Monday, 25 September 2023

சிட்னியின் வசந்தகால வாழ்வியல் காட்சி ஒன்று.































































































































பாடசாலை விடுமுறை விட்டு விட்ட படியினால் குறிப்பாகப் பிள்ளைகளுக்கென சில நடைமுறை விளையாட்டுகளுடன் கூடிய இயற்கையினைப் புரிந்து கொள்ளும்; இயற்கையோடு கூடிய வாழ்வியலை; எடுத்துக் காட்டும், சொல்லிக் கொடுக்கும் இலவசப் பயிற்சி பட்டறைகளும் அங்கு இருந்தன. 
மேலே காட்டப் பட்டுள்ள இடத்தில் அவை இயற்கையோடும் மனிதர்களோடும் சினேகபூர்வமான சொல்லிக் கொடுக்கப் படுகின்றன.






பூ விதைகள் மண்ணோடும் களிமண்ணோடும் கலந்து பிசைந்து உருண்டைகளாக உருட்டி நீங்கள் போகும் இடங்களில் எறிந்து விடுமாறு அல்லது வீட்டு தோட்டங்களில் அல்லது தொட்டிகளில் போட்டுவிடுமாறு செய்யவும் கொண்டுசெல்லவும் கொடுக்கிறார்கள். கூடவே அந்தப் பூக்கள் பற்றிய; இயற்கை பற்றிய அறிவுகளையும் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கிறார்கள்.

இந்தப் பதிவில் நீங்கள் காணும் சிவப்பு, மஞ்சள், ஊதா, மற்றும் இள வண்ணங்களோடு இருக்கும் பூ விதைகள் அவை. 

நாம் இந்தப் பூமியில் நடந்துகொண்ட நாளாந்த நடைமுறைகளால் குறைந்துவரும் தேனீக்களின் இனத்தைப் பெருக்கும்; பூமி மீது கருணை கொண்டவர்கள்; இவ்வாறாகத் தேனுள்ள பூக்களின் விதைகளை ஊரெங்கும் விதைக்கிறார்கள். குழந்தைகளின் சின்னக் கரங்களின் ஊடாக! 
அதிக பராமரிப்புத் தேவைப்படாத இப்பூ மரங்கள் நாளாந்த மழையிலும் வெய்யிலிலும் தம் பணிகளை ஆற்றும்.

குழந்தைகளுக்கு இயற்கை மீதான புரிதல் கூடும். எதிர்காலத்தில் அவர்களும் இயற்கையை நேசிக்கவும் பாதுகாக்கவும் உதவுவார்கள் என்பது ஒரு நம்பிக்கை.

குழந்தைகளின் மனதிலும்  பூமியிலும்  விழும் இவ் விதைகள் ஒரு உன்னத உலகை கொண்டுவருவதாக!



இன்னோர் இடத்தில்இயற்கை மலர்களினால் துணியில் வண்ணம் பதிக்கிறார்கள். இயற்கை மலர்களின் வண்ணங்களும் எம் கற்பனைக்குரிய தோற்றங்களிலும் வெளிப்படும் ஆக்கம் ஒரு masrerpirce அல்லவா?




இந்த மண்ணின் உண்மையான வரலாறும், பழங்குடி மக்களின்  வாழ்வியலும், அவர்கள் எவ்வாறு தம் மண்ணையும் உயிரினங்களையும் நேசித்து காப்பாற்றி வாழ்ந்தார்கள் என்பது பற்றிய - அவர்கள் உபயோகித்த பொருட்கள், உபகரணங்கள், உணவு வகைகளோடுடனான கலந்துரையாடல் இன்னொரு இடத்தில்நடக்கிறது.

இருந்த போதும் எல்லோரின் விருப்பத்துக்குரிய அம்சமாக அது இல்லாதிருந்த காரணத்தால் என்னால் அதிக நேரம் அங்கு செலவளிக்க முடியவில்லை. எனினும், மெல்போர்ன் மானிலத்தில் இருந்து எழுத்தாளர் விழாவுக்காக வருகை தந்திருந்த எழுத்தாளர் முருகபூபதி அவர்களை 17. 09. 2023 அன்று இங்கு அழைத்து வந்திருந்தேன். அப்போது எடுத்த சில ஒளிப்படங்களை அதன் முக்கியத்துவம் கருதி உங்களோடு அவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன்.



கோழி முட்டை போல இது இமு பறவையின் முட்டை.


