Saturday 16 December 2017

தீபங்களின் வகைகள் - 9 -

தீபங்கள் என்றதும் உடனே ஆலயங்களும் தெய்வீக சூழலும் வீட்டுச் சாமி அறையும் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியாது. அந்த அளவுக்கு தீபங்கள் ஒரு வித தெய்வீகத்தோடு தொடர்பு பட்டுள்ளன.

திருமூலரின் திருமந்திரம் ( 2816 ) விளக்கு பற்றி கீழ் வருமாறு கூறுகிறது

“ விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி
விளக்கினுக்குள்ளே விளக்கினைத் தூண்டி
விளக்கில் விளக்கை விளக்க வல்லார்க்கு
விளக்கு உடையான் கழல் மேவலும் ஆமே”

”உடல் என்ற விளக்கின் உள்ளே ஒளியாக மற்றொரு விளக்கு உண்டு. அதன் பெயர் ஆண்மா. உடலின் உள்ளே சென்று ஆண்ம ஒளியைத் தூண்டி ஆண்மாவின் மூலம் பரமாத்மாவை அறிய முயற்சிப்பவர்க்கு பரமாத்மாவின் சொரூப நிலையை அடையலாம்” என்பது அதன் பொருள்.

”விளக்குகளும் விளக்குகளின் வகைகளும்” என்ற பதிவை எழுதும் போது 

 https://ozthamil.blogspot.com.au/2017/12/blog-post_8.html

’ஆத்ம விளக்கு’என்ற ஒன்றை குறிப்பிட்டு அதனை ஒளிப்படம் எடுக்க முடியாமல் போனது பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். நேற்றய தினம் (15.12.2017) ஓர்  அலுவலாக சிட்னியின் பெண்டில்கில் என்ற பகுதியில் உள்ள ஸ்ரீ கணேஷ் சிலெக்‌ஷன் என்ற கடைக்குப் போன போது அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஆத்ம விளக்கு ஒன்று என் கருத்தைக் கவர்ந்தது.

ஆத்ம விளக்கு என்பது நடுவிலே சுடர் விடுவது. ஒரு சுடர் மாத்திரமே காணப்படுவதாக வடிவமைக்கப் படுவது.

இன்று சனிக்கிழமை 16.12.2017 அக் கடைக்கு மீண்டும் சென்று அவ் விளக்கு பற்றிக் கேட்ட போது அங்கு நின்ற தமிழ் இளைஞன் தன் கடையில்  இருக்கும் அத்தனை தீபங்களையும் பொறுமையோடு எடுத்துக் காட்டியதோடு மாத்திரமல்லாது அவை எல்லாவற்றையும் மிக சிரத்தையோடு ஒளிப்படங்களும் எடுத்துத் தந்தார்.

கீழ் வரும் அத்தனை ஒளிப்படங்களும்  16.12.2017 அன்று இ. குமரன் என்பவரால் ஸ்ரீ கணேஷ் சிலெக்‌ஷன் என்ற கடையில் அவர்களின் அனுமதியோடு எடுக்கப்பட்டது.

குத்து விளக்கு

ஆத்மவிளக்கு

ஆத்ம விளக்கு; இன்னொரு வகை

ஆத்ம விளக்கு; கைபிடியோடும் தாங்கியோடுமாக...

ஆத்ம விளக்கு; மூடியோடு

ஆத்ம விளக்கு; இன்னொரு கோணம்

இத்தகைய ஆத்ம விளக்குகள் நடுவிலே இருக்கும் புரியைக் களற்றி அதன் நடுத் துவாரத்தினூடாக திரியை செலுத்தி மீண்டும் புரியைப் பூட்டி உரிய எண்ணையை விட்டு சுடரை ஏற்றுவதன் மூலம் முத்துப் போன்ற சுடரை நடுவிலே காண இயலும்.

