Saturday 16 December 2017

வேலிகள், படலைகள், ஒழுங்கைகள் - 8 -


  ”கிடுகு வேலிக் கலாசாரம்” என ஈழத்தின் வடபகுதித் தமிழர்களின் வாழ்வியலைக் குறிப்பாகச் சொல்லுவது வழக்கம். காரணம் அவர்கள் தம் வளவுகளுக்கு கிடுகுவேலியினால் நேர்த்தியாக;  அச்சறுக்கையாக எல்லையினை வரையறுத்துக் கொள்ளுவதோடு ஒரு வித மூடிய கலாசாரமாக விளங்கும் அதன் பண்பையும் விளக்க இந்த சொற்பதம் புத்திஜீவிகளால் அதிகம் பாவிக்கப் படுகிறது.

அவர்களின் சிக்கனப் பண்பையும் இருக்கிற மூலதனைத்தை வைத்துக் கொண்டு அதில் தம் உச்ச பட்ச பயன்பாட்டைப் பெற்றுக் கொள்ளும் அவர் தம் பண்புக்கும் அது உதாரணமாகலாம். இருந்த போதும் தென்னங் கிடுகுகளால் மாத்திரமன்றி பனை ஓலை, பனை மட்டை, தகரம், சீமேந்து மதில்கள் என்பனவும் பரவலாகப் புழக்கத்தில் இருப்பன...

கீழே  வலிகாமம் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு சிறு சிற்றூரான வீமன்காமம் பகுதியிக் காணப்பட்ட சில வேலி வகைகளையும் படலைகளையும் ஒழுங்கைகளையும் கீழே வரும் ஒளிப்படங்களில் காணலாம்.

சிட்னி மாநகர் வீடுகளின் மதில்கள் வேலிகள் என்பன சற்றே வேறுபடுவன. எல்லைகள் இல்லாத வளவுகளும் அனேகம். அது அவர்களின் வாழ்வியலையும் அழகுணர்வையும் வேறுவிதமாக  உணர்த்துவன. தனி மனித உரிமைகளுக்கும் தனிப்பட்ட மனிதர்களின் அந்தரங்கத்துக்கும் பெரிதும் மதிப்புக் கொடுக்கும் பல்கலாசார நாடான இங்கு வேறொரு மனிதரின் தனிப்பட்ட அசையும் அசையாச் சொத்துகளை அவர்களின் அனுமதி இன்றி ஒளிப்படம் எடுப்பதும் பதிவேற்றுவதும் இந் நாட்டுச் சட்டங்களுக்கு இசைவானதல்ல என்ற காரணம் கருதி அவற்றின் சில உதாரணங்களையேனும் பதிவேற்ற முடியாதுள்ளது. 

இருந்த போதும் வருங்காலத்தில் என் நண்பர், உறவினர் வீடுகளுக்குச் செல்லும் போது அவர்கள் அனுமதியோடு அவற்றில் சிலவற்றையேனும் பதிவேற்றும்  சாத்தியங்கள் இருக்கின்றன. 

கீழே வருவன சில ஈழத்தின் வடபகுதியில் காணப்படும் சில வேலிவகைகள்.

படப்பிடிப்பு: யசோதா. பத்மநாதன்.
இடம்: வலிகாமம் வடக்கு, வீமன்காமம்.
படம் எடுத்த திகதி: 10.10.2017 மற்றும்  11.10.2017, 



கிடுகு வேலி; பனை மட்டைகளோடு



தகர வேலி

தகர வேலி; இன்னொரு வகை

வாழைச் சருகு வேலி

பனை வேலி

பனை வேலி; இன்னொரு வகை


கிடுகு வேலி; நெருங்கிய வடிவம்

போரினால் அழிந்த வீடொன்றுக்கான கம்பி வேலி



கிழுவை வேலி ( புதியது )

கிழுவை வேலி ( பழையது )


மதில்; நெருங்கிய தோற்றம்

படலை ( 08.10.2017 )

உப்பு நீர் கொண்ட வட்டுக் கோட்டை கொட்டைக்காடு பகுதியில் உள்ள ஒரு படலை

வரட்சியான பகுதி; உப்பு நீர் கொண்ட நிலம்; பிரயாசையால் விளைந்த செழிப்பிற்கு மத்தியில் படலை...

நவீன படலை ( 10.10.2017)

கல்லூரிப் படலை ( 11.10.2017 )

ஒழுங்கை

கீழே வரும் இரு ஒளிப்படங்களும் Sydeny யின் ventworthville பகுதியிலுள்ள ஒரு நீச்சல் தடாக நிலையம் ஒன்றின் வேலி,
 ஒரு மாதிரிக்காக...  என் புகைப்பட அல்பத்தில் இருந்து...
ஒளிப்படம் எடுத்த திகதி: 21.10.2015.




மேலும், என் தாய் வலைப்பதிவான அக்ஷ்யபாத்திரத்தில் 28.12.2013 அன்று பதிவிட்ட ‘படலைகளும் புகைக்கூடுகளும் - ஒரு நாடோடியின் கண்ணூடே’ என்ற தலைப்பில் அமைந்த ஆக்கம் ஒன்று நம் பாரம்பரியப் படலைகள் குறித்ததும் சிட்னியின் படலை அமைப்புகள் குறித்ததுமான வேறொரு கண்ணோட்டத்தை உங்களுக்குத் தருதல் கூடும். விரும்பியவர்கள் கீழ் காணும் லிங்கில் சென்று அதனைப் பார்வையிடலாம்.
http://akshayapaathram.blogspot.com.au/2013/12/blog-post_28.html

No comments:

Post a Comment