குழந்தை படுத்துறங்கும் மரப்பட்டை


பொருட்களை இடிக்க, அரைக்க, குத்த, தூளாக்க, வெட்ட அவர்கள் உபயோகிக்கும் நாளாந்த கருவிகள்


வண்ணப் பொடி: ஓவியங்கள் தீட்டவும் உடலில் பூசிக் கொள்ளவும் இளகிய பாறைகள் மற்றும் மண்ணில் இருந்து பெறப்படுகிறது


வேட்டைக் கருவிகள்


மூலிகைகள் மற்றும் உணவுப் பொருள்கள்




கூடை பின்னல் கலை














பழங்குடி மக்கள் பற்றிய படங்கள் 17.09.2023 அன்று எடுக்கப்பட்டது. படப்பிடிப்பு: யசோதா.பத்மநாதன்


இந்தப் பூங்காவில் என்னென்ன பட்சிகள், பூச்சிகள், உயிரினங்கள் இருக்கிறது என்ற விளக்கம் இங்கு கொடுக்கப் படுகிறது. கூடவே மிகச் சிறு நீர் வாழ் உயிரிகள் எவ்வாறு இந்த பூமிக்கு தேவையாக இருக்கிறது என்பது பற்றிய விளக்கம் இங்கு காட்சியோடு விளக்கப் படுகிறது.





குழந்தைகள் இயற்கைப் பொருள்களில் இருந்து இயல்பாக நம் சுற்றாடலில் வாழும் உயிரினங்களைக் களிமண்ணிலும் இலைகுழைகள், மரப்பட்டைகள், பூக்கள், தண்டுகள் முதலானவற்றால் உருவங்களாகச் செய்கிறார்கள்.

 பெரியவர்கள் செய்து கொண்டிருப்பதைப் பார்க்கும் சிறுவர்கள் தாமும் அது போலவும் தம் விருப்பத்தின் பேரிலும் செய்யும் இத்தகைய விளயாட்டு அனுபவங்கள்  மற்றும் கைவினைப் பொருட்கள் அவர்களுக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஊட்டுகிறது. குழந்தைகள் மறைமுகமாக சக உயிரினங்களை நேசிக்கக் கற்றுக் கொள்கிறார்கள்.









இந்தச் சிறு தோட்டத்தின் வெளியே விரிந்து கிடக்கிறது ஒரு பெரும் பூங்கா. குழந்தைகள் விளையாடவும்; பெரியவர்கள் நடைப்பயிற்சி செய்யவும்; இருந்து, இளைப்பாறி, சுற்றத்தார் நண்பர்களோடு கூடி உண்டு மகிழக் கூடாரங்களும், ஆங்காங்கே உள்ளன. நீரோடைகளும், குடிநீர் வசதிகளும் கழிப்பறைகளும் மிகச் சுத்தமாகப் பராமரிக்கப் படுகிறன. சைக்கிள் ஓடத் தனியான பாதையும் நான்கு சக்கர வாகனங்கள் ஓடத் தனியான பாதையும் நடைப்பயிற்சி செய்பவர்களுக்குத் தனியான பாதையும் அருகருகாக ஆனால் தெளிவான அறிவுறுத்தல்களோடு உள்ளன.

நேற்றய தினம் நான் தோட்டத்தை விட்டு வெளிவந்த வேளையில் கான்சர் விழிப்புணர்வுக்காக ஒரு தொண்டர் அமைப்பு நடைப் பயணத்தை மெற்கொண்டிருந்தது. அதனையே மேலே உள்ள படத்தில் காண்கிறீர்கள்.

எல்லோரும் விதிமுறைப்படி அவற்றை மீறாத முறையில் நடந்து கொள்வது தான் மிக அழகான விடயம். ( 24 மணிநேர கண்காணிப்பு கமரா வழியாக ஒரு துறை இங்கு நடப்பவற்றைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறது.)
நேற்றய தினம் வெளி நடை பாதையில்...


பூந் தோட்டத்துக்கு சற்று வெளியே மரம் தந்து வைத்திருக்கிறது ஒரு பேரிருக்கை!


தகவல்களை அறிந்து கொள்வதற்கு அமைந்திருக்கிற கூடாரம் இது. தேநீர் கூடாரமும் ஐஸ்கிறீம் வானும் நின்றிருந்தது. கூடவே இசைக் கச்சேரியால் செவியை இலவசமாய் வந்து தழுவியது இன்னிசை. அவைகள் சேகரிக்கப் படவில்லை.





படப்பிடிப்பு: யசோதா.பத்மநாதன்.
திகதி: 24.09.2023 ஞாயிற்றுக் கிழமை.
இடம்: பரமற்ரா பார்க் -காலைவேளை.

மலர் கூட்டங்களை கீழுள்ள இணைப்புக்குச் சென்று மேலும் காணலாம்

No comments:

Post a Comment