சர விளக்கு

சர விளக்கு; இன்னொரு தோற்றம்
ஐந்து முக தீபம்
சுட்டி விளக்கின் சாயலில்...
அதன் பக்கவாட்டுத் தோற்றம்
பீடத்தோடு கூடிய ஆத்ம விளக்கு
ஆத்ம விளக்கு; அதன் நெருங்கிய தோற்றம்
பகுதிகள் தனித்தனியாக.. ஆத்ம விளக்கு.
பீடத்தோடு சுட்டி விளக்கு
இன்னொரு பக்கத் தோற்றம். சுட்டி விளக்கு
சங்கு வடிவில் ஆத்ம விளக்கு; பக்கவாட்டுத் தோற்றம்
சங்கு வடிவில் ஆத்ம விளக்கு; நெருங்கிய தோற்றம்
சங்கு வடிவில் ஆத்ம விளக்கு; முன்புறத்தோற்றம்.
ஆத்ம விளக்கு; இன்னொரு வகை.
ஆத்ம விளக்கு; வேறொரு வகை.
கேரளப் பாணி குத்து விளக்கு
அலங்காரச் சுட்டி விளக்கு
கழிமண் குத்து விளக்கு (சிறியது )
சுட்டி விளக்கு
சுட்டி விளக்கு; இரு அளவுகளில்
சுட்டி விளக்கு; அடிப்புறத் தோற்றம்
ஆமை வடிவ பீடத்தின் மேலே ஒற்றைத் தீப விளக்கு.
மேற்படத்தின் நெருங்கிய வடிவம்
காமாட்சி விளக்கு
காமாட்சி விளக்கு; இன்னொரு தோற்றம்.
காமாட்சி விளக்கு; பின்புறத்தோற்றம்
ஆலய தீபம்
ஆலய தீபம்; இன்னொரு தோற்றம்
ஆலய தீபம்; இன்னொரு வகை.
ஆலய தீபம்; வேறொரு வகை.
பாவை விளக்கு
விளக்குகள் / தீபங்கள் எண்ணற்ற வகையில், பல்வேறு அளவுகள் வடிவங்களில் இருப்பதைப் பலரும் அறிவர். இங்கு பிரசுரிக்கப்பட்டிருக்கிற ஒளிப்படங்கள் யாவும் இப்போது புழக்கத்தில் இருப்பவை. இவைகள் எல்லாம் ஏன் இங்கு பிரசுரிக்கப்படுகின்றனவெனில் தீபங்கள் என்றைக்கும் நிலையானவையாக இருக்கும் என்கின்ற போதும் அதன் வடிவங்கள் காலத்துக்குக் காலம் மாறிக் கொண்டே போகும் இயல்புள்ளவை.

அதிலும் குறிப்பாக வெளி நாடுகளில் இன்று கடைகளில் விற்பனை செய்து முடிந்து விடும் அதே பொருட்களை இங்கு பிறகு காண்பது அல்லது வாங்குவது என்பது மிகக் கடினம். மாற்றங்கள் அத்தனை வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அதே நேரம் இங்கு பகிரப்பட்டிருக்கும் ஒளிப்படங்கள் பூரணமானவையும் அல்ல. பாவை விளக்குகளை மட்டும் எடுத்துக் கொண்டாலே அவற்றில் மட்டும் எத்தனை வகைகள்.... அவைகளை எல்லாம் பதிவதென்பது மிகக் கடினம்.

இருந்த போதும், கீழே வரும் இந்தப் பாவை விளக்கு சிங்கள பாணியில் அமைந்திருப்பதை ஓர் உதாரணத்துக்கு எடுத்துக் காட்டலாம். இது, கொழும்பிலுள்ள அரச கலைப்பொருள் காட்சிச் சாலையும் விற்பனை அரங்குமான ’லக்ஸலா’ வில் 5.10.2017 அன்று ஒளிப்படம் எடுக்கப் பட்டது.

சிங்கள பாணி பாவை விளக்கு
( 22.12.17: சிறுகுறிப்பு:
சிங்கள மக்களினது கலைப்பொருள்கள் பற்றிய பதிவொன்று என் தாய் வலைப்பதிவான அக்ஷ்யபாத்திரத்தில் இன்று இடப்பட்டிருக்கிறது. காண விரும்பின் கீழே வரும் லிங்கில் சென்று காணலாம்.)


http://akshayapaathram.blogspot.com.au/2017/12/blog-post_22.html

லக்ஸலா...


அத்தோடு மட்டுமல்லாது தெய்வீக காரியங்கள் மற்றும் சுப அசுப காரியங்களுக்கு ஒளியேற்ற பயன் படும் தீப வகைகள் பற்றிய விபரங்கள் எதுவும் இங்கு குறிக்கப் படவில்லை. அத்தோடு கிறீஸ்தவ; மற்றும் ஏனைய சமய காரியங்களில் எவ்வாறு தீபங்கள் பயன் படுகின்றன என்பது குறித்தும்; வரலாற்றில் தீபங்கள் காலத்துக்குக் காலம் எவ்வாறு பயன் படுத்தப்பட்டு வந்திருக்கின்றன, மற்றும் பல்வேறு நாடுகளிலும் அதன் பயன் பாட்டு அம்சங்கள் எவ் எவ் வகையில் வேறு பட்டோ மாறு பட்டோ இருக்கின்றன என்பது குறித்தெல்லாம் இங்கு ஆராயப் பட வில்லை.

அவைகளை எல்லாம் எழுத்தப் புகின் இது சிறு நூலெனவே விரியும் தன்மைக்கஞ்சி இத்தோடு இதனை நிறைவு செய்து கொள்ளுகிறேன்.

மிக்க நன்றி: இ.குமரன், மற்றும் ஸ்ரீ கணேஷ் சிலெக்‌ஷன்.
ஒளிப்படங்கள்; இ. குமரன். 16.12.2017.



இ.குமரன்
ஒளிப்படங்கள் எடுத்த கடை






No comments:

Post a Comment