள்களுடன் தொடர்பு
·
நோய்த்தொற்று உள்ள ஒருவருடைய
இருமல் அல்லது தும்மலின் திரவத் துகள்கள் படிந்துள்ள பொருட்கள் அல்லது பரப்புகளைத்
(கதவின் கைப்பிடிகள் அல்லது மேசைகள் போன்றவை) தொட்ட பிறகு உங்களுடைய வாய் அல்லது
முகத்தைத் தொடுதல்
No comments:
Post a Comment