Sunday 16 August 2020

கொரோனா வைரஸ் குறித்த அரச தமிழ் துண்டு பிரசுரங்கள் - 8 -

 

அரச இணைப்பினைக் காண இங்கே அழுத்தவும் 

‘கோவிட்-சேஃப் ஆப்’ (COVIDSafe app) எனும் ‘பயன்பாட்’டினைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள்வேண்டிய விடயங்கள் கீழே தரப்பட்டுள்ளன:

‘கோவிட்-சேஃப் ஆப்’ -ஐ 5 மில்லியன் ஆஸ்திரேலியர்கள் ஏற்கனவே இறக்கம் செய்துள்ளனர். மொபைல் தொலைபேசி வைத்திருக்கும் அனைத்து ஆஸ்திரேலியர்களும் இந்தப் ‘பயன்பாட்’டினைப் பாவிப்பதன் மூலம் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கும், கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கும் உதவுமாறு ஊக்க்குவிக்கப்படுகின்றனர்.

 

‘கோவிட்-சேஃப் ஆப்’ என்பது என்ன?

‘கோவிட்-சேஃப் ஆப்’ என்பது ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் குறைக்க உதவும் ஒரு புதிய பொது சுகாதார சாதனமாகும். கொரொனா வைரஸ் உள்ள ஒருவரோடு தொடர்பில் இருந்திருப்பவர்களுக்கு அதைத் தெரிவிக்கும் செயல்பாட்டினைத் துரிதப்படுத்துவதன் மூலம் ஆஸ்திரேலியர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க இது உதவும். நல்ல சுகாதாரப் பழக்கவழக்கங்களையும், உடல்ரீதியான விலகலையும் பின்பற்றுவது, மற்றும் அதிக மக்களுக்கு நோயறிவுச் சோதனைகளை அளிப்பது ஆகியவற்றிற்கும் மேலாக இந்தப் ‘பயன்பாடு’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

உங்களுடைய அன்றாட அலுவல்களை நீங்கள் மேற்கொண்டுவரும் அதே நேரத்தில் உங்களுடைய தொலைபேசியின் பின்னணியிலிருந்து இந்தப் ‘பயன்பாடு’ இயங்கிக்கொண்டிருக்கும். ‘கோவிட்-சேஃப் ஆப்’-ஐப் பயன்படுத்தும் மற்ற தொலைபேசிகளைக் கண்டறிந்து, திகதி, நேரம், தொலைவு மற்றும் தொடர்புகொண்டிருந்த நேரப்பகுதி ஆகிய விபரங்களை ‘ப்ளூ-டூத்’-ஐப் பயன்படுத்தி இது பதிவுசெய்யும். நீங்கள் இருக்கும் இடத்தை இந்தப் ‘பயன்பாடு’ பதிவு செய்யாது. 1.5 மீட்டர் இடைவெளிக்குள்ளாக, 15 நிமிடம் அல்லது அதற்கு மேற்பட்ட நேரத்திற்கு நீங்கள் அருகாமையில் இருந்திருக்கும் சாதனத்தை இந்தப் பயன்பாடு பதிவு செய்யும்.

இந்தத் தகவல்கள் சங்கேதப்படுத்தப்பட்டு உங்கள் தொலைபேசியில் உள்ளப் பயன்பாட்டில் இருப்பில் வைக்கப்படும். உங்களால் கூட இதை அடைய இயலாது.

தொடர்பு விபரங்கள் இந்தப் பயன்பாட்டில்21 நாட்களுக்கு மட்டுமே இருப்பில் வைக்கப்படும், மற்றும் இதற்குப் பிறகு தானாகவே நீக்கம் செய்யப்பட்டுவிடும். இந்த வைரஸ் தொற்று முற்றுவதற்குத் தேவைப்படும் 14 நாட்களும், நோய்த்தொற்றை உறுதிப்படுத்துவதற்கான சோதனைக்குத் தேவைப்படும் காலமும் இதில் அடங்கும்.

இந்தப் பயன்பாட்டினை நான் நிறுவுவது எப்படி?

