Thursday 2 March 2017

Campbelltown Arts Centre

கம்பல்ரவுன் நகர சபையினால் பரிபாலிக்கப் படும் கம்பல்ரவுன் கலாநிலையம் சிட்னி நகரில் இருந்து தென்மேற்காக சுமார் 50 மைல் தொலைவில் அமைந்திருக்கிறது.

முகவரி:
1, 1 Art Gallery Road
Campbelltown NSW 2560



















பல்வேறு கலைநிகழ்வுகள் இடம்பெறத்தக்க நிகழ்விடங்களும் கலந்துரையாடல்கள் மற்றும் வேலைத்திட்டங்களைச் செய்வதற்கான இட வசதிகளும் தேநீர் சாலையும் அமைந்திருக்கும் ஓர் அமைதியான சூழலில் தேநீர் சாலையை ஒட்டி பின் புறமாக வெளியே யப்பானிய வாஸ்து சாஸ்திரப்படி அமைந்த தோட்டமும், மீன் மற்றும் அல்லிப்பூத் தடாகமும் மரச் சோலைகள் வழியேயான நடைபாதை ஓரங்களும் இளைப்பாறி சிற்றுண்டியோடு அளவளாவிச் செல்லத் தக்க மரத்தாலான கூடாரங்களும் அமைந்துள்ளன. கூடவே கல், உலோகங்களால் ஆன கலை வெளிப்பாடுகளும் ஆங்காங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கோடைகாலத்திலும் குளிர்மையாக இப்பகுதி காட்சி அளிக்கிறது.

படங்கள் : யசோதா.ப.
எடுத்த திகதி: 8.2.2017. 

No comments:

Post a Comment