Sunday, 16 August 2020

கொரோனா வைரஸ் குறித்த அரச தமிழ் துண்டுப்பிரசுரங்கள் - 20 -

 அரசாங்க இணைப்பைக் காண இங்கே அழுத்தவும்

சுகாதாரம்

சுகாதாரத் தகவல்கள்

கொரோனா வைரஸ் நோய் அறிகுறிகளில் உள்ளடங்குவன:

  • சுரம்
  • இருமல்
  • தொண்டை நோவு
  • களைப்பு
  • மூச்சு வாங்கல்

நீங்கள் சுகவீனமாக இருந்து, உங்களுக்குக் ‘கொரோனோ வைரஸ்’ தொற்று ஏற்பட்டிருப்பதாக நீங்கள் நினைத்தால், மருத்துவ உதவியை நாடுங்கள்.

இதைப் பற்றிய தகவல்களுக்கு ‘தேசிய கொரோனா வைரஸ் உதவி இணைப்’(National Coronavirus Helpline)பினை நீங்கள் அழைக்கலாம். மொழிபெயர்ப்பு அல்லது மொழிபெயர்த்துரைப்பு சேவைகள் தேவைப்பட்டல், 131 450 -ஐ நீங்கள் அழைக்கலாம்.

சுவாசிப்பதில் சிரமம் போன்ற பாரதூரமான நோய் அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால், அவசர மருத்துவ உதவிக்காக ‘000’-வை அழையுங்கள்.

பாதுகாப்பாக இருப்பதற்கும், சமூகத்தினருக்கு ஏற்படும் ஆபத்துகளை மட்டுப்படுத்துவதற்கும் மக்களுக்கு உதவுவதற்காக ஆங்கிலம் அல்லாத பிற மொழிகளில் உள்ள பல வகையான தகவல்கள் ‘சுகாதார திணைக்கள’த்தின் வலைத்தளத்தில் உள்ளன

‘கோவிட்-19’ நோயறிவுச் சோதனை மற்றும் இதற்கான சிகிச்சை

உங்களுக்கு விசா எதுவும் இல்லை என்றாலும், அல்லது உங்களுடைய விசா நிலவரம் என்ன என்பதைப் பற்றி உங்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை என்றாலும் கூட, பொது சுகாதரத் துறையினருடைய அறிவுறுத்தல்களை நீங்கள் கட்டாயமாகப் பின்பற்றியாக வேண்டும். உங்களுக்கு உடல் நலம் சரியில்லை என்றால், மருத்துவ கவனிப்பை நாடுங்கள், மற்றும் ‘கோவிட்-19’ நோய்த்தொற்றிற்கான சோதனையை மேற்கொள்ளுங்கள். மாநில மற்றும் எல்லைப்பகுதி அரசுகள் ‘கோவிட்-19’ நோயறிவுச் சோதனையையும், இதற்கான சிகிச்சையையும் இலவசமாக அளிக்கின்றன.

பாதுகாப்பாக இருங்கள்

  • அனைத்துவேளைகளிலும் நல்ல சுகாதாரப் பழக்கங்களைக் கடைப்பிடியுங்கள், சோப்பு மற்றும் தண்ணீரைப் பாவித்துக் குறைந்தபட்சம் 20 நொடி நேரத்திற்கு உங்கள் கைகளைக் கழுவுங்கள், இருமல்களை மூடுங்கள், கண்கள், மூக்கு மற்றும் வாயைத் தொடுவதைத் தவிருங்கள்.
  • வீட்டிற்கு வெளியே இருக்கும்போது குறைந்தபட்சமாக 1. 5 மீட்டர் இடைவெளியுள்ள ‘சமுக விலக’லைப் பின்பற்றுங்கள்.
  • கை குலுக்கல், அணைப்புகள் மற்றும் முத்தங்கள் போன்ற உடல்ரீதியான சமூக வரவேற்புப் பழக்கங்களைத் தவிருங்கள்.
  • பணமாகத் தராமல், கார்டு (tap and go) மூலமாகப் பணம் செலுத்துங்கள்.
  • அமைதியான நேரங்களில் பயணம் செய்யுங்கள் மற்றும் கூட்டங்களைத் தவிருங்கள்.
  • சரியான தகவல்களைத் தெரிந்துகொள்ளுங்கள் - நம்பிக்கைக்குரிய அதிகாரபூர்வமான தகவல்களை மட்டுமே பாவியுங்கள். மிகச் சமீபத்திய தகவல்களுக்கு ‘கொரோனா வைரஸ் ஆஸ்திரேலியா மொபைல் ஃபோன் ஆப்’ (Coronovirus Australia mobile phone app)-ஐ வலையிறக்கம் செய்யுங்கள், ‘கொரோனா வைரஸ் ஆஸ்திரேலியா வாட்ஸ்-ஆப்’ (Coronovirus Australia WhatsApp service) சேவையைப் பெறுங்கள், மற்றும் www.australia.gov.au எனும் வலைத்தளத்திற்குச் செல்லுங்கள்.

