Wednesday, 24 July 2024

Minto -Shri Shiva Mandir



ஆலயத்துக்குள் நுழைந்தவுடன் தெரிகின்ற பெரிய சிவபெருமானாரின் கம்பீர சிலை,  புஜபல பராக்கிரமத்தோடு தெரிகின்ற வசீகரமான அனுமானாரின் சிலை இவற்றோடு, சமதரைக்குக் கீழே அமைந்திருக்கிறது இந்தச் சிவாலயம்.

கோயிலுக்கு இறங்கிச் செல்வதற்கு மூன்று திசைகளில் மூன்று வாசல்கள், இரண்டு சுற்றுப் பிரகாரங்கள், மூன்று தலைவாசல்களின் நடுவிலே கோபுரத்தோடு அமைந்திருக்கின்ற முன் வாசல், - இந்த முன் வாசலுக்கு முன்பாக   அதே நேரம் உட்பக்கமாக இந்தியாவின் முக்கிய திருத்தலங்களில் அமைந்திருக்கின்ற சிவலிங்கங்களின் பிரதிஷ்டை, அருகருகாக சில பரிவார தெய்வங்களுக்கான தனித்தனி இருப்பிடங்கள். உள்ளே பளிக்குக் கற்களினாலான தெய்வீகம் கமழும் தெய்வ சொரூபங்கள்.

கோயில் வளவுக்குள் ஆலயக் குருக்களுக்கான வீடுகளும் உணவு வாங்கவும் அமர்ந்து உண்ணவும் கூடியதான கூடாரமும் அருகாக திறந்தவெளி மண்டபமும் கார்தரிப்பிட வசதிகளும் சிரமபரிகார கழிப்பறை வசதிகளும் கால்களைக் கழுவி உள்ளே வருவதற்கான தண்ணீர் வசதிகளும் கொண்டாட்டங்கள் செய்யத் தக்க சிறு மண்டபம் ஒன்றும் அமைந்துள்ளன.ஆலய விருட்சம் ஒன்றும் சிறப்பாக வேலி அமைத்து பரிபாலிக்கப் பட்டு வருகின்றது.

சிட்னியில் மின்ரோ என்ற இடத்தில் அமைந்திருக்கின்ற நேபாள இந்துக்களால் போஷிக்கப் படுகின்ற இந்த இந்துத் திருத்தலம் தமிழ்நாட்டின் கட்டிடக் கலைப் பாரம்பரியத்தினின்றும் பெருமளவில் வேறுபடுவது.

இந்த இந்து சிவாலயம் பற்றிய விபரங்கள் கீழே தரப்படுகிறது.

முகவரி:
201 Eagleview Road
Minto NSW 2566

தொலைபேசி இலக்கம்:  (02) 9820 1094

மின்னஞ்சல் முகவரி:  mandirshrishiva@gmail.com

ஆலயம் தரிசனத்திற்காகத் திறக்கும் நேரங்கள்:

Mon-Fri 8:00am-12:00 noon 4:00pm-8:00pm
Weekends/Public Holidays 8:00am-8:00pm

இந்த ஆலயம் பற்றிய மேலதிக விபரங்களைக் காண அவர்களின் உத்தியோகபூர்வமான இணையத்தளத்திற்குச் செல்லலாம். அதில் இவ் ஆலயம் பற்றிய அடிப்படை விடயங்களை அறிந்து கொள்ளலாம். அதன் இணைப்பு கீழே தரப்படுகின்றது.



7.7.2024 -ஞாயிற்றுக் கிழமை நான் இந்த ஆலயத்திற்குச் சென்ற போது எடுத்த படங்களை இங்கு பதிவேற்றுகின்றேன். ஆலயத்தின் உள்ளே படங்களை எடுப்பதற்கு அனுமதி இல்லாத காரணத்தால் பொதுவான - விக்கிரகங்களை முதன்மைப்படுத்தாத கட்டிடக் கலையின் அம்சங்களை குறிப்பாக படம் எடுத்துக் கொண்டேன். பளிங்குச் சிற்பங்களின் அழகினையும் தேஜசினையும் உலகத் தமிழ் மக்களுக்குக்  காட்டுவதற்காகப் மூலஸ்தானத்தில் இல்லாத வலது புறமாகப் பரிவார தெய்வமாக அமர்ந்திருக்கின்ற சரஸ்வதி தேவியை ஒரு வரலாற்று பதிவிற்காக இங்கு பதிவேற்றுகின்றேன்.

திருத்தலமும் திருத்தலத்தாரும் அது தவறெனில் மன்னிப்பீர்களாக!









மின்ரோ ஆலய முன்புறத் தோற்றம்



ஆலய முன் கோபுரம்

சமதரையிலே இருந்து கீழ் நோக்கிச் செல்லும் உள்புறப்பாதை கீழே காட்டப்படுகிறது. படிக்கட்டுகளின் அருகே பாதணிகளைக் களற்றி வைப்பதற்கான மரத்தட்டுகள் காணப்படுகின்றன.


