இனி வருவன அவுஸ்திரேலிய சிட்னி மாநகரில் முதன் முதலாக தமிழ் பாடசாலை ஒன்று ஆரம்பிக்கப் பட்ட போது உருவாக்கப் பட்ட பாடத்திட்டம் ஒன்றின் சில அச்சடிக்கப் பட்ட பக்கங்கள். இவற்றை 03. 09.2023 அன்று Wentworthville Librery Hall இல் நடைபெற்ற வானொலிமாமா நா. மகேசன் அவர்களுடய அஞ்சலிக் கூட்டத்தின் போது உரையாற்றிய ஆசி. கந்தராஜா அவர்களிடம் இருந்து மூலப்பிரதி பெறப்பட்டு ஒளிப்படம் எடுத்து இங்கு பிரசுரிக்கப் படுகிறது.
இதனை வடிவமைத்துத், தமிழ் தட்டச்சு இயந்திரத்தின் வழியாக தட்டச்சு செய்து, முதன் முதலாக இதனை உருவாக்கிய முன்னோடி வானொலி மாமா நா. மகேசன் அவர்களாகும் என்று தொடக்கத்தில் இருந்து இன்று வரை தமிழ் மொழிப் புத்தக ஆக்கத் துறையில் பணியாற்றி வரும் ஆசி கந்தராஜா அவர்கள் தெரிவித்தார்.
இதன் மூலப்பிரதி ஆரம்ப காலத்தில் இருந்து தமிழ் பாடத்திட்ட ஆலோசனைக் குழுவில் இருந்து நூலாக்கங்களுக்கு உதவி வரும் ஆசி. கந்தராஜா அவர்களிடம் இருக்கிறது.
( மேலே உள்ள புத்தகங்களின் பக்கங்கள் மாறுபட்டிருக்கின்றன. இது முழுமையான தொகுப்பல்ல; உதாரணத்திற்கு மாத்திரமே அவை இங்கு கொடுக்கப்பட்டிருக்கின்றன என்பதனைக் கவனத்தில் கொள்க)
இனி வருவது அண்மையில் ஆங்கிலத்திலும் தமிழிலுமாக வெளிவந்திருக்கிற கொசுமாமா கொசுமாமி பற்றிய குழந்தைகளுக்கான கதைப் புத்தகம் ஆகும்.
இப்புத்தகம் திருமதி. சந்திரிக்கா. சுப்பிரமணியம் அவர்களால் வெளியீடு செய்யப்பட்டிருக்கிறது. 10.09.2023 அன்று Toongabbie Community Center ல்நடந்த எழுத்தாளர் விழாவின் போது பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த புத்தகத்தில் இருந்து சில பிரதிகள் இங்கு பிரசுரமாகின்றன.
இந்தக் கதை குழந்தைகளால் நடித்தும் காண்பிக்கப் பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.
தொகுப்பாசிரியர். சந்திரிக்கா. சுப்பிரமணியம் அவர்கள் |
No comments:
Post a Comment