Sunday 8 October 2023

ரொரொஸ் ஸ்ரெயிட் பழங்குடி மக்களின் கலைப் பொருட்கள் சில

 அவுஸ்திரேலியப் பழங்குடி மக்கள் என்ற வகைப்பாட்டுக்குள் ரொரொஸ் ஸ்ரெயிட் தீவுப் பகுதி மக்களும் உட்படுத்தப் பட்டிருக்கிறார்கள்.

 அவுஸ்திரேலியாவை அண்மித்திருக்கிற தீவுப் பகுதிகளில் குடியிருக்கிற இம் மக்கள் தமக்கான தனித்துவமான மொழி, கலை, கலாசார, பண்பாட்டு அடையளைங்களைக் கொண்டிருக்கிறார்கள். தனித்துவமான சமய சம்பிருதாயங்களும் நம்பிக்கைகளும் சடங்குகளும் வாழ்க்கை விழுமியங்களும் கொண்டவர்களாக விளங்கும் அவர்கள் தோற்ற அளவில் அபொரோஜினல் மக்களை விட வேறுபட்ட தோற்ற அமைப்பைக் கொண்டவர்கள். தமக்கான தனியான கொடியும் அரசமைப்பும் கொண்டவர்கள். இருந்த போதும் அவர்கள் அவுஸ்திரேலியாவின் ஆழுகைக்கு உட்பட்டவர்கள். 

அவர்களுடய கலைப்படைப்புகள் சில அவுஸ்திரேலிய Contemporary art gallery யில் காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தன. 

 சுமார் மூன்று மாத காலங்களுக்கு இலவசமாகப் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும் இந்த கலைப் படைப்புகள் ஒவ்வொரு  மூன்று மாத காலங்களுக்கு ஒரு தடவையும் மாற்றமுற்று வேறு வேறு படைப்புகள் காட்சிக்கு வைக்கப் படும்.

அபிரோஜினல் மக்களின் மரப்பட்டை ஓவியங்களோடும் இந்தோனேஷிய நாட்டு துணி ஓவியங்களோடும் இணைந்த வகையில் காட்சிக்கு வைக்கப் பட்டிருந்த இந்த காட்சிக் காசைக்கு 5.10.2023 அன்று சென்ற போது உங்கள் பார்வைக்காக எடுத்து வந்தவை இவை.

படப்பிடிப்பு: யசோதா.பத்மநாதன்

எடுத்த திகதி: 5.10.2023.

இடம்: Contemporary art gallery, Sydney City.
















No comments:

Post a Comment