கீழிறங்கும் போது தெரியும் ஆலயத்தின் பக்கவாட்டுத் தோற்றம்




கீழே ஆலயத்திற்குள் செல்வதற்காக அமைந்துள்ள வழிகள்


கீழிறங்கும் படிக்கட்டு

இனி கீழே வருவன ஆலயத்திற்குள்ளே அமையாது ஆலய முற்றலிலே அமைந்திருக்கின்ற பரிவார தெய்வங்கள்.








நவக்கிரகங்கள்; அவையும் வெளியிலேயே அமைந்திருக்கிறது.

இந்தக் கோயிலில் விசேட அம்சமாக அமைந்திருப்பது இந்தியாவில் இருக்கின்ற பிரசித்தி பெற்ற சிவாலயங்களின் கருவறை உருவச் சிலைகள் இங்கு பிரதிஷ்டை செய்யப்படிருப்பது. அதன் தோற்றம் கீழே வருகிறது. இதுவும் ஆலய பிரதான வாசலின் முற்றலிலே அமைந்திருக்கிறது. அந்தச் சிவலிங்கத்தின் அருகில் அந்த ஆலயத்தின் பெயரும் பொறிக்கப்பட்டிருப்பது சிறப்பு. உயரத்தில் அமைந்திருந்த காரணத்தால் அதனைக் குறிப்பாக இங்கு எடுத்துக் காட்ட முடியவில்லை.




இனி கீழே வருவன ஆலயத்தின் உட்புறத் தோற்றம். ஆலயத்தின் பொதுவான விதிமுறையை மீறி எடுக்கப்பட்ட இந்தப் படங்கள் விக்கிரகங்களை முதன்மைப் படுத்தி எடுக்காது ஆலயத்தின் கட்டிடக் கலையை காட்டும் வண்ணமாக எடுக்கப் பட்டது. 
ஒரு வரலாற்றுப் பதிவாக இருக்கக் கருதி எடுக்கப்பட்ட இவை ஆலயத்தின் நிபந்தனைகளை மீறி இருந்தால் அதன் பொருட்டு என்னை மன்னிப்பீர்களாக







பரிவார தேவியாக அமர்ந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கும் சரஸ்வதி தேவி

பளிங்கு விக்கிரகம்

அனுமான் சிற்பம்
மூன்று வாசல்களைக் கொண்டிருக்கின்ற முன் பக்கத்தில் நடுவில் அமைந்திருக்கின்ற பிரதான வாசலுக்கு மேலே கோபுரம் அமைந்துள்ளது. வலது புறமும் இடது புறமும் அமைந்திருக்கின்ற வாசல்களை கீழே காணலாம்.

வலது புற வாயில்


இடது புற வாயில்

இனி கீழே வருவன முதலாவது சுற்றுப் பிரகாரமும் அதன் வலது பக்கச் சுவரிலே அமைந்திருக்கின்ற சிற்பங்களும்.











கருவறையின் நேர்பின்புறமாக ( உள்புற வெளி வீதியில் )அமைந்திருக்கும் பகுதியில் கணப்படும் சிற்பங்கள் இனி வருவன











இனி வருவன வலதுபுற உட்பிரகாரம். இதன் சுவர்களில் இன்னமும் சிலைகள் பதிக்கப் படவில்லை. திருப்பணி வேலைகளும் ஆலய நிர்மாண வேலைகளும் புணருத்தாரணப் பணிகளும் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருப்பதைக் காண முடிந்தது.














சனி பகவானுக்கு தனியாக ஓரிடம்

இனி வருவன இரண்டாவது வெளி வீதியும் அதிலிருந்து பார்க்கும் போது தெரிகிற உள்வீதியும் ஆலயக்கட்டமைப்பும்.



இடது பக்க வெளி வீதியில் இருந்து பார்க்கும் போது தெரியும் தோற்றம்



ஆலயத்தின் பின் பக்கக் கோபுரம்












இனி வருவது தல விருட்சம்.


                                         

             
                                         
                                                  
                                         
                                                 
                                    

இனி வருவன வெளியே அமைந்திருக்கும் திறந்த மண்டபமும் அதனோடு இணைந்தபடி அமைந்து இருக்கின்ற உணவு பரிமாறும் மண்டபமும் கார் நிறுத்துமிட பகுதியும் கூடவே அதன் தொடர்ச்சியாக அமைந்து:ள்ள சிரம பரிகார அறைகளும்
                              
























பெயர்ப் பலகையில் காணப்பட்டவை:



ஆலயத்தின் வெளிச் சூழல்





அரச மரத்தின் கீழ் புத்தர்








கால் கழுவும் இடம்


ஆலய வளவுக்குள்முன்புறமாக அமைந்திருக்கின்ற சிறு மண்டபத்தில் 7.7.2024 அன்று நடந்த ஒரு சிறு நிகழ்வு!






இனி வருவன கோயிலுக்கு வெளியே இருந்து பார்க்கும் போது தெரியும் தோற்றம்









படப்பிடிப்பு: யசோதா.பத்மநாதன்.
நாள்: 07.07.2024 - ஞாயிற்றுக் கிழமை - குளிர் காலம்; காலை நேரம்.

No comments:

Post a Comment