வயது கூடியோருக்கான ‘கோவிட்-19’ உதவி இணைப்பு (Older Persons COVID-19 Support Line)

‘வயது கூடியோருக்கான ‘கோவிட்-19’ உதவி இணைப்பு’ (Older Persons COVID-19 Support Line) எனும் சேவையானது வயது கூடிய ஆஸ்திரேலியர்களுக்குத் தகவல்கள் மற்றும் உதவிகளை அளித்து அவர்களுக்குத் தொடர்புகளை ஏற்படுத்தித் தருகிறது.

சில வயதானவர்கள் ‘கோவிட்-19’-இனால் பாதிக்கப்படும் நிலையில் இருப்பார்கள், ஆனால் அவர்களுக்கு இண்ட்டெர்னெட் இணைப்பு வசதி அதிகம் இருக்காது, ஆகவே அவர்களுடைய சூழ்நிலைகளுக்கேற்ற தகவல்களைப் பெறுவதற்கான வழிகள் அவர்களுக்குத் தேவைப்படும். ‘வயது கூடியோருக்கான ‘கோவிட்-19’ உதவி இணைப்பு’ (Older Persons COVID-19 Support Line) எனும் உதவி இணைப்பு இவர்களுக்குத் தகவல்கள் மற்றும் உதவிகளை அளிக்கிறது.

பின் வரும் தருணங்களில், வயது கூடிய ஆஸ்திரேலியர்கள், அவர்களது குடும்பத்தினர்கள், நண்பர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் ஆகியோர் 1800 171 866 எனும் இலக்கத்தினை இலவசமாக அழைக்கலாம்:

  • ‘கோவிட்-19’ கட்டுப்பாடுகளைப் பற்றியும், இதனால் அவர்கள் மீது ஏற்படும் தாக்கத்தைப் பற்றியும் அவர்கள் யாருடனாவது பேச விரும்பினால்
  • தனித்துவிட்டதைப் போன்ற உணர்வு அவர்களுக்கு இருந்தால், அல்லது அவர்களுடைய அன்பிற்குரிய ஒருவருடன் அவர்கள் பேச விரும்பினால்
  • அவர்கள் யாரையாவது பராமரித்துவந்தால், மற்றும் அவர்களுக்குத் தகவல்கள் தேவைப்பட்டால், அல்லது பேசுவதற்கு யாராவது வேண்டும் என்றால்
  • அவர்கள் பெற்றுவரும் முதியோர் பராமரிப்பு சேவைகளை மாற்றிக்கொள்வதைப் பற்றிய உதவி அல்லது அறிவுரை தேவைப்பட்டால்
  • புதிய பராமரிப்பு சேவைகளைப் பெறுவது, அல்லது அத்தியாவசியமான பொருட்களைக் கடையில் வாங்குவது போன்றவற்றில் அவர்களுக்கு உதவி தேவைப்பட்டால்
  • தங்களைப் பற்றி, அல்லது மறதிநோயுடன் வாழ்ந்துவரும் நண்பர் அல்லது குடும்ப அங்கத்தவர் ஒருவரைப் பற்றி அவர்கள் கவலைப்பட்டுக்கொண்டிருந்தால்
  • தங்களுக்கோ, வேறு ஒருவருக்கோ ஒரு-முறை செய்யப்படும் அல்லது தொடர்ந்து அவ்வப்போது செய்யப்படும் உடல்நலப் பரிசோதனைகளை ஏற்பாடு செய்ய அவர்கள் விரும்பினால்.

வயது கூடிய ஆஸ்திரேலியர்கள், அவர்களுடைய உறவினர்கள், பராமரிப்பாளர்கள், நண்பர்கள் அல்லது உதவியாளர்களால் செய்ய இயலுமானவை:

  • 1800 171 866 -ஐ அழைக்கலாம்
  • வார வேலை நாட்களில், காலை 8.30 முதல் மாலை 6 மணி வரை ‘ஆஸ்திரேலியக் கிழக்கு நேரம்’ (AEST)
  • அவர்களுக்குத் தேவைப்படக் கூடிய தகவல்கள் அல்லது சேவைகள் எதற்காகவும் அழைக்கலாம்.

உண்மைத் தாள்கள்


No comments:

Post a Comment