‘ஆண்ட்ரோய்ட்’ மற்றும் ‘iOS’ஆகியவற்றைப் பாவித்து ‘ஆப் ஸ்டோர்க’ளில் இருந்து இதை நீங்கள் இறக்கம் செய்யலாம். இந்தப் ‘பயன்பாடு’ இலவசம் மற்றும் இதை இறக்கம் செய்துகொள்வது உங்களுடைய சுயவிருப்பம்.

இறக்கம் செய்த பிறகு, ஒரு பெயர், தொலைபேசி இலக்கம், அஞ்சல் குறியீடு மற்றும் வயது வீச்சு ஆகியவற்றை உள்ளிடுவதன் மூலம் நீங்கள் பதிவுசெய்துகொள்ளலாம்.

‘கோவிட்-19’ நோய்த்தொற்று ஒரு ஆபத்தாக இல்லாதபோது, ‘கோவிட்-சேஃப் ஆப்’-ஐ உங்களுடைய தொலைபேசியிலிருந்து நீக்கம் செய்யுமாறு நீங்கள் அறிவுறுத்தப்படுவீர்கள். உங்களுடைய ‘பயன்பா’ட்டில் சேமிக்கப்பட்டிருக்கும் அனைத்துத் தகவலகளையும் இது நீக்கிவிடும்.

 சமூகத்தினரைப் பாதுகாக்க ‘கோவிட்-சேஃப்’ எவ்வாறு உதவுகிறது?

உங்களுக்குக் ‘கோவிட்-19’ இருக்கிறது என்று கண்டறியப்பட்டால், சமீபத்தில் நீங்கள் யாரோடெல்லாம் தொடர்பில் இருந்திருக்கிறீர்கள் என்பதைப் பற்றிய தகவல்களை மாநில மற்றும் எல்லைப்பகுதி அதிகாரிகள் உங்களைக் கேட்பார்கள். இந்தப் ‘பயன்பா’ட்டினை நீங்கள் உங்கள் தொலைபேசியில் நிறுவியிருந்தால், இதிலுள்ள தகவல்களைச் சுகாதார அதிகாரிகளுக்குக் கொடுக்கும் தெரிவினை நீங்கள் மேற்கொள்ளலாம் (நீங்கள் யாரோடெல்லாம் நெருங்கிய தொடர்பில் இருந்திருக்கிறீர்கள் என்பதை இது பதிவு செய்திருக்கும்). அவர்களுடன் அதிவிரைவில் தொடர்புகொண்டு இந்த வைரஸ் மேலும் பரவுவதைத் தடுக்க சுகாதார அதிகாரிகளுக்கு இது உதவும். 

இந்தத் தகவல்களை யார் பயன்படுத்துவார்கள்?

உங்களுடைய மாநிலம் அல்லது எல்லைப்பகுதியிலுள்ள சுகாதார அதிகாரிகளுக்கு மட்டுமே இந்தத் தகவல்கள் கிடைக்கும், மற்றும் உங்களுடன் தொடர்புகொண்டுப் பின்வரும் விடயங்களை உங்களுக்குத் தெரிவிப்பதற்காக மட்டுமே இவை பயன்படுத்தப்படும்:

·         நீங்கள் இனி என்ன எதிர்பார்க்கவேண்டும்

·         நீங்கள் உங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டுமா இல்லையா என்பது

·         எப்படி, எப்போது மற்றும் எங்கே நோயறிவுச் சோதனையை நீங்கள் மேற்கொள்ளலாம், மற்றும்

·         உங்களையும், உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களையும் நீங்கள் எப்படிப் பாதுகாத்துக்கொள்ளலாம்.

‘கோவிட்-19-ஐப் பற்றிய மேலதிகத் தகவல்கள்

அதிகாரபூர்வமான மூவளங்களிலிருந்து நடப்புச் செய்திகளை அவ்வப்போதுத் தெரிந்துகொள்ளவேண்டியது முக்கியம். australia.gov.auஎனும் வலைத்தளத்திற்குச் செல்லுங்கள், 1800 020 080-இல் ‘தேசிய கொரோனா வைரஸ் உதவி இணை’(National Coronavirus Helpline)ப்பினை அழையுங்கள் அல்லது 131 450-இல் ‘மொழிபெயர்ப்பு மற்றும் மொழிபெயர்த்துரைப்பு சேவை’ (Translating and Interpreting Service)-ஐ அழையுங்கள்.

No comments:

Post a Comment