Thursday 2 March 2017

மயூரன். சுகுமாரன்


2005 ஏப்பிரல் 17ல் ‘பாலி 9’ என பின்னாளில் அறியப்பட்ட 9 அவுஸ்திரேலியர்கள் 4 மில்லியன் டொலர்கள் பெறுமதியான ஹெரோயின் போதைவஸ்தை இந்தோனேஷியாவில் இருந்து அவுஸ்திரேலியாவுக்குக் கடத்த முற்பட்டார்கள்  என்னும் பெயரில் ஆதாரத்தோடு இந்தோனேஷிய விருந்தினர் விடுதி ஒன்றில் கைது செய்யப்பட்டார்கள்.

கைது செய்யப்பட்ட அன்று தன் 24வது பிறந்ததினத்தை கொண்டிருந்த மயூரன் இலங்கைத் தமிழ் இனத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

29.ஏப்பிரல் 2015 அன்று - 10 வருடங்களின் பின் கருணைமனுக்கள், அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் இராஜதந்திர / உயர்மட்டக் கோரிக்கைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு இந்தோனேஷிய அதிபர் Joko Widodo தலைமையிலான அரசினால் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.

இடைப்பட்ட இப் 10 ஆண்டுகளில் மயூரன் சிறந்த ஓவியராக பரிமானம் பெற்றிருந்தார்.

Kerobokan சிறைச்சாலையில் இருந்து Nusa Kambangan தீவில் உள்ள Besi சிறைச்சாலைக்கு மரண நிறைவேற்றுக்காக மாற்றப்பட்ட பின்னான கடைசி 72 மணி நேரங்களில் அவரது மனநிலையைப் பிரதி பலிக்கும் ஓவியங்களை அவர் வரைந்திருந்தார்.

அவற்றோடு அவர் வரைந்த வேறு பல ஓவியங்களும் 2017 தைமாதம் Campbelltown Art Center இல்  Sydney Festival ( 7 - 29 jan.2017 ) இன் ஒரு பகுதியாக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

மரண தண்டனை 29.4.2015 அன்று நள்ளிரவு 12.25க்கு நிறைவேற்றப்பட்டது.



























புகைப்படங்கள் 8.2.2017 அன்று எடுக்கப்பட்டது.
எடுத்தவர்: யசோதா.ப.
இடம்: Campbelltown Arts Center.

No comments:

Post a Comment