iron lace என்று சொல்லக் கூடிய இரும்பு அலங்கார ஓரங்களைக் கொண்ட வீடுகள் அவுஸ்திரேலிய பாரம்பரிய வீடுகளில் இருக்கும் ஓர் அழகியல் சார்ந்த அம்சம். காலப்போக்கில் அது மரத்தினால் அலங்கரிக்கப்பட்டும் இருந்திருக்க வேண்டும் என்று அனுமானிக்க முடிகிறது. வீட்டின் வெளிப்புற மூலைகள் அவ்வாறாக அலங்கரிக்கப்பட்டிருப்பதை இன்றும் ஆங்காங்கே காண முடிகிறது..
கூடவே மர வேலிகள்; அவற்றுக்கு வெள்ளை அல்லது பழுப்பு வண்ண வர்ணம் அடிப்பது; மற்றும் அருகருகாக இரண்டு கூரைகள் கொண்ட வீடுகள்; இன்னும் தனித்துவமாக பழமையைப் பேசியவாறு நிமிர்ந்து நிற்கின்றன.
இவைகளை மேலும் விளங்கிக் கொள்ள இலங்கையின் கல்வீடுகளில் ( சுமார் 100 வருடங்கள் பழமை கொண்ட வீடுகளில்) பாதுகாப்போடு வெளிச்சம் மற்றும் காற்று வரவும் அலங்காரத்திற்காகவும் சீமேந்தினால் செய்யப்பட்ட கல் அச்சு அலங்காரங்களை இவற்றுக்கு உதாரணமாகச் சொல்லலாம்.
இவைகளோடு கூடவே பிரதான படலை இருக்கும் இடங்கள் விஷேஷ அலங்காரங்களோடு பாதுகாக்கப் பட்டிருக்கும். நம் ஊர் ‘சங்கடப்படலை’ போன்ற அமைப்போடு! ஆனால், இங்குள்ள பிரதான வாசல்களில் (படலை) இருக்கை வசதிகள் அற்ற அதே நேரம் நிழல் அல்லது பூ பந்தல் கொண்ட சிறு கூரையோடு அவைகள் (பிரதான படலைகள்) விளங்கும்.
அவுஸ்திரேலியாவில் வேகமாக சனத்தொகை பெருகி, அடுக்குமாடிக் கட்டிடங்கள் ஒரு புறம் காளான்களைப் போல திடீர் திடீரென முளைத்து வந்தாலும் பாரம்பரிய வீடுகள்; மற்றும் பழைய மோஸ்தர் வாகனங்களின் மீது அவுஸ்திரேலியர்களுக்கு இருக்கும் மதிப்பு, மரியாதை, ஆசை, மோகம் இன்னும் முற்றாக அழிந்து போய் விடவில்லை என்றே சொல்ல வேண்டும். இன்றும் பேணிக்காக்கப்படும் ‘பழமைபேணும்’ தோற்றங்களைக் கொண்ட வெளிப்புறங்கள் அதனை மெய்ப்பிக்கின்றன.
அவுஸ்திரேலியாவை Garden country என்று பொதுவாகச் சொல்வார்கள். வீட்டின் பூந்தோட்டங்கள் மட்டுமல்லாது அவர்களின் புதிதாகக் கட்டப்படும் வீடுகளும் மிக அழகானவை. பாரம்பரிய வீடுகளும் அவற்றின் வேலிகளும் வாசல் முகப்புகளும் மேலும் தனித்துவம் வாய்ந்தவை.
பெருகிவரும் சனத்தொகையாலும் அடுக்குமாடித் தொடர் வீடுகளும் வாகனங்களும் பெருகி வரும் இந் நாட்களில், பாரம்பரிய அழகுகளோடு காணப்படும் பல வீடுகள் விற்பனைக்கு விடப்பட்டு அந்த வீடுகள் இருந்த இடங்களில் பல அடுக்குமாடிக் குடி இருப்புகள் தோன்றிய வண்ணம் உள்ளன.வசீகரமான இந் நிலத்துக்கு வழங்கப்படும் விலைகள் இவ் வகையான வீடுகள் கானாமல் போக காரணமாக அமைகிறது.
மேலும் ஒரு பரம்பரை கட்டி ஆண்ட இடம் அடுத்த பரம்பரைக்குக் கைமாறும் போது அவை நவீன மோஸ்தரில் இடித்துக் கட்டப்படும் நிலைமைகளும் உள்ளன.
இவைகள் யாவும் தவிர்க்கமுடியாத காலத்தின் கட்டாயங்கள் என்கின்ற போதும் சில பகுதிகள் விடாப்பிடியாக தன் பழமையைப் பேணும் அழகையும் ஆங்காங்கே காண முடிகிறது.
இருப்பினும் அடுத்த சில தசாப்த காலங்களில் அவைகளின் கதி என்ன ஆகும் என்பது பற்றி அதிகமாக எதுவும் எதிர்வுகூறமுடியாத நிலை இருப்பதால் நான் தற்போது வாழும் Cumperland நகரசபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் காணப்படும் சில பாரம்பரிய வீடுகள், வாசல்கள், வேலிகள், அலங்காரங்கள் போன்றவற்றை நம் எதிர்கால சந்ததியினருக்கு ஒரு சேகரிப்பாக இருக்கும் வண்ணம் இங்கு ஆவணமாகச் சேர்த்து வைப்பதற்காக இவைகளை இங்கே பதிவிடுகிறேன்.
 |
| பரமற்ரா பூங்காவில் அமைக்கப்பட்டிருக்கிற ஒரு மாதிரி வடிவம்; படலை முகப்பு |
 |
| பழைய மோஸ்தர் மாதிரி வீடு |
 |
| பழைய மோஸ்தர் வீடும் மர வேலியும் |
 |
| மர அலங்கார வேலைப்பாடு செய்யப்பட்டிருக்கும் ஒரு பாரம்பரிய வீடு |
 |
| இரு கூரைகள் கொண்ட மாதிரி அமைப்புக் கொண்ட மனை |
 |
| பழங்கால மின்சார மீற்றரை அளக்கும் கருவியை இன்றும் கொண்டிருக்கும் வீடு |
 |
| முன் விறாந்தை மாதிரி அமைப்பு கொண்ட பழைய மனை |
 |
| iron lace அலங்காரம் |
 |
| அயர்ன் லேஸ் அலங்காரம் கொண்ட மனை |
 |
| இன்னொரு வகை அயர்ன் லேஸ் |
 |
| சாளர அமைப்பைக் காண்க! |
 |
| அயர்ன் லேச் அலங்கார வேலைப்பாடு கொண்ட வேறொரு மனை |
 |
| மர வேலி |
 |
| மர அலங்கார முகப்பு கொண்ட வீடு |
 |
| மர வேலைப்பாடுகள் கொண்ட சாளர அமைப்பைக் காண்க! |
 |
| மர அலங்கார முகப்பு கொண்ட மனை |
 |
| மர அலங்கார முகப்பு கொண்ட வேறொரு மனை |
 |
| மர வேலி |
 |
| மர அலங்காரம் கொண்ட சாளரம் |
 |
| மேலுமொரு மர அலங்கார முகப்பு கொண்ட மனை |
 |
| அயர்ன் லேஸ் அலங்காரம் கொண்ட மனை |
 |
| மரவேலி |
 |
| இரட்டைக் கூரை |
 |
| மனைமுகப்பு மர அலங்காரமும் மரவேலியும் |
 |
| கூரை அருகே ஒரு மர அலங்காரம் காண்க! |
படப்பிடிப்பு: யசோதா.பத்மநாதன்
இடம்: பரமற்றாவை அண்டிய இடங்கள்.
எடுத்த திகதி: 16.09.2019
 |
| பாரம்பரிய மனை |
 |
| சாளரம் |
 |
| பாரம்பரியப் படலை |
மேலே காணப்படும் ஆறு ஒளிப்படங்களும் லிட்கம் என்ற இடத்தை அண்மித்த பகுதிகளில் எடுக்கப்பட்டவை.
படப்பிடிப்பு: யசோதா.பத்மநாதன்.
எடுத்த திகதி: 20.9.2019.
கீழே வரும் ஒளிப்படங்கள் யாவும் வெஸ்ட்மீட் என்ற பகுதியை அண்மித்த இடங்களில் எடுக்கப்பட்டவையாகும்.
படப்பிடிப்பு: யசோதா.பத்மநாதன்.
எடுத்த திகதி: 25.9.2019.
 |
| பாரம்பரியப் படலை |
 |
| அயர்ன் லேஸ் அலங்காரம் கொண்ட மனை |
 |
| பிரதான படலை பாரம்பரிய அழகோடு... |
 |
| சிதிலமடைந்து வரும் அயர்ன் லேஸ் கொண்ட மனை |
 |
| பிரதான படலை - பாரம்பரிய அழகு மிளிர.. |
 |
| பாரம்பரியப் படலையும் மர வேலியும் |
இப்பகுதிகள் யாவும் கம்பலாண்ட் நகரசபைக்கு சொந்தமான பிரதேசங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.